ஆகஸ்ட் 17, 2012

குறளின் குரல் - 128


17thAug, 2012

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
                   (குறள் 118:  நடுவுநிலைமை அதிகாரம்)

Transliteration:
Samanseidhu sIrthUkkung kOlpOl amaindhorupAl
kODAmai sAndRork kaNi

Samanseidhu  - balancing either side
sIrthUkkung  -  say which side has more weight or less weight (used as a metaphor for justice)
kOlpOl  - like a of  weighing scale
amaindh(u) – being in the state of ( a balancing scale)
orupAl – on oneside
kODAmai – biased and taking sides (because of partiality of already biased state)
sAndRork(ku) – those who’re learned and stand by the virtuous ways
aNi – is like the best garland for them.

A balancing scale, only when not biased by design, can weigh the things kept on either side of it flawlessly. Similarly, only when people that render justice are unbiased not taking into consideration anything else except the essence of the case before them, the justice is done rather than appeared to be done. Considerations such as the societal status, money or favors returned later on etc., from either side, should never swerve the learned from being just and impartial.

If a balance scale is proper, it does not see if the salt or sugar is kept on either side. It does not take the side of sweet or salt depending on which taste it likes. Such should be the demeanor and caliber of people of justice and learned.

In this verse, the commentator ParimElazhagar points out that the metaphorical context of balancing, identifying which side has truth on its side  are said in the context of objects that are balanced, while the physical and object oriented aspects of the balancing scale such as onsidedness, not being faulty are said in the context of justice and impartiality.

The example of balance scale is used in many old literature as “therikOl”, “neRkOl” and “njaman” etc. Sangam anthology such as Kaliththogai, PuranAnURu, and MaduraikkAnchi etc. have poems that use these words in a similar context.

“Like a balancing scale that weighs unbiased
  Impartial and not leaning decorate the learned”

தமிழிலே:
சமன்செய்து – இரு புறமும் சம அளவிலே அளக்கும் படி செய்யப்பட்ட
சீர்தூக்குங் - இது அதிகம், இது குறைவு என்று தெரிவிக்கக்கூடிய (குறை/நிறைகளுக்கு உருவகம்)
கோல்போல்- துலாக்கோலை, தராசினைப் போல
அமைந்(து) – நிலைப்பாட்டினைக் கொண்டு
ஒருபால் – ஒரு பக்க சார்பாக
கோடாமை – வழுவாமால் இருத்தலே
சான்றோர்க்(கு) – கற்றறிந்து, அறவழி நிற்கும் சான்றோர்க்கு
அணி – பூணுகின்ற, அணிந்துகொள்கின்ற அழகாம்

துலாக்கோல் தானே சமன் செய்யப்பட்டதாக இருந்தால்தான், அதன் இருபக்கங்களிலும் ஏற்றப்படும் சுமைகளை சரிவர நிறுத்துச் சொல்லும் திறன் கொண்டதாக இருக்கும். அதேபோல வழக்குகளில் நடுவுநிலைமையில் இருந்து முறையான தீர்ப்பை வழங்கவேண்டிய நீதிமான்கள், தாங்களே எந்தபக்கமும் சார்பில்லாத துலாக்கோலைப் போல் இருக்கவேண்டும்.

துலாக்கோலுக்கு விருப்பும் வெறுப்பும் இல்லாமால், அதன்மேல் ஏற்றப்படும் சுமைகளுக்கு முன்னரே சமநிலையில் இருத்தல் வேண்டும்.  சர்க்கரையும், உப்பையும் ஒரே அளவில் வேண்டுமென்றால், அதை எடையளவை இது இனிக்கும், இது உவர்க்கும் என்ற நிலைப்பாடு இல்லாமல் சம அளவில் நிறுத்துகிற பண்பு சமனாக இருக்கிற துலாக்கோலுக்கே உண்டு.

இந்தகுறளின் அமைப்புச் சிறப்பினை பரிமேலழகர் இவ்வாறு கூறுகிறார். உவமையாகிய சமன் செய்தல், சீர்தூக்கல் போன்றவற்றை நிறுத்தப்படும் பொருள்களுக்கு ஏற்றிச் சொன்னதும், அமைவதும், ஒருபால் கோடாமை போன்ற துலாக்கருவியோடு தொடர்புடையவற்றை, குணநலன்களுக்கு உவமையாகச் சொன்னதும் ஒரு சிறப்பு.

துலாக்கோலை சங்க இலக்கியம் நேர்க்கோல், தெரிகோல் என்று சொல்லும். இதே கருத்தைக்கூறும் பாடல்கள் இவை. “ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ - ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்?” என்கிறது கலித்தொகை (42:145). “விரிசீர்த் தெரிகோல் ஞமன் போல ஒரு திறம் பற்றல் இலியரோ” என்கிறது புறநானூறு (6:9.10). “ஞமன்” என்ற சொல் துலாக்கோலுக்கான பழந்தமிழ்ச் சொல். இதை மதுரைக்காஞ்சியிலும் காணலாம், “செற்றமு முவகையும் செய்யாது காத்து ஞெமன் கோலன்ன செம்மைத்தாகி” என்ற வரியினில்.  முனைப்பாடியார் என்பார் பாடிய அறநெறிச்சாரத்தில் நடுவுநிலைமைப் பற்றிய பாடல் இது.

“காய்த லுவத்த லின்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையார்க் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”

இன்றெனது குறள்:
துலாக்கோலே போல சமனின்று சார்பு
இலாதிருத்தல் ஆன்றோர்க் கழகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...