6th Aug, 2012
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்
தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
(குறள் 107: செய்நன்றியறிதல் அதிகாரம்)
Transliteration:
Ezhumai ezupiRappum
uLLuvar thangkaN
Vizhumand thuDaiththavar
naTpu
Ezhumai – the exalted
ezupiRappum – seven births
uLLuvar – will think of (with gratitude the ones who value such
friendships)
thangkaN – when they have
Vizhumam – distressful, pain causing situations
thuDaiththavar – who who removed or wiped them out
naTpu – the friendship
Like the last verse, this verse also talks about being thankful
to the help in the context of friendship. The word “ezhumai”, when interpreted in the same word order means, all the
sevel exalted births for a soul. The same when conjoined with the last word of
the verse, means the “the glory of such
friendship”. Sometimes, in the poetical
expression, we may have to infer the said meaning from otherwise ordinary
sounding word. In this verse, “uLLuvar”
means simply “will think” referring to the recipients of the help. But it
means, he recipients of the help that value the help as well as think of the
same with gratitiude. Same is true with
the word usage of “natpu”. It is simply not that they will cherish the friendship;
they will cherish the greatness of such friendship.
The verse says thus: The greateness of a friendship that did the
timely help will be remembered in all the seven births by the recipient of the
help that value and cherish that help. In another verse, we will read about
friendship as something that happens naturally without asking, just like when
somebody’s dress accidentally comes off the body, how the hand automatically
holds it save the honor (உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”).
Both the last and the current verses highlight the gratitude in the contex of
friendship.
In all seven births, is
cherished, a friend indeed
With gratitude for the
great help in time of need
தமிழிலே:
எழுமை - உயர்வையுடைய
எழுபிறப்பும் – தங்களுடைய ஏழு பிறப்பிலும்
உள்ளுவர் – நினைந்து போற்றுவர் (செய்நன்றி அறிந்தோர் என்பது உள்ளுரைப்
பொருள்)
தங்கண் - தங்களுக்கு
விழுமந் – மனதுக்கு துன்பம் தருபவை நேர்ந்த வேளையில், உதவியினால்
துடைத்தவர் – அத்துன்பத்தினை போக்கியவர்களின்
நட்பு - நட்பினை
இக்குறளிலிலும், சென்ற குறளைப்போலவே நட்பை மையமாக வைத்து செய்நன்றியறிதலைக்
கூறுகிறார் வள்ளுவர். எழுமை என்பதை “எழுமை எழுபிறப்போடு” என்று கொண்டால், உயர்வான
எழு பிறவிகளிலும் என்ற பொருளும், நட்பு என்பதோடு கொண்டு கூட்டினால், “நட்பின்
உயர்வினை” என்ற பொருளும் வருகிறது. உற்றுழி செய்தல் என்பது காலத்தால் செய்தல்லாம்.
உற்றுழி செய்த உதவியினை செய்த நட்பின் மேன்மையை தம்முடைய ஏழு
பிறவிகளிலும் தம்முடைய நினைவிலிருந்து விடுக்காது நினைந்து போற்றுவர் அவ்வுதவியின்
பெரும்பயனை அடைந்து, செய்நன்றியைப் போற்றுபவர். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைகின்ற (செய்நன்றி) நட்பை, மறவாமல் போற்றுவதையே சென்ற குறளும்,
இக்குறளும் வலியுறுத்துகின்றன.
இன்றெனது குறள்:
இடும்பைக்கண் உற்றுதவும் நட்பேழ் பிறப்பும்
விடுக்கிலரே நன்றியறிந் தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam