4th Aug, 2012
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
(குறள் 105: செய்நன்றியறிதல் அதிகாரம்)
Transliteration:
Udhavi varaithandRu
udhavi udhavi
seyappaTTAr sAlbin
varaithhtu
Udhavi - Help done
varaithandRu – Is not valued by the size or bigness of it
udhavi – as this is “the” true help
udhavi – but a help
seyappaTTAr – depending on who has been helped
sAlbin - their meritorious
status
varaithhtu – decides the worthiness of help
When someone helps others, its merit is not measured by the
quantum or size of the help, but by who it goes to and what their merit is.
Then the help has some worth in it.
In kamba rAmayaNam, there is a reference to how the vAmanA grew
taking an immense form scaling the earth and heavens when the King MahAbali gave
him the boon of three feet land that this little boy asked him. He says that
vAmana grew so tall scaling skies just like the merit of help given to people
of high merits.
In a later work by Thuraimangalam Sivaprakasa SwamigaL, in his “nanneRi”
(good virtues), he says, people of high erudition will help only the worthy
ones, not the undeserving ones. He asks who will feed the weed grass when there
is paddy field deserving water. In tamil there is a saying “paaththiram arindhu
pichchaiyidu”, meaning, even when we help someone, we should know who it goes
to and what their worthiness is, not to undeserving people.
“Worth of help is decided
by the worthiness
Of helped, not by the mere size of bigness”
தமிழிலே:
உதவி - செய்யப்படுகின்ற உதவி
வரைத்தன்று – அளவைப் பொறுத்து மதிப்பிடப்படுவதல்ல
உதவி – இதுதான் உதவியென்று
உதவி - அவ்வுதவி
செயப்பட்டார் – யாருக்குச் செய்யப்படுகிறதோ
சால்பின் – அவரின் தகுதியைப் (மதிப்பினைப்)
வரைத்து – பொருத்ததேயாம்
ஒருவர் செய்கின்ற உதவியானது,
அதன் அளவை வைத்து உயர்வு பெருவதில்லை, மதிப்பிடப்படுவதில்லை. அது யாருக்குச்
செய்யப்படுகிறது என்பதை வைத்தே, அவர்களின் தகுதி மற்றும் பெருமை மிக்க இயல்பினைப்
பொருத்தே அவ்வுதவியும் மதிப்படும்.
கம்பராமாயாணப் பாடல்
வேள்விப்படலப் பாடலொன்று, மகாபலி சக்ரவர்த்தி வாமனர்க்கு அவர் கேட்ட மூன்றடி
நிலத்தை தாரை வார்த்து கொடுத்த மறு வினாடி, வாமனர் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வளர்ந்து
நின்றதை இவ்வாறு வருணிக்கின்றது. “கயந்தரு
நறும்புனல் கையிற் றூண்டலும் பயந்தவர்களும் இகழ்குறளன் பார்த்தெதிர் வியந்தவர்
வெருக்கொண விசும்பின் ஓங்கினான் உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே”
தக்காருக்குச் செய்யும் உதவிபற்றி துறைமங்கலம் சிவப்பிரகாச
சுவாமிகள் எழுதிய நன்னெறி நூலும் இதைக்கூறுகிறது. “தக்கார்க்கே ஈவர்
தகார்க்களிப்பா ரில்லென்று மிக்கார்க் குதவுவார் விழுமியோர் – எக்காலும் நெல்லுக்
கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பாரோ போய்”. இதே கருத்தைதான்
“பாத்திரமறிந்து பிச்சையிடு” என்றதும்.
இன்றெனது குறள்:
பெற்றார் பெருஞ்சிறப்பே
நன்றிக்கு நல்லளவாம்
மற்றல்ல நன்றிக் களவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam