செப்டம்பர் 01, 2012

குறளின் குரல் - 142


1st  Sep, 2012

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
                   (குறள் 133:  ஒழுக்கமுடைமை அதிகாரம்)

Transliteration:
Ozukkam uDaimai kuDimai izukkam
Izhinda piRappAi viDum

Ozukkam – righteous conduct, (prescribed codes of society)
uDaimai -  Being a person of such conduct
kuDimai – is indicative of being born in good lineage
izukkam – Slipping from such righteous conduct
Izhinda – will render them as inferior and lowly
piRappAi viDum – lives on this earth.

This verse on the surface seems to be endorsing the caste segregation.  More than about the “caste” in a society,  this verse talks about the inherited lineage and left behind lineage based on the conduct during a person’s life.  

Being a person of righteous, virtuous conduct as prescribed for the overall good and harmony of the society is indicative of the glorious lineage of a person. Slipping from such, even unknowingly will render a person as a inferior member of the society and will be ostracized by the society for such behavior.

Another subtle point, lineage though inherited based on a person’s ancestory, only the life of that person determines it place in a society as a glorious one or otheriwise. In other chapter vaLLuvar says that good deeds leave goodness for posterity and even being born in such great lineage is a boon granted by the virtuous conduct of the ancestors.

This verse implies that such good standing sustains only for the people of good, righteous, virtuous conduct. A person from no or low lineage may become great and glorious by righteous conduct. Likewise, a person, though born in good lineage, may be placed as a lowly being if the conduct is not righteous.

Tholkappiyam, the authoritative grammar work of Tamil must have been an inspiration for vaLLUvar to write this verse. It says, “kuDimaiyAvadhu kuDipiRappirkku EtRa ozhukkam”.   vaLLuvar’s thought is more elevated than Auvvayar in this, who says in her work “mUdhurai” – “kulaththaLavE AgumAm guNam”. vaLLuvar clearly subscribes to a better thought – “guNaththaLavE AgumAm kulam”.

“Having good conduct places in good lineage
  Deviant are outcast that lose that leverage”

தமிழிலே:
ஒழுக்கம் – நன்னடத்தையோடு
உடைமை - கூடிய வாழ்வு
குடிமை – நல்ல குலத்திலே இருத்தும்
இழுக்கம் – அவ்வாறு நன்னடத்தை இன்றி தவறி நடப்பது
இழிந்த – தன்னை இழிந்த குலத்தில்
பிறப்பாய் விடும் – அடையாளப்படுத்திக்கொள்ளு பிறப்பெனவாகிவிடும்

இக்குறள் மேலோட்டமாகப் பார்த்தால் “குலம், சாதி” இவற்றை வழிமொழிகிறது என்று எண்ணவைக்கும். இக்குறள் சொல்வதெல்லாம், ஒருவர் பிறக்கும் போது வந்த குலத்தையும், அவர் தாம் வாழுங்காலத்திலும் வருங்காலத்துக்கும் விட்டுச் செல்லும் குலம் என்ன என்பதைப்பற்றியும் கூறுவதுதான்.

ஒருவருடைய குலம் எனப்படுவது, பிறப்பினால் வருவதைவிட, அவருடைய நற்பண்புகளாலும், நன்னடத்தைகளாலும் அறியப்படுவது.  முந்தையரின் நல்வினை வாழ்வு, நற்குடிப்பிறப்பினைத் தந்தாலும், ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் அப்பிறப்பின் பெருமையை காப்பாற்றி, தம்முடைய வருங்கால சந்ததிக்கும் விட்டுச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

நற்குலத்தார் என்றறியப்பட நன்னடத்தையராக இருத்தல் வேண்டும். அது தவறும்போது, நற்குடி பிறந்திருந்தாலும், தானும் கீழ் குலத்துக்கு தன்னயே தள்ளிக்கொள்ளும் இழுக்கினை பெற்று, தன் சந்ததியினருக்கும் அவ்விழுக்கினையே குலச் சொத்தாக விட்டு செல்ல நேரிடும்.  அதேபோல சமுதாயத்தில் கீழ்குடியென்று அறியப்பட்ட குலத்தில் பிறந்தவரும், தம்முடைய சிறந்த ஒழுக்கத்தினால் தன்னையும் நற்குலத்தராக உயர்த்திக்கொண்டு, தலைமுறைகளும் அப்பயனைத் தந்துச்செல்வர்.

தொல்காப்பியரே, வள்ளுவரின் இக்குறளுக்கு வழிகாட்டி என்பதை, “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்), என்பதால் அறியலாம். ஔவையார் மூதுரையில், “குலத்தளவேயாகுமாம் குணம்” என்பார்.  ஆனால் வள்ளுவரோ அதற்கு எதிர்மாறாக “குணத்தளவேயாம் குணம்” என்ற கருத்தைச் சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

இன்றெனது குறள்:
நற்குடியில் நன்றொழுகி வாழாதார் – தம்குடியில்
நிற்காத தாழ்பிறவி யர்
naRkuDiyil nanRozhugi vAzhAdhAr – thamkuDiyil
niRkAdha thAzh piraviyar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...