அதிகாரம் 13 – அடக்கமுடைமை (Self Control, Composure)
[This chapter following the chapter on Impartiality talks about
the virtue of Self Control, an all important one that keeps the five senses in
good stead, steering people away from bad deeds and the resulting miseries]
20thAug, 2012
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
(குறள் 121: அடக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
aDakkam amararuL uykkum aDangAmai
AriruL uyththu vidum
aDakkam – composure or
self-control (for anyone)
amararuL – to the Gods
uykkum - will take
aDangAmaiyAr – Not
having that or lack of it
iruL – in darkness, the hell
uyththu vidum – will
deliver us
The word “Ar” in the 2nd line of the
verse has the meaning of several exalated things such as completeness,
exquisite and something very subtle and also means Lord Shiva. Hece the meaning of AriruL as given by
commentators does not seem to fit the context at all. It has been used in the
sense of, “treacherous”, “hard to come out of” – very negative and unpleasant ,
to highlight the darkness in the context of not having self-control or
composure.
Just like the word “aDakkam” denotes the people
of composure, “aDangAmaiyAr” would mean, “not having composure”. Just for the
poetical meter to be correct the ending connector “Ar” has been moved to the first
word of next line in this verse.
Now to the meaning of the verse - The word
self-control implies the control of five senses and having composure and
equanimity in life. This virtue comes
only with completeness of learning and deep knowledge of right and wrong, to maintain
a calmness and righteousness with composure. By having this virtue, one will be
placed among the heavenly beings. The verse also means that after one sheds the
mortal coil, the glory and fame they leave behind will stay for ever. Similarly,
those who don’t have that virtue will be in the darkness of ignorance and accordingly
suffer in their lives.
In the works of “aRaneRichAram”, the poet “MunippAdiyAr”
says that the friendship of one who treads the path of truth and livies by that
virtue, gives the blessing of “self-control” in the birth and will place them
in heavens after their life one earth.
“Self-control, composure will place among the glorious heavens
Not having the same will place in the darkness of desolation “
தமிழிலே:
அடக்கம் – அடக்கம் என்னும்
ஐம்புலனடக்கம் (முழுமையான அறிதலில் விளயுமோர் அறப்பண்பு)
அமரருள் – ஒருவரை அமரத்துவம்
அடைந்தவர்களில் ஒருவராக, வானோரில் ஒருவரரென
உய்க்கும் - புகழ்
விளங்கச்செய்யும்,
அடங்காமையார் – அவ்விதமான
புலனடக்கம் இல்லாமல் போகுமாயின்
இருள் – அறியாமையான இருளும்,
அதன்கண்ணாகத் துன்பமென்னும் நரகமும்
உய்த்து விடும் –
சேர்ந்துவிடும்.
“ஆர்” என்ற சொல், அருமை, நிறைவு, நுண்மை,
கொன்றைச்சோதி (சிவன்) என்ற உயர்பொருளைத் தருவதால், “ஆரிருள்” என்ற சொல் பொருள்
சரியாக இல்லை. உரையாசிரியர்கள் எல்லோரும், “மிகக்கொடிய” அல்லது “மீளுதற்கரிய”
என்று பொருள் கொண்டுள்ளனர், இருளின் கொடுமையை உச்சப்படுத்தலுக்காக. ஆனால், அடக்கம்
என்பது, அடக்கத்தோடு வாழ்பவருக்கு ஆகிவருதல் போல, அடங்காமையார் என்று
எடுத்துக்கொண்டால், அவ்விதம் அடங்காமல் போவோமானால் என்று இரண்டுமே அடங்குதல் என்ற
பொருளின் சிறப்பைப்பற்றியே பேசுவதாகும். வெண்பாவிலக்கணத்துக்காக, “ஆர்” என்னும்
விகுதி, அடுத்தசொல்லொடு, அடுத்த வரியைச் சென்றடைந்தது.
அடக்கம் என்று இங்கு குறிப்பிடப்படுவது, ஒடுக்கம்,
ஒறுத்தல் இல்லாது, ஐம்புலன்களையும் சமனிலையிலே, நடுவாண்மை நிலையில்
வைத்துக்கொள்ளும் பண்பு. முழுமையான அறிவின்கண் விளையுமோர் அறம். அத்தகைய அறநிலை
கொண்டுவிட்டால், ஒருவரை அது வானோரில் ஒருவரென விளங்கச்செய்யும். அமரர் என்ற சொல்,
உலகை நீங்கியவரை குறித்தாலும், குறிப்பாக, தங்கள் புகழை வாழச்செய்து மறைந்தவரையே
குறிக்கும். எனவே இது புகழை விட்டுச்
சென்று அமரத்துவம் அடைந்தவர்களையும் குறிக்கும். அவ்வாறு புலன்கள் அடங்காமல் இருப்போருக்கும், அறியாமையாகிய
இருளும், அதனால் விளயும் துன்பங்களும் சேர்ந்துவிடும் என்பதே இக்குறளின் கருத்து.
முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரப் பாடல் ஒன்று மெய்மையின்கண்
நின்று அறமுறைக்கும் பண்புடையாளரின் நட்பினால், இம்மையில் வருவது அடக்கம் என்றும்,
அவ்வடக்கம் புகழைத்தந்து உயர்கதியில் உய்க்கும் என்கிறது. அப்பாடல் இதோ!
இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் - மெய்மையே
பட்டாங்கு அறமுரைக்கும் பண்புடை யாளரே
நட்டா ரெனப்படு வார்
இன்றெனது குறள்(கள்):
அடக்கமுளார் தெய்வத்துள் சேருவர் இல்லார்
முடங்கும் நரகத் திருள்
AdakkamuLAr dheivaththuL seruvar - illAr
muDangum naragath thiruL
அடக்கமே வானோராய் வைக்குமாம் -இன்மை
முடக்கும் நரகத் திருள்
aDakkamE vAnOrAi vaikkumAm - inmai
muDakkum naragath thiruL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam