செப்டம்பர் 04, 2012

குறளின் குரல் - 145


4th Sep, 2012

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
                  (குறள் 136:  ஒழுக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
Ozhukkaththin olgAr uravOr izhukkaththin
Edham padupAk kaRindhu

Ozhukkaththin – Righetous path, conduct
olgAr  - diminish,  become less,  not being  strongly committed
uravOr  - strong and firm minded
izhukkaththin – veering from the righteous conduct
Edham – ill, misery
padupAkk(u) – brought forth
aRindhu - knowing

Persons resolute in their minds will not veer from the righteous path and conduct; because they understand the ill, misery and blame that can come out of that. There are two words in this verse which are specifically used to emphasize, an otherwise ordinary sounding and already understood principle.

“uravOr” indicates a persons of strong will and firm mind and the “aRindhu”  is linked to “uravOr” as only they are capable of researching and finding what is good or bad. Both are required to not veer away from righteous conduct. A recent poet would say, “Mind is like a monkey, when allowed to dance to any tune or allowed to escape, it can lead us to be sinners”.  

Earlier in a chapter, vaLLuvar has said, “manaththukkaN mAsilan Adhal anaiththaRan” implying to be virtuous, one must be devoid of dirt in the mind. It implies, when you’re strong minded, your mind will be in the righteous conduct. Hence, the usage of the word “uravOr” in this verse!

“Strong anf firm minded will not veer in righteous path
  As they understand the ill and blame as the aftermath”

ஒழுக்கத்தின் - ஒழுக்க நெறி வழிகளிலுன், நடத்தைகளிலுமிருந்து
ஒல்கார் – வழுவி, விலகிச் செல்லமாட்டார்
உரவோர் – மன உறுதியும், திண்மையும் கொண்டவர்கள்
இழுக்கத்தின் – அப்படி விலகிச் செல்வதால் வரும் இழிமை, பழி இவற்றின்
ஏதம் - குற்றத்தினால்
படுபாக்(கு) – வரும் துன்பமிக்க விளைவுகளை
அறிந்து – நன்றாக ஆய்ந்தறிந்து.

மன வலிமையும் உறுதியும் கொண்டார், ஒழுக்கத்தின் வழிகளினின்று திரியார், விலகமாட்டார்; ஏனெனில், அவர்கள் விலகிச்செல்வதால் வரும் இழிமை, பழி இவற்றினால் விளையும் குற்றங்களின் துன்பங்களை நன்றாக ஆராய்ந்து அறிந்ததினால்.

ஒழுக்கத்தின்று விலகாதிருத்தலுக்கு மன உறுதி, வலிமை இவை தேவை என்பதையும், அவையிருப்பதால், ஆய்ந்தறியும் அறிவும் இருப்பதையும் சொல்லுகிறார்.  “மனம் ஒரு குரங்கு, அதை ஆட விட்டால், தப்பி ஓடவிட்டால், பாவத்தில் தள்ளிவிடும்” என்று அண்மையில் வாழ்ந்த ஒரு கவிஞர் சொல்லியிருப்பார். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்” என்று வள்ளுவரே கூட அறன் வலியுறுத்தலில் சொல்லியிருப்பதை முன்னரே கண்டிருக்கிறோம்.  “உரவோர்” என்ற சொல்லின் பயன்பாடு அதன்காரணம் பற்றியே என்றறியலாம். உரவோருக்கு, மனத்தின்கண் மாசு இல்லை, அதனால் அவர்கள் ஒழுக்கநெறி தவறுதலுமில்லை.

இன்றெனது குறள்:
ஒழுக்கம் பிழைக்கின் இழுக்கென் றறிந்து
வழுக்கார் உறுதி உளார்

Ozhukkam pizhaikkin izhukken RaRindhu
vazhukkAr uRudhi uLAr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...