27th September, 2012
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
( குறள் 159: பொறையுடமை அதிகாரம்)
Transliteration:
thuRandhArin thUymai uDaiyar iRandhAr vAy
innAchchol nOrkkiR pavar
thuRandhArin - better than ascetics that have forsaken the
worldly pleasures, in search of higher being
thUymai -
pure
uDaiyar – in mind
iRandhAr vAy – from the mouth of those who
have crossed the boundaries of virtue
innAchchol – harm causing words
nOrkkiR pavar – that who tolerate
This verse expresses the
thought: Those who tolerate the excessive words, crossing the boundaries of
virtue said by some, are purer than the ascetics that forgo all earthly
pleasures in pursuit of higher consciousness.
Though ascetics conquer the
desire and jealousy, sometimes, they are not able to avoid or control anger and
curses. DhurvAsa was a sage easily susceptible to both. There is a popular
saying about a chaste lady asking a sage “kongaNA” that came at the door steps
for alms “kokkenRu ninaithAyO kongaNavA”, who had earlier burnt a bird for an unintentional
deed of the bird. Anger is a difficult emotion to control for most.
nAlaDiyAr, has several
verses that highlight the virtue of
forbearance. A person of good virtues and patience will not be angry with the
infuriating and anger causing words of people that do not match either in education
or wisdom (“neRththu nigarallAr nIralla
solliyakkAl vErththu veguLa vizhumiyOr”).
Another verse says even words like hurling stones are said at them,
learned will bear them, for the world to
praise them for such composure. (“kallerndhanna
kayavarvAy innAchchol ellArungkANap poRuththuyppar”).
“Purer than the ascetics are those that tolerate
The words
of excess from the mouths of irate”
தமிழிலே:
துறந்தாரின் – உலக இன்பங்களை புறந்தள்ளி உயர் இறை பொருளைக்
கருதி இருப்பவரை விடவும்
தூய்மை – தூய்மையான, மாசு இல்லாத
உடையர் – மனதினை உடையவர்கள்
இறந்தார்வாய் – நெறி கடந்த, மிகுதியான
சொற்களை சொல்பவர்களது வாயிலிருந்து வருகின்ற (இறந்தார் – கடந்தார்; நெறிகளைக்
கடந்தவர் என்பது உள்ளுரை)
இன்னாச்சொல் – துன்பந்தரும் சொற்களை
நோற்கிற்பவர் – பொறுத்துக் கொள்பவர்
(நோற்றல் – பொறுத்தல்)
நெறிதவறிய துன்பம் தரும்
சொற்களைச் சொல்பவர்களைப் பொறுத்துக்கொள்ளுபவர்கள், உலக இன்பங்களையெல்லாம் துறந்து,
உயர்பொருளைக் கருதி இருப்பவர்களையும் விட தூய்மையான மனதை உடைய மேலானவர்கள் என்பது
இக்குறளின் கருத்து.
பொறாமை, ஆசை இவற்றை வென்ற
முனிவர்களும், இருடிகளும் கூட வெகுளி (கோபம்), இன்னா சொல் இவற்றைத் தவிர்க்க
முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். துர்வாசர் என்னும் முனிவரின் வெகுளியானது
நிறைய இடங்களில் புராணங்களில் சொல்லப்படுகிற செய்தி. “கொக்கென்று நினைத்தாயோ
கொங்கணவா?” என்று பத்தினியொருத்தி கேட்ட கதையும் அறிந்திருக்கிறோம்.
நாலடியார் தனது “சினமின்மை”
அதிகாரத்தில் “ஒறுக்கும் மதுகை
உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை” என்கிறது. பகைவர்களைத் தண்டிக்கும் ஆற்றலும் அறிவும் வலியும்
உடையவன், தனது சினத்தைக் காட்டாமல் பொறுமையாக இருக்கின்றான் என்றால் அவனுடைய பொறுமையே
போற்றத்தக்கது. மற்றொரு செய்யுளில் “நேர்த்து
நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளா விழுமியோர்” என்கிறது.
கல்வி, கேள்வி, அறிவால் தமக்குச் இணையில்லாத கீழோர் தம்மை இழிந்து கூறிவிட்டார்களே
என்று, மேலோர் அவரிடத்து கொதித்துச் சினம் கொள்ளார். இக்குறளுக்கு இணையாக மற்றொரு
பாடல், நாலடியாரில் இவ்வாறு சொல்கிறது: “கல்லெறிந்தன்ன
கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங்காணப் பொறுத்துய்ப்பர்”. கல்லால் அடிப்பதைப்
போலத் தீயவர்கள் கடுஞ்சொல் பேசினாலும் கற்றவர்கள் மற்றவர் கண்டு பாராட்டும்படி
அதைத் தாங்கிக்கொள்வர்
இன்றெனது குறள்:
சிறந்தார், நெறியிலார் தீச்சொல் பொறுத்தார்
துறந்தார்க்கும் மேலாம் அவர்
siRandhAr neRiyilAr thIchol poRuththAr
thuRandhArkkum mElAm avar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam