13thAug,
2012
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
(குறள் 114: நடுவுநிலைமை அதிகாரம்)
Transliteration:
thakkAr thagavilar
enbadhu avaravar
ecchaththAR kANap
paDum
thakkAr - worthy and just
thagavilar – not worth and just
enbadhu – that is known by
avaravar – everyone’s
ecchaththAR – offsprings, progeny, descendants
kANap paDum– be found
Looking at the progeny of a person we can
decipher the good virtuous nature or absence of the same in their progenitor.
In other words, by looking at a person and his just ways or otherwise, we can
say how his decendants are or will be. Though the word “thagavu” does not mean
the “impartial, just” conduct, it points to being a person of proper conduct
and just ways.
As a side note, the word “Echham” is an
interesting word in Tamil; has several meanings. It means the ritual of sacrificial
fire, the personinfication of Vishnu, the preserver and the first person of any
sacrificial fire. In Kanchi PurANam by Sivagnana Munivar, he has used the word
so beautifully. If you’re able to read Tamiz, you should read it in Tamiz
itself to understand the beauty of poertry as well as the usage. (Visit: ashokpennathur.blogspot.com). I will not elaborate here.
The word “Echcham” could be a morph of the Sanskrit word “yagnam” or just to be linguistically neutral, the
other way too. In the equivalent verses written today, I have used in the first
verse adopting the word meaning for “thagavu”; the second one is specifically
for the virtue of impartiality.
Another view point, which makes sense is to understand the word "Echcham" as what is left behind a person - the name and fame for the good deeds done. In fact this is the view point that fits the moral posturing of vaLLuvar too.
Another view point, which makes sense is to understand the word "Echcham" as what is left behind a person - the name and fame for the good deeds done. In fact this is the view point that fits the moral posturing of vaLLuvar too.
“Progeny left behind serves
as a good indicator to
Understand a person as just or unjust impromptu”
தக்கார் –
தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்)
தகவிலர் -
அஃதின்மை
என்பது – என்று அறியப்படுவதெல்லாம்
அவரவர் - ஒவ்வொருவரின்
எச்சத்தாற் –
வழித்தோன்றல்களின் வாழ்வின் வழிகளையும், ஒழுங்கு, அஃதின்மை இவற்றாலேயே
காணப்படும் –
பிறர்க்குத் தெரியவருகிறது.
ஒருவரின் வழித்தோன்றல்களின் வாழ்க்கை முறைகளின்
ஒழுங்கு மற்றும் நடுவாண்மை, அவை இல்லாமை இவைகளே அவர்கள் வளர்ந்த இல்லத்தரசரின்
தரத்தையும், அவரது ஒழுங்கு நெறிகளையும் தெரிவித்துவிடும். ஒருவருக்கு
பிறந்தவரெல்லாம் நன்மக்கள், அல்லது நன்மக்களாயில்லாதவர் என்பதைவைத்தே அவரின்
செம்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வதிகாரம் நடுவு நிலைமை பற்றியதாதலால், தகவு
என்னும் சொல்லை, நடுவாண்மை என்ற பொருளிலே கொள்ளலாம்.
எச்சம் என்ற சொல் யாகம், யாகம் வளர்ப்போர்,
திருமால், மற்றும் உண்மை என்ற பொருள்களிலும் வருகிறது. சிவஞான முனிவர் செய்த காஞ்சி புராணத்தில்,
தக்கேசிப் படலத்தில் முன்பு “என்பும் உரியர் பிறக்குக்” குறளுக்குக் காரணமான “ததீசி
முனிவர் கூறுவதாக அமைந்தது. தக்கன் (தக்ஷன்) திருமாலை தன்னுடைய யாகத்துக்கு
முதல்வனாக வைத்து, சிவனை யாகத்துக்குக்கு முதல்வனாக அங்கீகரிக்காமல், அவனை
அழைக்காமல் செய்தபோது, ததீசி முனிவர் சிவனை அழைக்காது யாகம் செய்வது ஏன் என
வினவவும், ததீசி முனிவர் அவனுக்கு மறுமொழியாக கூறுவதாக வரும் பாடல் இது. இதில்
எச்சம் என்ற சொல் யாகம், மற்றும் முழுமுதற்பொருள் சிவன் என்ற பொருள்களில்
வருகிறது. எச்சம், யக்ஞம் என்கிற சொல்லின் தமிழ் மருவுவாக இருக்கலாம், அதன்
முதல்வனாக உள்ளதால், சிவனுக்கும் ஆகிவந்திருக்கலாம்.
“எச்சத்தால் எச்சம் என்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர்
எச்சத்தின் வேறாம் ஏனைக் கருமங்கட் கெச்சம் போல
எச்சத்திற் குயர்ந்தோன் வெள்ளை ஏற்றினான் எனுங்க
ருத்தால்
எச்சச்சொல் லதனான் முக்கட் பகவனை இயம்பும் அங்கண்”
மற்றுமொரு விதமாகவும் இக்குறளை நாம் அணுகவேண்டும். ஒருவர் வாழ்ந்து முடிந்ததின் மிச்சமாக இருப்பது, அவர் விட்டுச்செல்வது அவருடைய நற்பண்புகளுக்காக வந்த புகழும், செல்வாக்கும் தாம். இந்த கருத்தே வள்ளுவரின் ஒழுக்க சிந்தனை கருத்தாக்கத்துக்கு இயைந்ததாகவும் இருக்கிறது.
இன்றைய குறள்களில், தக்கார், தகவிலர் என்பவற்றை
செம்மைப்பண்புகள் நிறைந்தவர், இல்லாதவர் என்ற பொருள்களில் கையாண்டுளேன். சற்று
மாற்றி, வழித்தோன்றல்களிடம் காணப்படும் நல்லொழுக்கம், நடுவாண்மைபோன்றவை,
முந்தையரின் குணங்களின்தொடர்பாகவே இருக்கும் என்ற பொருளிலும் ஒரு குறளை
எழுதியுள்ளேன்.
இன்றெனது குறள்(கள்):
செம்மையும் இன்மையும் யாவர்க்கும்
சந்ததியர்
தம்தரமே காட்டி விடும்
சந்ததியில் காணும்
நடுவாண்மை அஃதின்மை
முந்தைத் தகவின் தொடர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam