ஆகஸ்ட் 16, 2012

குறளின் குரல் - 127


16thAug, 2012

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
                         (குறள் 117:  நடுவுநிலைமை அதிகாரம்)

Transliteration:
keDuvAga vaiyAdhu ulagam naDuvAga
nandRikkaN thangiyAn thAzhvu

keDuvAga – Has become pauper, poor
vaiyAdhu – won’t think that
ulagam  - the world  (who?)
naDuvAga – one who is not biased and just
nandRikkaN – and  virtuous
thangiyAn – stays so
thAzhvu – when such person has become poor

Being just and impartial, and staying the virtuous path, if one has drowned in abject poverty, still the world, especially the learned will not see in that person a downfall. In their esteem, the person still stands high and mighty.

AuvayyAr in her work “mUdhurai” thus says: “Even if the people of elevated nature fall down in their status, they are still people of elevated nature as the conch, even after baking it in the fire, is still white and bright.

In the last three verses, including this one, vaLLuvar says that being just one does not drown nor extremely prosper (the second one is said because it is the duty of everyone to be just regardless of outcome),  by not being so, doom is certain, and the just persons downfall is also never construed as fall by the learned.

Looking for the idealism of impartialility in other literature, came across a verse in ThirumUlar’s thirumanthiram (website Project Madurai) – (thanthram-1, padigam 26), which  is very simple in construction and easy to understand by anyone who can read the language.

naDuvu nindRArkkanRi njAnamum illai
naDuvu nindRArkku naragamum illai
naDuvu nindRAr nalla dhEvarumAvAr
naDuvu nindRAr vazhi nAnum nindREnE

Just and impartial will not be looked down
By the world even if in poor state of  drown

தமிழிலே:
கெடுவாக – வறுமையிலே கெட்டுவிட்டான் என்று
வையாது – அவரை நினைக்காது
உலகம் – இவ்வுலகினர் (யாரை?)
நடுவாக – நடுவு நிலையில் நின்று
நன்றிக்கண் – அறத்தோடு
தங்கியான் - இலங்குபவரின்
தாழ்வு – வரிய நிலையையும்.

நடுவுநிலைமையிலே நின்று, அறத்தோடு வாழ்பவர் வறுமையினாராய் ஆனாலும், அவரை வறுமையினால் தாழ்ந்துவிட்டதாக கருதார் இவ்வுலகினர். பொதுவாக உலகினர் என்றாலும், இதில் உயர்ந்தோரையே குறிப்பதாகக் கொள்ளலாம். ஔவை மூதுரையில் கூறுவது போல, “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்”

இக்குறளும், இதற்கு முன்னால் பார்க்கப்பட்ட இரு குறள்களும், நடுவுநிலையினால், கெடுதலும் பெருக்கமும் வராது, அவ்வாறு தவறுவது கேடு விளையக் காரணம், தவறாதாவன் தாழ்வும் தாழ்வன்று என்ற கருத்துக்களை கூறுகின்றன.

நடுவுநிலைமையைப் பற்றி வேறு எந்த இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கிறது என்று தேடுகையில், “ப்ராஜக்ட் மதுரை” இணையதளத்தில் திருமூலரின் திருமந்திரத்தில் கீழ்கண்ட பாடலைக்கண்டேன் இக்குறளுக்கான கருத்தாயில்லாவிட்டாலும், நடுவுநிலைமைபற்றிய நல்லகருத்தாகையால் இன்றே பதிவுசெய்கிறேன். மிகவும் எளிதான பாடல், முதல் தந்திரம், பதிக எண் 26-ல் வரும் நான்கு நடுவுநிலைப்பாடல்களில், முதல் பாடல் இது.

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

இன்றெனது குறள்:
தாழ்ந்தாலும் இவ்வுலகோர் வீழ்ந்தாரே என்னாது
வாழ்த்தும் நடுநின்றார் மாண்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...