செப்டம்பர் 02, 2012

குறளின் குரல் - 143


2nd   Sep, 2012

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
                   (குறள் 134:  ஒழுக்கமுடைமை அதிகாரம்)

Transliteration:
maRappinum Oththuk koLalAgum pArppAn
piRappozhukkam kundRak keDum

maRappinum -  Even if forgets (who – the person of high knowledge, Brahmin)
Oththuk – the higher knowledge of Vedas
koLalAgum – Can learn again and become knowledgeable
pArppAn – The knowledgeable to Brahmin
piRappozhukkam  - what discipline ordained for such birth ( to learn and live by and teach others)
kundRak – if diminishes in that
keDum – will be placed as a lowly life

This verse, citing Brahmins as an example, states a principle. When somebody forgets what is learnt, it can be regained by relearning. But, if the person is deviant or diminished in the practice of discipline ordained for the person’s birth, the person will be placed among lowly lives.

When a person in the state of giving justice, is unjust the person must be given the highest form of punishment, one for failing the trust placed and for the unjust act too. Brahmins are placed as a scale and defining standard of a societal virtue. If they go bad in that, they are not only punished but placed low in the social stratum.

A Brahmin may relearn knowledge forgotten, but conduct
Diminished, he can only be placed among the condemned

தமிழிலே:
மறப்பினும் – பயிற்சியின்றி மறந்து போனாலும்
ஓத்துக் – வேதமெனப்படும் உயரறிவை (கற்று அறியமுடியும் என்பதால் எல்லோருக்கும் பொருந்தும்)
கொளலாகும் – மீண்டும் ஓதி பெற்றுக்கொள்ளமுடியும்
பார்ப்பான் – வேத ஒழுக்கத்தில் நிரம்பியிருக்க வேண்டிய அந்தணருக்கு, சான்றோருக்கு
பிறப்பொழுக்கங்  - அவரது பிறப்பின் நெறியான கற்று ஒழுகலும், கற்றுக்கொடுத்தலுமாகிய ஒழுக்கத்தில்
குன்றக்  - அவர்கள் வழுவினால்
கெடும் – அவர்கள் இழிகுலத்தராகிக் கெடுவர்.

இக்குறள் அந்தணரை எடுத்துக்காட்டாக சொல்லி ஒரு கருத்தைச் சொல்கிறது. ஒருவர் கற்றுக்கொண்ட கல்வியை மறந்தாலும் அவர்கள் மீண்டும் கற்றுக்கொண்டுவிடலாம் ஆனால் அவருக்கென்று விதிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மறந்தால், அவருடைய நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்குப்போவர்.  இதற்காக பார்ப்பனரைக் குறித்து சொல்லப்பட்டது.

இது நீதி வழங்கும் நிலையிலுள்ள நீதிமான்களே தவறிழைத்தால் அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் என்பதைப்போல.  பார்பனர்கள் சமூகத்தின் ஒழுக்க நெறிக்கு ஓரு நெறிவரம்பாக, அளவு வரையாக இருக்கவேண்டும். அவர்கள் அதிலிருந்து தவறினால், அவர்களுக்குக் கடுமையான தண்டனையும், தாழ்ந்தவர்களுள் ஒருவராக கருதப்படும் இழிமையும் உண்டாகும்

இன்னா நாற்பது “இன்னா, ஓத்தில்லா பார்ப்பான் உரை” என்கிறது. சிலப்பதிகாரமும் “ வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதி” என்கிறது.

இன்றெனது குறள்:
மறைமறக்கில் மீண்டுமோதிப் பெற்றிடலாம் சான்றோர்
நிறைவழியும் குன்றுமொழுங் கால்

maRai maRakkil mInDumOdhip petRidalAm sAndROr
niRaivazhiyum kundRumozhungAl


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...