அதிகாரம் 12 – நடுவுநிலைமை (Impartial,
Unbiased)
[The chapter following gratitude is the virtue
of impartiality. vaLLuvar’s ordering of chapters is given a reason by some
commentators. Some say, because having gratitude does not mean, one has to be
partial and to emphasize that, this chapter has been kept following the chapter
on “Gratitude”. While that is one of the
factors in consideration, regardless being unbiased is the most desired quality
in people. This comes to people with sense of justice and righteousness not
swayed by compulsions of life, wether family, financial or threat to personal
life]
10thAug, 2012
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
(குறள் 111: நடுவுநிலைமை அதிகாரம்)
Transliteration:
Thagudi enavondRu nandRE
pagudhiyAl
pARpaTTu ozugap peRin
Thagudi – being impartial
enavondRu - One stance that is
nandRE – good and causing good
pagudhiyAl – due to three leanings (friendship, enemity and indifference)
pARpaTTu – not biased by any of the above three
ozugap peRin – if somebody can practice than.
The virtue of impartiality or biasless state
is talked in highlight in this chapter. The first verse says it in its entirety.
As always, rest of the chapter will emphasize the same with the reasons of situations,
people.
Without the reasons or deficiencies of
friendship, enemity or indifference, if one can be impartial, unbiased in his
nature, that itself is the reason for goodness to prevail. This is the sum
total idea put forth by this verse.
Taking a “for” stance because of the gains of
friendship or relationship, or a stance of “against” due to direct or indirect enemity,
or a “who cares!” attitude out of sheer indifference, are equally bad and being devoid of these
deficiencies is being centered, equanimous and impartial. There is a greater
thought built into this verse, “yAdhu UrE, yAvarum kELir” is the stance
advocated by kaniyan pUnkundRanAr in puRanAnURu; Only when somebody sees everybody
in the world as their relative and every land is as their own motherland, a
sense of belonging and righteousness blossoms. This is possible only for people
of unbiased nature, not succumbing to the pressures or pulls of language, cast,
creed, land, relationship or enemity or the trade that one belongs to.
Without the reasons of friendship, enemity or indifference
Being impartial or being centered is good as a preference.
தமிழிலே:
தகுதி – சார்பில்லா நடுவு
நிலைமை
எனவொன்று -
எனப்படும் ஒரு நிலைப்பாடு
நன்றே – நன்மையும் அதைத்
தருவதுமாம்
பகுதியால் –
சார்பு காரணிகளான நட்பு, பகை மற்றும் அக்கறையில்லாத ஒரு நிலை
பாற்பட்டு –
இம்மூன்றுக்கும் அப்பாற்பட்டு
ஒழுகப் பெறின்- ஒருவர் இருப்பாரேயானால்
ஒருபுறமும் சார்பில்லா, நடுவு நிலைமையை
உயர்த்திச் சொல்லும் அதிகாரமிது. முதற்குறள் முழுமையாக இக்கருத்தைச்
சொல்லிவிடுகிறது. எனினும் ஏனைய குறள்கள் இக்கருத்தை பல இடங்களில், மனிதர்களில்,
காரணிகளைப் பொருத்திச் சொல்லும்.
சார்புக்குக் காரணிகளான நட்பு, பகை மற்றும்
அக்கறையின்மை போன்ற குறைபாடுகள் இல்லாத சார்பில்லா நிலைப்பாடு, ஒருவருக்கு நன்மையும்
மற்றும் அதைச் செய்வதுமாம். இக்குறளின் இரத்தினசுருக்கக் கருத்து இதுவே.
ஒருவர் செய்த உதவியின் காரணாமாகவோ சார்பாகவும்,
அல்லது ஒருவர் மேல் கொண்ட பகைகாரணமாக எதிராகவும், இராமனாண்டால் என்ன, இராவணன்
ஆண்டாலென்ன என்னும் அக்கரையின்மையோடும் இல்லாத நிலைப்பாடே நடுவு நிலைமை. இது
ஆராயும் நிலையில் உள்ள எல்லோருக்கும் தேவையான ஒன்று. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”
என்னும் பெரிய பொருளை தன்னகத்தே கொண்டது. மொழி, இனம், நிலம், உறவு, பகை,
சார்ந்திருக்கும் தொழில் என்று எதிலுமே இருக்கவேண்டிய நடுமை.
இன்றெனது குறள்(கள்):
நட்புபகை மற்றார்க்கும்
சார்பில் நடுநிலைமை
மட்டுமே நன்மைக் கறம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam