ஆகஸ்ட் 15, 2012

குறளின் குரல் - 126


15thAug, 2012

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
                        (குறள்116:  நடுவுநிலைமை அதிகாரம்)

Transliteration:
keDuvalyAn enbhadhu aRigathan nenjam
naDuvorIi alla seyin

keDuvalyAn – I will be doomed
enbhadhu - A sign that (I will be doomed)
aRiga – know so
than nenjam – when the heart
naDuvorIi – just and impartial
alla seyin – is not and does unjust and partial deeds

There are always indications in our hearts that we will be doomed, should we stray from the sense of just and impartial ways. This we can feel right at the moment of swerving. This is the thought expressed by this verse.

This verse has the placement of word “thannenjam” in such a way, it cleverly conveys the thought in two different ways. First one is about realizing the signs of going down as a caution, if one were to swerve from just thoughts and deeds. The second one ascertains the doom, if one were to even think, let alone act, of unjust and impartial thoughts or about doing them.

In the sangam anthology “pazhamozhi” a work under the “padhinen kIzhkaNakku” series, a poem, though does not directly connect to the theme, says that one should do only things that don’t bring doom or blame.  Even a rock will decay and vanish, but a caustic word hurled and the effects of that will not decay for ever – (looks like worse than radioactive materials). Being unjust is something that will bring blame, and if one must not do things that will bring blame for sure, is n’t it the inference is that doing such things will blame for certain?

“Doom is certain beware the heart that swerves
  From just thoughts and acts in imprudent nerve”

தமிழிலே:
கெடுவல்யான் – நான் கெடக்கடவேன், அழிந்துபடுவேன்
என்பது – என்பதின் வெளிப்பாட்டு அடையாளம்
அறிக – என்று அறிவாய்
தன் நெஞ்சம் - எப்போது நெஞ்சமானது
நடுவொரீஇ – நடுவுநிலைமையினிற்று தவறி
அல்ல செயின் – அந்நிலைக்கு ஒவ்வாதவற்றை நினையுமோ, செய்யுமோ அப்பொழுது.

ஒருவர்தான் தாழ்வுறப்போகிறோம், அழிந்துபடப்போகிறோம் (இது இயற்கையாக நிகழும் வாழ்விறுதியன்று) என்பதன் அடையாளக்குறியீடுகளை, தன் நெஞ்சம் எப்பொழுது நடுவுநிலைமை தவறிய எண்ணங்களை நினைந்து செயல்களைச் செய்யுமோ, அப்பொழுதே உணரலாம்.

இக்குறளில் “தன்னெஞ்சம்” என்ற சொல் அமைந்திருக்ககூடிய இடம்,வியக்கவைக்கக்கூடிய ஒன்று. ஒருவன் தான் நடுவு நிலை தவறும் போது, தாழ்ந்துபடுவதற்கான குறியீடுகளை நெஞ்சம் அறியும் என்று ஒரு முன்னெச்சரிக்கையாகக் கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். அல்லது, அவனது நெஞ்சம் நடுவுநிலைத் தவறிய செயல்களைச் செய்யும்போது, அவன் தாழப்போவது உறுதி என்று அடித்துக்கூறுவதாகவும் கொள்ளலாம்.

சற்றே பொருந்திவருகிற முன்றுறையரையனார் எழுதிய பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாம் பழமொழியில், இப்பாடலைப் பார்ப்போம்.

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.

இது நடுவுநிலை தவறாமைப்பற்றி நேரடியாகக் கூறாவிடினும், இப்பாடால் சொல்வது இதுதான். தான் கெடுவோம் என்ற இடத்திலும், நிலையிலும் கூட ஒருவர் சிறு பழிவராத செயல்களையே செய்தல் வேண்டும். ஏனென்றால் மலைகளாலும் கடல்களாலும் சூழப்பட்ட இவ்வுலகில் கல்கூட தேய்ந்து விடும், ஆனால் கூறிய சொல்லும் அதன் விளைவும் விட்டுச்செல்லும் வடுக்கள் மாறாமல் நின்றுவிடும். நடுவு நிலைமை தவறுவது பழிவரக்கூடியச் செயல்தானே! கெட்டாலும் பழிச்செயல்கள் செய்யக்கூடாதெனில், பழிச்செயல்களினால் கெடுவது உறுதிதானே?

இன்றெனது குறள்:
நடுவாண்மை கெட்டால் கெடுவதுயான் என்று
தடுத்திடுக நெஞ்சில் தவறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...