13th July, 2012
வருவிருந்து வைகலும்
ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல்
இன்று.
(குறள் 83: விருந்தோம்பல் அதிகாரம்)
Transliteration:
Varuvirundhu vaigalum
OmbuvAn vAzhkkai
Paruvandhu pAzhpaDudhal
indRu.
varuvirundhu – the guests that come home
vaigalum - daily
OmbuvAn – one who feeds them to the best possible extent
vAzhkkai – familylife or household
paruvandhu – poverty striken and the pains due to that
pAzhpaDudhal – become miserable
indRu – does not happen
For those who feed the guests, everyday to the best possible
extent, can never suffer the pains of poverty, states this verse.
Benevolence protects in time of need. Of all the virtues, the
best is to feed someone who is hungry and in need of food - that too if the person
is served with a smiling face and a willing attitude. That virtue earns good relationships
outside of family. There is a saying in Tamil, “uppittavarai uLLaLavum ninai” (உப்பிட்டவரை
உள்ளளவும் நினை) – means we should never forget the person who served the food
even once. The saying does not say food, but salt. The reason is because of
another saying, “uppillA panDam kuppayilae” (Food without salt is waste –
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே) though may not always be true. Regardless, in
dire need, for people that are consistently hospitable, help will come from
invisible and unexpected sources at least from a few that have been benefited
because of their hospitality.
In ki.vA.jA’s research edition of ThirukkuraL, he cites that the
word “paruvandhu” is from the first
part of the word “paruvA”. The
commentators, most of them have interpreted this word as “nalguravu”, meaning pain of hardship. Both these words are out of
vogue and the word “paruvA” is not even in most popular Tamil dictionaries.
Another commentator who is often quoted, ParidhiyAr has simply
interpreted the word “paru” as the pimple and has directly taken the meaning as
the sentence goes. He says that, like a pimple appears and breaks open when it
is ripe on its own, by being hospitable the effects of bad deeds would break
loose and be gone. It could simply be his imaginative spree or utter lack of
vocabulary. Either way, it is an interesting interpretation.
Life of householder feeding
everyday the guests that come
Will never be in pains
being poor and devoid of income.
தமிழிலே:
வருவிருந்து – தன்னுடைய இல்லத்திற்கு வரக்கூடிய
வைகலும் - அன்றாடம் (ஒவ்வொரு
நாளும்)
ஓம்புவான் – அவர்களுக்கு தன்னால் இயன்றளவுக்குச் சிறப்பாக உணவளித்து
பசியாற்றுபவன்
வாழ்க்கை - இல்லற வாழ்க்கையானது
பருவந்து - வறுமை மற்றும் அதனால்
வருந்துன்பம்
பாழ்படுதல் - கெடுதல்
இன்று – இல்லை.
தன்னுடைய வீட்டிற்கு அன்றாடம் வரக்கூடிய விருந்தினர்களை தன்னால்
இயன்றளவுக்குச் சிறப்பாக உணவளித்து பசியாற்றுபவன் வாழ்க்கையில் வறுமையும் அதனால்
துன்பமும் வருவதில்லை என்பது இக்குறள் சொல்லும் கருத்து.
தருமம் தலை காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அறங்களில் சிறந்தவை பசியென்று வந்தவரின் பசியை
ஆற்றுதல். அதுவும் முகமலர்வோடு, தம்மக்களுக்கு உணவளிப்பது போல நினைந்து செய்வது.
அவ்வறத்தினால் பெறுவது நல்ல உறவுகளை. “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்கிற அறக்கட்டளை
ஒரு சிலர் மனதிலாவது பதிந்திருக்குமானால், துன்பம் என்று வருங்காலையில், உதவி
என்பது தானாகவே ஓடோடி வந்துவிடும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
கி.வா.ஜா வின் ஆராய்ச்சி உரையில் ‘பருவந்து’ என்னும் சொல், ‘பருவா’
என்றப் பகுதிச்சொல்லினின்று பிறந்தது என்று காண்கிறது. பொருள் கூறும் ஆசிரியர்கள்,
நல்குரவு என்ற சொல்லை
பயன்படுத்தியிருந்தாலும், இரண்டு சொல்லுமே வழக்கில் இல்லாமல் போனது எனலாம்.
அகராதிகளில் நல்குரவு என்னும் சொல்லிருக்கிறது. பருவா என்ற சொல்லில்லை.
பரிதியாரின் உரை சற்று வேறுபட்டு “பரு” என்பதை உடலின் கண்தோன்றும்
ஒருவித உடற்கட்டி என்று சொல்லி, அது தோன்றி பாழ்படுவதைப் போல வினையானது அறும்
என்று பொருள் செய்திருக்கிறார். அவரது கற்பனை வளமா அல்லது சொல்லறிவு தேக்கமா என்று
தெரியவில்லை என்றாலும், இப்படியும் சிந்திக்கமுடியும் என்பதைக் காட்டுகிறது.
இன்றெனது குறள்:
நாளும் விருந்தோம்பும்
நல்லில்லோர் தம்வாழ்வில்
மூளுமொரு துன்பமு மில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam