ஆகஸ்ட் 08, 2012

குறளின் குரல் - 119


8thAug, 2012

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
                                 (குறள் 109:  செய்நன்றியறிதல் அதிகாரம்)

Transliteration:
kondRanna innAseyinum avarseydha
ondRunandRu uLLAk keDum

kondRanna – if it is murderous type of
innAseyinum – harm caused by someone
avarseydha – in things done by the same
ondRunandRu – even if one is a good help
uLLAk – and if that is remembered
keDum- the harm won’t matter much (for the persons that value the help)

This verse draws a picture of epitome of gratitude. The first three verses of this chapter had larger than life comparisons to emphasize the virtue of gratitude. Also this verse follows the footsteps of the previous verse.  When he talks about not doing harm, he would say that doing good to even those who did harm will shame the harm doers to mend them.  Such a faith in the society’s moral character has been displayed by vaLLuvar. What is difficult to comprehend is, then why did have to write a book on moral codes for the society! The reality is that there are people that will do harm no matter, how many good people cross their path. They will be oblivious to any good done by anyone. For such beings, being nice means inaction. So, it is difficult to accept this as it is said.

Even if somebody does murderous harm, the persons of gratitude would forget them, thinking even one single good deed and help done by them in the past. This is the thought expressed in this verse.

vaLLuvar would have probably placed a person, who is all accepting of harms done, even if there was no good deed or help done by the person causing harm, as one among the Gods.  In another code book of virtues, nAladiyAr, the Jain monks, who are sworn to non-violence, would say that, “tolerating hundred wrong doings” from such persons instead of endless pardon.  The thought is very clear here, because they did not preach endless tolerance and pardon to misdeeds by someone. This is similar to Krishna’s pardon to sishupAla, up to 100 mistakes of his, because of the promise made to sishupAla’s mother. In fact, sishupAla never did any good to KrishnA ever. That episode demonstrates the practical truth of what happens even if the God descends on earth as a human being.

“Even the deadliest harms caused will be obliterated
  If one good deed of help of the person is remembered”

தமிழிலே:
கொன்றன்ன – கொலைக்குச் சமமான
இன்னா செயினும் - துன்பங்களை ஒருவர் விளைவித்தாலும்
அவர்செய்த – அவர் எப்போதாவது செய்திருந்த
ஒன்றுநன்று – ஒரு நல்ல உதவியை
உள்ளக் - நினைக்க
கெடும் – அத்துன்பங்கள் இல்லை என்றாகும், செய்நன்றி உள்ள நல்லோருக்கு

இக்குறள் செய்நன்றியறிதலின் உச்சக்கட்ட குணநலனைச் சொல்லுவது. இவ்வதிகாரத்தின் முதல் மூன்று குறள்களின் வாழ்வின் பெரிய ஒப்புமைகளுக்கு ஒப்பானது. சென்ற குறளின் கருத்தை அடியொட்டியதும் கூட. குணமென்னும் குன்றேறி நின்றார்க்கே இயலக்கூடிய ஒன்று. இன்னாசெய்யாமைப் பற்றி கூறும்போது, அவர்களை தண்டிப்பது என்பது அவர்களே நாணும் படியாக நல்லனவற்றை அவர்களுக்கு செய்தல் என்பார்.  

கொலைசெய்தலுக்கு ஒப்பான துன்பங்களை ஒருவர் தந்தாலும், அவர் எப்போதாவது செய்திருந்த ஒரு நல்ல உதவியை நினத்தாலும் கூட அவர்களின் மேலு வருத்தம் ஏற்படக்கூடாது, அவர்கள் செய்த துன்பங்களும் இல்லை என்றாகும் என்பதே இக்குறள்.

நன்றி ஏதும் செய்யாமலேயே கூட, கொன்றன்ன இன்னாவைக் கொள்ளாராயின் அவர்களை வானுறையும் கடவுளரெனக் கொள்ளவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பாரோ?  நாலடியாரில் “ஒரு நன்றி செய்தவர்க்கொன்றி எழுந்த பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்” எனப்படுகிறது.  “பிழை யாவும்” என்னாமல், “நூறும்” என்றதால், பிழைகளைப் பொறுத்தலைப் பற்றி கூறினாலும், அதற்கும் ஒரு எல்லை இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. 

சிசுபாலன் உதவியே செய்திராவிட்டாலும், அவனுடைய தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக, அவன் செய்த நூறு பிழைகளைப் பொறுத்தான் கண்ணன் மகாபாரதத்தில்; பிறகு அவனை வதை செய்தான்.  அதுதான் தேவனே மனிதனாகப் பிறந்தாலும் நிகழக் கூடிய உண்மை.  

இன்றெனது குறள்:
நன்றிதனை நெஞ்சினிலே கொண்டவர்கள் கொள்ளாராம்
கொன்றன்ன இன்னலை யும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...