12thAug,
2012
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
(குறள் 113: நடுவுநிலைமை அதிகாரம்)
Transliteration:
nandRe tharinum
naDuvigandhAm Akkaththai
andRe ozhiya viDal
nandRe - Even if good
tharinum – is given
naDuvu – being impartial
igandhAm - foregoing that (being
impartial)
Akkaththai – the wealth obtained (by being partial)
andRe – the same day
ozhiya – forego (the wealth by losing the attribute of impartiality)
viDal – do it.
Even if it causes no harm, but only good, the
wealth that is made by foregoing being impartial should be avoided and let go.
This is probably possible only for the highly elevated souls. While none can
disagree with what is said here, it is puzzling that vaLLuvar has said
something very contrary to this thought in a different chapter on “Truthfulness”.
“poimayum
vAimai iDaththa purai thIrndha nanmai payakkum enin” is the verse in that
chapter, which says, one can lie and it will be still taken as truth, if that
lie is going to cause something good. This has laid the foundation of slipping
of a celebrated virtue of truthfulness and makes falsehood or deceit a valid
reason under special circumstances. What if somebody loses impartialilty when
they lie that causes good? Possible
explanation is that there is a subtle difference of personal good and good for a
large number of people. The verse in the current chapter probably talks about
the personal good, which is selfish and the one in the “Truthfulness” chapter
is in the societal context – which makes both verses acceptable as written.
Parimelazhagar, the prime commentator is even
more confusing. When he gives the word meaning of “nandRE tharinum”, he says
clearly, “without causing harm, if it causes good”. In the subsequent para, he
says “since it does not cause good, he said “nandRE tharinum”, completely
different meaning for the same words.
“Wealth, even if it is for good and useful, obtained
By slip of
impartialilty, must be forgone, discarded”
தமிழிலே:
நன்றே - நன்மையே
தரினும் –
தந்தாலும், விளந்தாலும்
நடுவு – நடுவு நிலைமையாய்
இருத்தலை
இகந்தாம் –
விட்டொழித்து
ஆக்கத்தை –
அதனாலே வரும் செல்வத்தை
அன்றே – அன்றைய தினமே
ஓழிய - வேண்டாது
விடல் – விட்டுவிட வேண்டும்
யாதொரு தீமையும் பயக்காது நன்மையே தந்தாலும்,
நடுவு நிலைமையாயிருதலைத் துறந்து அதனால் வரும் செல்வமாயின், அதை அன்றே துறத்தலே
நன்று என்கிறது இக்குறள். இது குணமென்னும் குன்றேறி நின்றாருக்கே இயலும் ஒன்றாம்.
ஏறக்குறைய இக்கருத்துக்கு முரணாக வாய்மை அதிகாரத்தில்
ஒரு குறள் உள்ளது.
“பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்று
வள்ளுவர், புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்யைக்கூட வாய்மையாகக் கருதலாம்
என்று அறம் வழுவலுக்கு அடித்தளம் அமைத்துவிட்டு, இங்கு நன்மையே விளைந்தாலும்
நடுவுநிலைமை தவறக்கூடாது என்கிறார்.
பொய்மையினால் நடுவு நிலைமை தவற நேர்ந்தால் என்ன
சொல்வார் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படி இருக்கலாமோ என்று நினைக்கலாம். இக்குறள் சொல்வதில் சுயநலம் சார்ந்த
நன்மையென்று, வாய்மை அதிகாரத்தில் சொல்லப்படுவது பொதுநலனுக்கு என்று கொண்டால்,
இக்குறளின் கருத்து மேலும் வலுவடைகிறது. வாய்மை அதிகாரக் குறளுக்கும் ஓரளவு
நியாயம் கிடைக்கிறது!
பரிமேலழகர் உரையும் சிறிது குழப்பமாக உள்ளது.
நன்றே தரினும் என்பதற்கு “தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும்”, அடுத்த
பத்தியிலேலேயே, “நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார்” என்று கூறுகிறார்.
இன்றெனது குறள்:
நடுவுநில்லாப் பெற்றசெல்வம் நன்மை தரினும்
விடுத்தலே நன்றென் றுணர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam