செப்டம்பர் 30, 2012

குறளின் குரல் - 171


30th  September, 2012

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
                  (குறள் 162: அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
vizhuppERRin ahdhopadhu illaiyAr mATTum
azhukkARRin anmai perin

vizhup (pamAna) – Among the best
pERRin – merits one can get
ahdh(u) opadhu –compared to that*    - * being devoid of envy on others.
illai – there is none
yAr mATTum – With everyone
azhukkARRin  - being envious
anmai – if be devoid
perin – of envy.

The best of merits anyone can get is being devoid of jealousy – envious of others wealth, progress and prosperity. None other merit compares to that. The word “yAr mATTum” indicates especially not being jealous of even the enemies, which requires a big heart, bigger thought.  Envy is the eye of evil and starts the comparison between self and others and can lead us into thinking of ways of destroying or obstructing others growth, more than concentrating on personal growth.

We have a saying, “Envious persons will starve for five days, if others prosper” (asalAn vAzhndhAl anju nAL paTTini kidappAn). Almost everyone has an iota of envy sticking to them for something or others. Others heights make most people feel small in demeanor as well as in thoughts and actions. Almost ninety nine percent of people of the world fall in to this category. Since it becomes a prime and important reason for human erroneous behaviours, being devoid of envy is the greatest of boons or merits. Who else is better in life other than the ones who take true happiness and pride in others prosperity?

“Nothing compares among the best of merits  
  Other than not being envious anyone’s heights”

தமிழிலே:
விழுப்(பமான) – சீறப்பான, சீரிய
பேற்றின் – பேறுகளுள் – நமக்கு வாய்க்கக்கூடிய சிறந்த நலன்களுள்
அஃதொப்பது – அதற்கு* ஒப்பான ஒன்றாக  - * பொறாமை நீங்கப்பெற்றிருப்பது
இல்லை – (எதுவும்) இல்லை, கூறமுடியாது
யார் மாட்டும் - யாரிடத்திலும்
அழுக்காற்றின் – பொறாமை
அன்மை – நீங்கி இருக்கப்
பெறின் - பெற்றால்

ஒருவர் தாம் பெறக்கூடிய சிறந்த பேறுகளில், சிறந்த நலன்களுள், எவரிடத்தும் பொறாமைக் கொள்ளாத இயல்பே மிகவும் சிறந்ததாகும், வேறு எந்த பேற்றையும் அதற்கு ஒப்பாகக் கூறமுடியாது, என்பதே இக்குறளின் கருத்து. யார்மாட்டும் என்பதில் நண்பர்கள், மற்றும் சுற்றம் மட்டுமில்லாது, பகைமை பாராட்டுபவர்களிடமும் என்பதைக் குறிக்கவேயாம்.  ஆமை நுழைந்த வீடும், பொறாமை நுழைந்த மனமும் உருப்படுவதில்லை.

நம்முடைய நாட்டிலே ஒரு சொல்வழக்கு இருக்கிறது. “அசலான் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்” என்று. மனிதர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு எள்ளத்தனையாவது பொறாமை என்கிற பொல்லாங்கு ஒட்டிக்கொண்டிருக்கும். பிறருடைய வளங்களைக் கண்டு, வளர்ச்சியைக்கண்டு, அவர்களின் மக்கட் செல்வங்கள் செல்லும் உயரங்களைக்கண்டு மகிழ்ச்சியைவிட பொறாமையே கொள்ளுவர் தொண்ணுற்று ஒன்பது விழுக்காடு மக்கள். இவ்வழுக்காறு, மனிதர் செய்யும் தவறுகளுக்கு ஒரு முக்கிய முதல் காரணியாக இருப்பதாலேயே, அஃதில்லாதிருத்தலை ஒரு சிறந்த பேறாக வள்ளுவர் குறிக்கிறார். மற்றவர் வாழ்விலே மகிழ்வு கொள்ளும் மாண்பு யாருக்கிருக்கிறதோ அவர்களை விட சிறந்த நலன்களை உடையவர் யார்?

இன்றெனது குறள்:
பேற்றில் பெரும்பேறு வேறில்லை – யாரிடத்தும்
ஆற்றவழுக் காறின்றி டின்

pEril peRum pEru vErillai- yAriDaththum
ARRavazhuk kARinRi din

செப்டம்பர் 29, 2012

குறளின் குரல் - 170


அதிகாரம் 17: அழுக்காறாமை (Devoid of jealousy/Not envying)

[This chapter is about not being jealous or envious of others for their wealth, place in the society and well being. Keeping the mind dirty (azhukku) with self-fed ill feelings for others is not good for healthy life. Such feelings are born out of envy and jealousy. vaLLuvar addresses the root cause of envy and advises not to let the dirt of envy enter the mind, through out this chapter]

29th  September, 2012
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
                  (குறள் 161:அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
ozukkARAk koLga oruvan than nenjaththu
azhukkAru ilAdha iyalbu

ozukkARAk  - ordained discipline
koLga  - must practice
oruvan - a person
than  nenjaththu – in his heart have
azhukkAru  - dirt that casues envy
ilAdha – not (having)
iyalbu - manner

Everyone must be devoid of dirty of jealousy in their mind and avoid being envious at others properity. As emphasized already in a different verse, being devoid of dirt in the mind is the primary virtue one should have. “manaththukkaN mAsilan Adhal anaithu aRan”. 

thirikaDugam is part of later Sangam anthology. The poet nallaththanAr says, among the three types of person, that will have lasting fame, is a person devoid of jealousy towards others, that are wealthy and living well. “endRum azhukkARu igandhAnum, - immoovar ninRA pugazh uDaiyAr”.  AchArakkOvai, says “envy” is one of the four bad elements not even to be entertained as a thought.

But, the feeling of jealousy in the context of love has been justified and used beautifully by many poets. Kamban, talks about a peacock running away like an enemy, being jealous of sItha’s gait. There are many poems where love has been the reason for jealousy between a man and his love.

TholkAppiyam, says, the people with jealousy will not even think of taking up the job of a teacher.

“Keeping mind devoid of the dirt of jealousy
  Must be the innate virtue of a persons legacy”

தமிழிலே:
ஒழுக்காறாக் – விதிக்கப்பட்ட ஒழுக்க நெறியாக
கொள்க - கொள்ளவேண்டும்
ஒருவன்- ஒரு மனிதன்
தன் நெஞ்சத்து – தன்னுடைய மனத்துக்கண்
அழுக்காறு – அழுக்காக இருக்கக்கூடிய பொறாமை
இலாத - இல்லாத
இயல்பு – குணத்தை தன்னுடைய சுயநிலைப்பாடாக

ஒவ்வொருவரும் தங்களிடம் மனமாசு இல்லாமல், பிறர்பால் பொறாமை கொள்ளாதிருப்பதை தங்கள் இயல்பாகக் கொள்ளவேண்டும். ஏற்கனவே இன்னொரு குறளிலே, “மனத்துக்கண் மாசிலன் ஆதன் அனைத்தறன் ஆகுல நீர பிற” என்று மனத்தின்கண் மாசு ஏற்படாமல் இருக்கவேண்டியதை வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர்.   திரிகடுகத்தின் ஆசிரியர், அழியாப்புகழைப் படைப்பவர்களுள், பகைமை உண்டான காலத்தும் பிறர் வளமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர்களையும் சொல்லுவார்.

என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர்நின்ற புகழ் உடையார்”.  ஆசாரக்கோவை, “பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்” என்று சிந்திக்கக்கூடாத நான்கினுள் ஒன்றாக அழுக்காறைக் கூறுகிறது.

ஆனால் அழுக்காறு என்பதை ஒரு கவிதை நயமாக எடுத்து ஆண்ட புலவர்களும் உண்டு.  சீதையைக்கண்டு மயில் பகை உணர்வு அடைந்ததை கி.வா.ஜ அவர்கள் , கம்பரின் பம்பைபடலப் பாடலை எடுத்துக்காட்டுகிறார். “ஓடா நின்ற களிமயிலே! சாயற்கு ஒதுங்கி உள்ளழிந்து கூடா தாரின் திரிகின்ற   நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?”  முன்பெல்லாம் சீதையைக் கண்டால் மயில் முன்னே நிற்காமல் ஓடும்; அவளுடைய சாயலைக்கண்டு, ' இந்தச்சாயல் நமக்கு இல்லையே!' என்று அழுக்காறு அடைந்து ஒதுங்கி மனம் வெதும்பிப் பகைவரைப் போலே திரியும்”

தொல்காப்பியம் போலி ஆசிரியர்களுக்கு உண்டான குணக் குறைகளைக் கூறும்போது, அழுக்காறு கொண்டவர்கள் ஆசிரியராகும் சிந்தனை கூட இல்லாதவர்கள் என்கிறது.

இன்றெனது குறள்:
மனதில் பொறாமை உறாமை பெறுதல்
தனதொழுக்காய் கொள்ளல் நலம்

Manadhil poRAmai uRAmai peRudhal
thanadhozhukkAy koLLal nalam

செப்டம்பர் 28, 2012

குறளின் குரல் - 169


28th  September, 2012

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
      (குறள் 160: பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
uNNadhu nORppAr periyar piRarsollum
innAchchol nORppArin pin

uNNadhu – Fasting (without eating food)
nORppAr –  those who practice austere discipline
periyar  - they are truly great beings, but*
piRarsollum – words spoken by others
innAchchol  -  that are caustic  and  intend harm
nORppArin – those that tolerate such words
pin -  *only after them (their greatness is placed only next to greatness of persons of forbearance)
  
Fasting and denying the sustenance for the body, with a lot of self control, those that are in penance for accomplishing a higher goal are considerd, great people. They are known for their resolve. But even they are placed only after the people that show utmost patience and tolerance towards others that use caustic and harm-filled words.

There is a subtle point implied here by vaLLuvar.  Even those who control their mouth for inward function of intake, sometimes, can not control for the outward function of “ill-speak”. As said earlier, even people of austere practices sometimes, lose their temper and spit out harmful words towards others. As vaLLuvar would say in a different verse, emphasizing the same virtue of saving the tongue, “yAkAvArAyinum nA kAkka – kAvAkkAl sOgAppar sollizhukkup pattu”, it is extremely important to have the control of tongue for external function of speaking, more than the internal function of tasting the food.

From the pervious verse and this verse, it is emphasized that more than being an ascetic or having tough practice of not having food etc., it is important to have forbearance. Previously quoted ‘aRaneRi chAram” of munaippAdiyAr combines both the verses in general sense and says it in an easily understood poem “ eLLip piRaruraikkum innAchchol than nenjil – koLLi vaiththArp pOl koDidheninum – meLLa – aRivennum nIrAl aviththozhuga lARRin – piRitheninum vEnDA thavam

“People of fasting austerity are considered great- but only
 After the people that bear insolent words spoken unkindly”

தமிழிலே:
உண்ணாது – உயிர் வாழ் தேவையான உணவை உட்கொள்ளாது,
நோற்பார் – உடலை வருத்தி, மனக்கட்டுப்பாடுடன் கடுமையான தவமியற்றுபவர்
பெரியர் – உயர்ந்தவர்களாகக் (புலனடக்கம் கருதி) பெரியவர்களாகக் கருதப்படுபவர், ஆனால்*
பிறர்சொல்லும் – மற்றவர்கள் சொல்லும்
இன்னாச்சொல் – கடுமையான துன்பம் விளைவிக்கும் சொற்களை
நோற்பாரின் - பொறுத்துக்கொள்வாருக்குப்
பின் – *பின்னரே (பின்னரே அவர்களது உயர்வு வைக்கப்படும்)

உண்ணா நோன்பிருந்து, உடலை வருத்தி ஒரு பயன் குறித்து மனக்கட்டுப்பாட்டுடன் தவமியற்றுபவர்கள் அவர்களது புலனடக்கத்துக்காகப் பெரியராகக் கருதப்படுவர்.  ஆனால் அவர்களும் கூட, கடுமையான சொற்களைச் சொல்பவர்களிடமும் பொறுமையோடு இருப்பவர்களுக்குப் பின்னரே உயர்வாக வைக்கப்படுவர்.  வாயென்னும் புலனை உள்முகமாக கட்டுப்படுத்திவிட்டு, ஆனால் வெளிமுகமாகப் பேசும் பேச்சிலே அவர்களது பொறுமையின்மையால் கட்டுப்பாடு இல்லாதவர்களும் உண்டு.   

சென்ற குறளாலும், இக்குறளாலும் ஏற்கனவே அறியப்பட்ட, அரியசெயல்களாகிய துறவு, மற்றி உண்ணா நோன்பு போன்ற பழகுதற்கு கடினமான அறநலன்களை விட பொறுமையே உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறது.

மேற்கண்ட இரு குறள்களின் மொத்தப் பொதுக்கருத்தாக, அறநெறிச்சாரப் பாடலில் முனைப்பாடியார் கூறுவதைப் பார்ப்போம்.  எளிய, இலகுவான தமிழிலே, படிக்கும்போதே பொருள் விளங்கும் பாடல்.

“எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம்”

இன்றெனது குறள்:
பிறர்பேசும் தீச்சொல் பொறுத்தார் உயர்ந்தோர்
துறந்தூணை நோற்றா ரிலும்.

piRarpEsum thIchchol poRuththAr uyarndhOr
thuRandhUNai noRRA rilum

செப்டம்பர் 27, 2012

குறளின் குரல் - 168


27th September, 2012

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
                  ( குறள் 159:   பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
thuRandhArin thUymai uDaiyar iRandhAr vAy
innAchchol nOrkkiR pavar

thuRandhArin  - better than ascetics that have forsaken the worldly pleasures, in search of higher being
thUymai  - pure
uDaiyar – in mind
iRandhAr vAy – from the mouth of those who have crossed the boundaries of virtue
innAchchol – harm causing words
nOrkkiR pavar – that who tolerate

This verse expresses the thought: Those who tolerate the excessive words, crossing the boundaries of virtue said by some, are purer than the ascetics that forgo all earthly pleasures in pursuit of higher consciousness.

Though ascetics conquer the desire and jealousy, sometimes, they are not able to avoid or control anger and curses. DhurvAsa was a sage easily susceptible to both. There is a popular saying about a chaste lady asking a sage “kongaNA” that came at the door steps for alms “kokkenRu ninaithAyO kongaNavA”, who had earlier burnt a bird for an unintentional deed of the bird. Anger is a difficult emotion to control for most.

nAlaDiyAr, has several verses  that highlight the virtue of forbearance. A person of good virtues and patience will not be angry with the infuriating and anger causing words of people that do not match either in education or wisdom (“neRththu nigarallAr nIralla solliyakkAl vErththu veguLa vizhumiyOr”).  Another verse says even words like hurling stones are said at them, learned will bear them, for the world  to praise them for such composure. (“kallerndhanna kayavarvAy innAchchol ellArungkANap poRuththuyppar”).

“Purer than the ascetics are those that tolerate
  The words of excess from the mouths of  irate”

தமிழிலே:
துறந்தாரின் – உலக இன்பங்களை புறந்தள்ளி உயர் இறை பொருளைக் கருதி இருப்பவரை விடவும்
தூய்மை – தூய்மையான, மாசு இல்லாத
உடையர் – மனதினை உடையவர்கள்
இறந்தார்வாய் – நெறி கடந்த, மிகுதியான சொற்களை சொல்பவர்களது வாயிலிருந்து வருகின்ற (இறந்தார் – கடந்தார்; நெறிகளைக் கடந்தவர் என்பது உள்ளுரை)
இன்னாச்சொல் – துன்பந்தரும் சொற்களை
நோற்கிற்பவர் – பொறுத்துக் கொள்பவர் (நோற்றல் – பொறுத்தல்)

நெறிதவறிய துன்பம் தரும் சொற்களைச் சொல்பவர்களைப் பொறுத்துக்கொள்ளுபவர்கள், உலக இன்பங்களையெல்லாம் துறந்து, உயர்பொருளைக் கருதி இருப்பவர்களையும் விட தூய்மையான மனதை உடைய மேலானவர்கள் என்பது இக்குறளின் கருத்து.

பொறாமை, ஆசை இவற்றை வென்ற முனிவர்களும், இருடிகளும் கூட வெகுளி (கோபம்), இன்னா சொல் இவற்றைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். துர்வாசர் என்னும் முனிவரின் வெகுளியானது நிறைய இடங்களில் புராணங்களில் சொல்லப்படுகிற செய்தி. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று பத்தினியொருத்தி கேட்ட கதையும் அறிந்திருக்கிறோம்.

நாலடியார் தனது “சினமின்மை” அதிகாரத்தில் “ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை” என்கிறது.  பகைவர்களைத் தண்டிக்கும் ஆற்றலும் அறிவும் வலியும் உடையவன், தனது சினத்தைக் காட்டாமல் பொறுமையாக இருக்கின்றான் என்றால் அவனுடைய பொறுமையே போற்றத்தக்கது. மற்றொரு செய்யுளில் “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளா விழுமியோர்” என்கிறது. கல்வி, கேள்வி, அறிவால் தமக்குச் இணையில்லாத கீழோர் தம்மை இழிந்து கூறிவிட்டார்களே என்று, மேலோர் அவரிடத்து கொதித்துச் சினம் கொள்ளார். இக்குறளுக்கு இணையாக மற்றொரு பாடல், நாலடியாரில் இவ்வாறு சொல்கிறது: “கல்லெறிந்தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங்காணப் பொறுத்துய்ப்பர்”. கல்லால் அடிப்பதைப் போலத் தீயவர்கள் கடுஞ்சொல் பேசினாலும் கற்றவர்கள் மற்றவர் கண்டு பாராட்டும்படி அதைத் தாங்கிக்கொள்வர்

இன்றெனது குறள்:
சிறந்தார், நெறியிலார் தீச்சொல் பொறுத்தார்
துறந்தார்க்கும் மேலாம் அவர்

siRandhAr neRiyilAr thIchol poRuththAr
thuRandhArkkum mElAm avar

செப்டம்பர் 26, 2012

குறளின் குரல் - 167


26th September, 2012

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
                  (குறள் 158: பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
migudhiyAn mikkavai seydhAraith thAntham
thagudhiyAn venRu viDal

migudhiyAn -  Being arrogant becase of wealth or power or effrontery/impudence
mikkavai – unfair or improper deeds
seydhAraith – those who do that (improper deeds)
thAn - – a person
tham - with his
thagudhiyAn – merit (patience, tolerance or forbearance hinted here)
venRu viDal – win them over.

Winning someone with goodness and virtues is what is implied in here, not a victory for self and loss for others.  This verse is along the line of thought expressed in “innA seydhArai oRuththal” verse.

When someone errs because of the arrogance due to wealth or power, by tolerating, and being patient, we can win them over their heart and change their behavior is what is said in this verse.

When a person is publicly humiliated for the misdeeds, then the ensuing shame triggers anger which in turn triggers enemity.  Without anybody else knowing, if we make them realize the mistake, the person will feel shame and remorse in his mind and heart and there is definite possibility of course change for the same person. When our heart is remorseful for our mistakes, then we elevate ourselves to refine. That is possible only by forbearance and unconditional love for the other persons.

ThiruvAsagam, in a simple and elegant way puts it as “pizhaiththavai poRukkai ellAm periyavar kaDamai pORRi”. Manikkavsagar says with a little bit of anger, “poRuppAr anRE periyOr siRu nAygaL tham poyyinaiyE”.

“Improper deeds done due to Insolence
 Must be won by and with innate Patience”

தமிழிலே:
மிகுதியான் – செல்வம் மற்றும் அதிகாரச் செருக்கினால்
மிக்கவை – முறையற்ற செயல்களை
செய்தாரைத் - செய்தவரையும்
தான்- ஒருவர்
தம் - தம்முடைய
தகுதியான் – மதிப்புமிக்க நிலையினை வளர்த்துக் கொள்வதால் (பொறுமை உள்ளிட்ட அறநலன்களால் வருவது)
வென்று விடல் – அவர்களை செருக்கினையும் அதனாலேயே அவர்கள் மனதையும் வென்றுவிடலாம்

ஒருவருக்கு வெற்றி என்ற போது மற்றவருக்குத் தோல்வி என்ற பொருளில் கொள்ளாமல், ஒருவர் மனதை நாம் நம்முடைய நல்ல குணத்தினால், அறப்பண்புகளால் வெற்றிகொள்வது என்று கொள்ளவேண்டும்.  இக்குறள் “இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற குறளில் கருத்தை ஒட்டியதுதான்.

செல்வம் மற்றும் அதிகாரச் செருக்கினால் முறையற்ற செயல்களை ஒருவர் செய்திருந்தாலும் தம்முடைய பொறுமையென்னும் மதிக்கத்தக்கத் தகுதியால் ஒருவர் தவறுசெய்தவர்களின் மனதை வென்றுவிடலாம், அவர்கள் நல்வழி திருப்பிவிடலாம் என்பது பொருள்.

ஒருவரை தன் செயல்களுக்காக வெட்கச்செய்வது பலர் முன்னிலையில் என்றால் வெட்கியவருக்கு, அவமானமும் அதனால் ஆத்திரமும் உண்டாகி பகைதான் விளையும், வேறூன்றும். ஆனால் வேறு யாரும் அறியாமல் தவறு செய்தவர்கள் அவர்கள் மனதளவில் வெட்கும் படி செய்வதைத் தான் வள்ளுவர் கூறுகிறார்.  நம்முடைய மனது என்று நம் செய்கிற தவறுகளுக்காக வருந்துகிறதோ அன்றே நாம் உயர்கிறோம். அத்தகைய வருத்தத்தை பொறுமையும், அன்புமே உண்டாக்கும்.

திருவாசகம் மிகவும் அழகாக, எளிதாக, “பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” என்கிறது. மேலும், “பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே.” என்று சற்று சினந்தும் சொல்லுகிறார் மாணிக்கவாசகர். எட்டுத்தொகை சங்க நூலான நற்றிணை குறிஞ்சிப்பாடலில் கந்தரத்தனார் “தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் தாம் அறிந்து உணர்க என்பமாதோ” என்கிறார்

இன்றெனது குறள்:
இரும்பொறையால் வென்றிடலே நன்றாம் தகாது
செருக்கினால் செய்தாரை யும்

செப்டம்பர் 25, 2012

குறளின் குரல் - 166


25th September, 2012

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
                  (குறள் 157:   பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
Thiranalla thaRpiRar seyyinum nOnondhu
aRanalla seyyAmai nanRu

Thiranalla – harm unfitting (to one who does) for their demeanor
thaR piRar – for self from the other person (harm doer)
seyyinum – even if the person does
nO nondhu – suffering the pain,  because of the harm
aRanalla  -  deeds that are not virtuous
seyyAmai – not doing them
nanRu – is good.

Stressing virtue in general sense, in forbearance chapter? A valid question, though forbearance itself is a vitue! So, this verse, though does not talk explicitly about forbearance, it is hinted and an inherent value. When a person thinks harm or does harm to us, we must not counter the harm with another. So vaLLuvar has said doing harm in return is not a virtue.

When someone does harm, not fitting to their stature or demeanor, the hurt caused by it should not make us act equally badly and make us take a path devoid of virtue. As said in the previous verse, punishing is also a virtueless act and those who punish have the pleasure of seeing the other person in pain only for a few moments, and it is not lasting.

“Pain caused by unthinking harm done by anyone
Should not prompt us to act without virtue in return”

தமிழிலே:
திறனல்ல – (செய்பவரது) தகுதிக்கு ஒவ்வாத பொல்லாங்கினைத்
தற் பிறர் – தமக்கு பிறர்
செய்யினும் - செய்தாலும்
நோ நொந்து – அதனால் வரும் துன்பதினால் உள்ளம் வருந்தி
அறனல்ல – அறமல்லாத செயல்களை (எதிர்வினையாக)
செய்யாமை – தானும் செய்யாதிருத்தல்
நன்று – நல்லது.

பொறையுடைமை அதிகாரத்தில் அறன் வலியுறுத்தலா என்ற கேள்வியைத் தரும் குறள் இது. பொறையே ஒரு அறன் என்பதால் இது பொருத்தமே. தவிர பொறுமையே எதிர்வினையாக தாமும் ஒரு தீங்கு செய்யாமலிருக்க வைக்கும் என்பதால், பொறுமை என்று கூறாது, அறமல்ல என்று வள்ளுவர் கூறியிருக்கலாம். தாமும் அறனல்ல செய்யாதிருத்தலுக்கு பொறுமை மிகவும் தேவை. எனவே பொறுமை உள்ளுரையாக அறிவுறுத்தப்படுகிறது.

தகுதிக்கு ஒவ்வாத பொல்லாங்கினை நினந்து ஒருவர் தமக்கு ஆற்றும் போது, அதனால் வரும் துன்பத்தினால் உள்ளம் நைந்து வருந்தினாலும், எதிர்வினையாக தானும் அறமற்ற செயல்களைச் செய்யாமலிருத்தலே நல்லாதாகும்.  முந்தைய குறளில் சொல்லியது போல, தண்டித்தல் என்பதே கூட ஒரு அறமற்ற செயல்தான். அப்படி தண்டித்துவிட்டால், தண்டித்தவருக்கு மகிழ்ச்சி சில நேரத்திற்கு மட்டும்தான்.

இன்றெனது குறள்:
பிறர்செய்த பொல்லாங்கின் துன்பத்தில் உள்ளம்
அறனற்று போகாமை நன்று

piRarseydha pollAngin thunbaththil uLLam
aRanaRRu pOgAmai nanRu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...