5th Aug, 2012
மறவற்க மாசற்றார் கேண்மை
துறவற்க
துன்பத்துள் துப்பாயார்
நட்பு.
(குறள் 106: செய்நன்றியறிதல் அதிகாரம்)
Transliteration
maRavaRka mAsatRAr
kENmai thuRavaRka
thunbaththuL thuppAyAr
natpu
maRavaRka – Do not foget
mAsatRAr – with blesmishless person,
kENmai - the relationship
thuRavaRka – Do not forgo or relinquish
thunbaththuL – during the time of distress and anguish
thuppAyAr – who helped immensely
natpu – their friendship
The essence of this verse is that we should never forget the
relationship of the blemishless puritans, and should never forgo the friendship
with the people that stood by us during the times of distress and helped us to
see them through.
Parimelazagar’s commentary sees them as assurances of righteous
life, for the future and present births respectively. The reason must be because
of the following verse which says that great souls will remember the friendship
of those that helped during the times of distress.
vaLLuvars’ verse 788 reflects the thought of friendship in the
verse, “uDukkai izahndhavan kai pOlE
AngE iDukkaN kaLaivadhAm naTpu”. Another verse (800) stresses the importance of
keeping the relationship of blesmishless persons – “maruvuga mAsatRAr kENmai”.
In Ramayana, when VibheeshaNA surrendered to RAmA, he would say that
with Guhan they became five brothers and with SugrIvan, they were six and now
with VibheeshaNA, they were seven brothers. A friendship has the largeness of
the heart to adopt a friend as a relation and that relationship can not simply
watch and do nothing when one of his own was in trouble. This was amply
evidenced by Guhan’s help to Rama during the initial hardship of living in the
forest with Sita. RAmA helped SugrIvA in regaining his rightful kingdom from
his estranged and vengeful brother vAli.
These incidents are some of the examples of what this verse says
succinctly.
“Forget not the
relationship of persons that are blesmishless
Nor
forgo the friendship, that extends help at times of distress”
தமிழிலே:
மறவற்க - மறக்காதீர்
மாசற்றார் - குற்றமில்லா குணத்தினரின்
கேண்மை – உறவினை, நட்பினை
துறவற்க – துறந்து விடாதீர்
துன்பத்துள் – துன்பம் வந்த வேளையில்
துப்பாயார் – பெருந்துணையாக உதவியவரின்
நட்பு - நட்பினை
இக்குறள் சொல்லவரும் கருத்து எளிமையானதுதான். குற்றமில்லா குணமுடையவர்களோடான
உறவினை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது. அதேபோன்று துன்பமான வேளையில் நமக்கு
உறுதுணையாய், பற்றுக்கோடாய் இருந்து உதவியவர்களின் நட்பையும் நாம் மறக்கக்கூடாது. பரிமேலழகர் உரை குற்றமில்லாரின் உறவினால்
மறுமைப்பயனுக்கும், துன்பம் வந்த வேளயில் உதவியவரின் நட்பினால் இம்மைப்பயனும்
கிடைக்குமான் உறுதி என்று பொருள்
கூறுகிறது.
முன்னரே வேறு அதிகாரத்தில் கண்ட படி, அடுத்த குறளிலே துன்பம் வந்த
வேளையிலே உதவியவரின் நட்பை ஏழு பிறப்பிலும் நினைகுவர் என்று கூறியதால், நட்பு
மறவாமையை மறுமைக்கு ஏற்றிச் சொன்னார் எனலாம்.
நட்பைப் பற்றிச் சொல்லும்போது, பின்னாலே வள்ளுவரே, “உடுக்கை
இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள் 788) என்று சொல்லுவார்.
அதேபோல், “மருவுக மாசு அற்றார் கேண்மை” (குறள் 800) என்று மாசில்லாரோடு நட்பு கொள்ளவேண்டியதை
வலியுறுத்துவார் வள்ளுவர்.
இராமயணத்திலே ஒரு காட்சி: தன்னைச் சரணடைய வருகின்ற
விபீடணனைப்பார்த்து இராமன் இவ்வாறு கூறுகிறான்.
குகனொடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் றுந்தை!
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் றுந்தை!
குகனோடு ஐவராகி,
சுக்ரீவனோடு அறுவராகி, பின்னர் விபீடணனோடு எழுவாரானதாக இராமனின் கூற்று. நட்பெனின்
சிறிதளவு உதவ தயங்கினாலும், தன்னுடைய தம்பியரெனில் அவர்களுக்கு உதவாமல் இருக்க இராமனால்
முடியுமா? இல்லையெனின் தம்பிகளாக ஏற்றுக்கொண்டவர்களுக்குத்தான்
முடியுமா? இராமனுக்கு துன்பமான காட்டு வாழ்கையிலே குகன் செய்த உதவியும், சுக்ரீவனுக்கு
இராமன் அவனுக்கு சொந்தமான நாட்டை மீட்டுக்கொடுத்த உதவியும், நட்பு தவிர உறவென்னும்
சிறப்பினாலல்லவா? சரணம் என்று வந்தவனை, சற்றும் பகைவனின் தம்பி என்று ஐயம் கொள்ளாமல்,
இராமனால்தான் ஏற்றுக்கொள்ளமுடிந்ததென்றால், மாசற்ற குணத்தினாலன்றோ?
[மாற்றுக் குறள் எழுத சிறிது சிந்திக்கவைத்த குறள். குறள், வெண்பா
என்ற வட்டத்துக்குள் சிக்கி, மறவீர், துறவீருக்குச் சரியான மாற்றுச் சொற்கள்
கிடைக்காமல் தேடியதில் அரைமணி நேரம் செலவிட்டிருப்பேன். கோதிலார்பால் என்றது குற்றமில்லாரின் கண்
என்பதை. துன்பத்துப் பற்று என்பது, துன்பம் வந்தவேளையில் பற்றுக்கோடாய் நின்றவரை.
நிரை சீர் முதல் சீராகக் கொண்ட குறள்களுக்கு பொருத்தமான முதலடி ஈற்றுச்சீரும்,
இரண்டாமடி முதல் சீரும் அமைவது சற்றுக்கடினமே. சில சொற்களுக்கு ஏற்ற மறுச்சொற்களும்
கிடைப்பது எளிதில்லை. வள்ளுவரின் சொல்லாண்மையை வியக்கவைத்த குறள்]
இன்றெனது குறள்:
மறவீர் உறவினைக்
கோதிலார்பால் – நட்பும்
துறவாதீர் துன்பத்துப் பற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam