ஆகஸ்ட் 14, 2012

குறளின் குரல் - 125


14thAug, 2012

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
                   (குறள் 115:  நடுவுநிலைமை அதிகாரம்)

Transliteration:
kEDum perukkamum illalla nenjaththuk
kODAmai sAndROrk kaNI

kEDum – happenings of misfortune
perukkamum – and that of good fortune
illalla – are due to ill fate
nenjaththuk- (because of that), in heart,
kODAmai – not veer off (losing faith in centeredness or impartial demeanor)
sAndROrk – for wisemen
kaNI – is the proper way to be.

The fortune and misfortune of a person are not to be construed permanent. They are due to fate or the deeds of previous births, good or ill. They should not swerve wisemen from treading the just path in their life and leave the virtue of impartiality, which is the best honor for them.

The reason this is being insisted here is due to the fact the misfortune can adversely affect the people and make them lose faith in goodness. Likewise, windfall of fortune can make somebody dizzy to forget the realities of life and ignore good virtues too. In both cases, one should realize nothing is permanent and everythings happen to due to fate of previous births. Wisemen should not veer off from their just demeanor, no matter how their fortune or misfortune is.

“Fortune or misfortune are due to fate – should not
Swerve the hearts of wisemen for to remain just”

தமிழிலே:
கேடும்  - செல்வம் இல்லாக் கெடுதலும்
பெருக்கமும் – அவை வளமாக இருப்பதுவும்
இல்லல்ல – ஒருவருக்கு நிலையானதல்ல (எல்லாம் ஊழ்வினை வலியே)
நெஞ்சத்துக் – அதனால், தன்னுடைய நெஞ்சினிலே
கோடாமை – மயங்காமை (நடுவு நிலையான பண்பிலிருந்து)
சான்றோர்க்(கு) – அறிவுடைய பெரியவர்களுக்கு
அணி – அணிகலம் போன்றதாம்

ஒருவருடைய ஆக்கமும் அதில்லாமல் தேக்கமும், கெடுதலும் நிலையாக நடக்கக்கூடியவை அல்ல. பெரும்பாலும் ஒருவருடைய ஊழ்வினையைப் பொருத்தே அமைகின்றன. அதன்காரணமாக தங்களுடைய நன்னெறியாகிய நடுவாண்மை நலத்திலிருந்து வழுவாமல் இருத்தலே அறிவுடைய பெரியோருக்கு அழகும் அணியுமாம்.

இதை வலியுறுத்திச் சொல்வதன் காரணம், வாழ்க்கையைப் புரட்டிபோடும் துன்பங்கள் நிகழும்போதும், வாழ்க்கையின் உச்சகட்ட வசதிகளோடுகூடிய வளமான நேரங்களிலும், ஒருவர் தம்மை, தம்மனதை சமநிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டின் காரணம் பற்றியும், அதாவது வெறுப்பினாலோ, அலட்சியத்தினாலோ நடுவு நிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர் எனப்படுபவருக்கு அணிகலாமாம். 

கம்பனும் ஆக்கமும் கேடும் தாம்செய் அறத்தொடு என்று கூறுகிறான் (“ஆக்கமும் கேடும் தாம்செய் அறத்தொடு பாவமாய நோக்கி வேறு உண்மை தேறார்”). “கோடாமை சான்றோர்க்கணி” என்பதை இதே அதிகாரத்தின் எட்டாவது குறளிலும் வள்ளுவர் சொல்லுவார்.

இன்றெனது குறள் :
ஊழ்வினையால் ஆக்கமும் கேடுமாயின்– சான்றோர்கள்
தாழ்வதில்லை செப்பம தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...