ஆகஸ்ட் 11, 2012

குறளின் குரல் - 122

11thAug, 2012

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
                   (குறள் 112:  நடுவுநிலைமை அதிகாரம்)
Transliteration:
Seppam udayavan Akkanj chidhaivindRi
echchathiR kEmAppu uDaiththu

Seppam – Impartial
udayavan – one who is so (impartial)
Akkanj – the wealth
chidhaivindRi  - without diminishing or destroyed
echchathiR  - for his posterity (descendant)
kEmAppu – saving, pride, protection
uDaiththu – being so (saving, pride, protection)

Those who are just and impartial will have their wealth as well as influence not wane during their lives; will leave them as a protection or continuation of their life, for their descendants. It is just not the material wealth alone, but the wealth of their wisdom, fame, pride etc.  

There is a saying in tamizh that translates to, “Virtuosity saves head”, meaning leading a righteous life, will save a person during the times of distress. While this certainly is true for the people that are impartial, unbiased during their life, It is also true it saves their successive generations and protects them also.  As an interesting side note, vaLLuvar seems to have had a special affinity for this phrase “emAppu uDaiththu” as he has used it in quite a few places. In a later verse on learning, he will say. orumaikaN thAn katRa kalvi oruvaRku ezhumaiyum EmAppu uDaiththu.  Similarly, in the chapter of not having relationship with lowly characters, he has used the same in two consecutive verses. Interestingly in “AinthiNai ezhubadhu”, a sangam period literature, another poet has used the same phrase. Seems to have been a favorite ending phrase for veNpA meter.

Please read:
பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை 
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.

(perungai irunkaLiRu aivanam mAndhi
karunkAl marAm pozhil pAsaDai thunjum
surumbu imir sOlai, malai nADan kENmai
porundhinArkku EmAppu uDaiththu)

“Wealth of just and impartial will endure
  For posterity, as a protection for sure.”

தமிழிலே:
செப்பம் – நடுவு நிலை
உடையவன் – (நடு நிலை) நின்றவர்
ஆக்கஞ் – செல்வமும், செல்வாக்கும்
சிதைவின்றி - அழிவின்றி
எச்சத்திற்கு – வழித்தோன்றல்களுக்கு, சந்ததிக்கும்
ஏமாப்பு – சேர்த்துவைத்தது, பெருமை, பாதுகாப்பு
உடைத்து – ஆக இருக்கும்.

நடுவு நிலைமையினராக வாழ்கின்றவருடைய செல்வமும் செல்வாக்கும் அவர் காலத்துக்குப் பிறகும் அவருடைய வழித்தோன்றல்களுக்கு வைப்பு நிதியாகவும், பெருமையாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதே இக்குறளின் கருத்து. எச்சம் என்பது, அவருக்கே கூட அவர் இறந்துப்பட்ட பிறகும் பெருமை தேடித்தருவதை குறிப்பது.

தருமம் தலை காக்கும். நடுவுநிலையினாராக இருத்தலும் தருமம்தான். அது அவர்வாழும் காலத்துஅவரது தலையை மட்டுமன்றி, அவரின் காலத்துக்குப்பிறகு தலைமுறைகளையும் காக்கும் அறமாம். 

இக்குறளுக்குத் தொடர்பில்லாவிட்டாலும், ஒரு கூடுதல் தகவல்: வள்ளுவர், “கற்றலைப்” பற்றியும், சிற்றினம் சேராமை பற்றியும் உள்ள குறள்களிலும் “எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்ற  சொற்றொடரையே சொல்லியிருப்பார். சங்க இலக்கியமான ஐந்திணை எழுபதிலும் இச்சொற்றொடர் பயன்பட்டிருக்கிறது.  புலவர்களுக்கு பிடித்த வெண்பா ஈற்றுச் சீர்களாயிருந்திருக்க வேண்டும்.  கீழ் கண்ட பாடலைப் படிக்கவும்.

பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.

இன்றெனது குறள்:
நடுவுநின்றார் செல்வம் அழிவுறா நிற்கும்
அடுத்தவர் சந்ததிக்கு மாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...