ஆகஸ்ட் 09, 2012

குறளின் குரல் - 120


9thAug, 2012

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
                                 (குறள் 110:  செய்நன்றியறிதல் அதிகாரம்)

Transliteration:
ennandRi kondRArkkum uyvunDAm uyvillai
seynandRi kondRa magaRku

ennandRi  - From all other virtuous deeds
kondRArkkum  - those we stray and be indifferent to, (people of five big sins)
uyvunDAm – there is a recourse and a way to redemption
uyvillai – But there is no salvation
seynandRi – the help done in time of need
kondRa  - does not remember the help and acts without any gratitude
magaRku – for such thankless people

Killing, looting, raping, cheating and lying are the five big sins. Even people that have committed these big sins can have redemption and forgiveness; but the people that forget the help given to them and kill the sense of gratitude in their minds, do not have any recourse to escape from that unforgivable sin.

vaLLuvar has not used a word meaning “difficulty to get redemption”. He categorically means and says, “Impossible to get forgiveness and redemption”. Almost all the works of Sangam and later literature place this lack of gratitude as a major morality hole, probably because it is the very basic ethical conduct that a society can expect out of a person. When somebody is not able to even have this basic quality then they are not afraid to make other bigger sins and will certainly not tread the virtuous path in life.

Though the chapter ends with a sweeping statement on lack of gratitude, it is worth recalling the hightlight of the virtue with the example from Mahabharatha. Karna in Mahabharatha is a fine example of the person who had utmost gratitude and served under sinful Kaurava prince Dhuryodhana and went to war against his own brothers, though he himself was a person of high virtues.

Recourse none for who kill the gratitude from conscience
Though for other sins, redemption possibilities’re immense

தமிழிலே:
எந்நன்றி – மற்ற எவ்வித அறச்செயல்களிலிருந்து
கொன்றார்க்கும் – வழுவியவர்களுக்கும், (ஐம்பெரும் பாவங்களைச் செய்தாலும்)
உய்வுண்டாம் – அவர்களுக்கும் அச்செயல்களின் எதிர்வினை விளவுகளிலிருந்து பிழைக்க முடியும்
உய்வில்லை – ஆனால் அவ்வாறு எவ்விதத்திலுமே பிழைக்க முடியாத நிலை
செய்ந்நன்றி – ஒருவர் தனக்குக் செய்த வேண்டிய காலத்தில் செய்த உதவியினை
கொன்ற – மறந்து, நன்றிகெட்டு நடந்துகொள்ளும்
மகற்கு - மக்களுக்கு

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் என்னும் ஐம்பெரும் அறம்வழுவிய செயல்களைச் செய்தவர்களுக்கும் மற்ற நல்ல அறங்களிலிருந்து பிழைத்தவர்களுக்குக்கூட அவர்களின் பெரும்பாவங்களிலிருந்து விலக்கும், மன்னிப்பும் பெற வழிகள் உண்டு, ஆனால், தனக்கு ஒருவர் காலத்தே செய்த உதவியினை மறந்து பிழை செய்தவர்களுக்கு, அதனால் விளைந்த பாவத்துத்திலிருந்து பிழைக்கவே முடியாது.

அரிது என்னாமல், உய்வில்லை என்று அடித்துச்சொல்லுகிறார் வள்ளுவர்.  செய்நன்றி கொன்றாரை ஏறக்குறைய எல்லா இலக்கியங்களுமே மிகவும் கீழான செயலாகவே கருதுகின்றன. தனக்கு உதவிசெய்தவரின் நன்றியை மறந்தவர்களின் மற்ற பாவச்செயல்களுக்கு, அதுவே தோற்றுவாயாக அமைந்துவிடும் ஆதலால், அதை பாவங்களுள் கடைப்பட்ட ஒன்றாக வைக்கப்பட்டது போலும். இது ஒரு அடிப்படை மனிதப் பண்பு, இது அற்றுப்போகிறவர்கள் மற்ற அறச்செயல்களில் ஈடுபடார். பாவங்களுக்கும் அஞ்சிடார்.  சங்க இலக்கியங்களில் இக்கருத்தை வழிமொழிந்த எடுத்துக்காட்டுகளை புறநானூறு, கலித்தொகை, கல்லாடம், நாலடியார், சிலப்பதிகாரம் இவற்றில் காணுவதை கி.வா.ஜா-வின் ஆய்வு உரை தெரிவிக்கிறது.

இவ்வதிகாரத்தின் இறுதியாக வரும் இக்குறளில் வலிவாய் சொல்லப்பட்ட கருத்து, எச்சரிக்கைத் தொனியில் இருப்பதால், அதைவிட அறநெறியின் மறுப்பக்கம் இருந்தாலும், செஞ்சோற்றுக் கடனுக்காக, கௌவுரவர்களுக்காக தன்னுடைய சொந்த தம்பிகளோடு போரிட்டு மடிந்த கர்ணனை நினைவுகூர்ந்து இவ்வதிகாரத்தை நிறைவு செய்வோம். பாரதத்திலே வரும் கர்ணனது பாத்திரம், செய்நன்றியறிதலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


இன்றெனது குறள்:
பிழைகளிலே செய்நன்றி கொல்வோர் பிழைக்கார்
பிழைப்புப் பிறபிழைக்கு உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...