ஜூலை 14, 2012

குறளின் குரல் - 94


14th July, 2012

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
                       (குறள் 84: விருந்தோம்பல் அதிகாரம்)

Transliteration:
Aganamarndhu seyyAL uRaiyum muganamarndhu
Nalvirundhu OmbuvAn il

Aganamarndhu  - feeling happy in heart
seyyAL – Goddess of wealth
uRaiyum – will reside/stay (in the house of)
muganamarndhu – one who with a smile in the face
Nalvirundhu –the appropriate guests
OmbuvAn – feed them well
 Il – in his house (Goddess of wealth will reside)

When said properly, whatever is said will be accepted without questions. This verse says that, those who welcome the guests with a smile in the face and feed them unhesitatingly will make the heart of Goddess of wealth glow in happiness and she will gladly reside in those houses.

After extoling the glory of hospitality, and how important duty it is for virtuous householders, vaLLuvar could have had a slight doubt in his mind, if it was enough to entice people to sign up to it. So, he lures them by saying that Goddess of wealth would stay in their house, meaning they would be bestowed with all wealth, if they did this. The suggestion is subtle and not overt, and he has very cleverly slipped it in. Afterall there are ample evidences in this work, that he was well versed in the psychology of masses and this is one of them.

“Goddess of wealth resides happily and gaze
Those who feeds the guests with a happy face”

தமிழிலே:
அகனமர்ந்து – மனம் மகிழ்ந்து
செய்யாள் – திருமகள் – செல்வத்தின் கடவுள்
உறையும் - தங்குவாள்
முகனமர்ந்து – தன்னுடைய முக மலர்ச்சியுடன்
நல்விருந்து – தகுந்த விருந்தினரைப்
ஓம்புவான் -  பேணுகின்ற – தக்கவிதத்தில் உணவளித்து மகிழ்விப்பானது
இல் - இல்லத்தில்.

எதையுமே சொல்லும் விதமாகச் சொன்னால், சொல்வது ஏற்றுக்கொள்ளப்படும்.  ‘தன் வீட்டுக்கு வரும் தக்க விருந்தினரை, முகமலர்ச்சியுடன் சிறந்தமுறையில் உணவளித்து குளிர்விப்பானது இல்லத்தில் செல்வத்திற்கு கடவுளான திருமகள் மனமகிழ்ந்து தங்குவாள்’ என்பதே இக்குறளின் பொருள்.

விருந்தோம்பலின் சிறப்பைக் கூறிவிட்டு, அதை செய்வது ஏன் இன்றியமையாது என்றும் கூறிவிட்டு, அப்படியும் எங்கே செய்யாமல் போய்விடுவார்களோ என்று, செல்வத்துக்கு அதிபதியான திருமகள், விருந்தோம்புவார் இல்லத்து உறைவாள் என்றதனால், அதையே கிரியா ஊக்கியாகவும் சொல்லியுள்ளது மிகவும் நுணுக்கமானது. செல்வத்தை வேண்டாம் என்பவர் யார்? அச்செல்வத்திற்கு ஏதுவானதால் விருந்தோம்பலையும் விரும்பிச் செய்வர் என்றதாலேயே, இவ்வாறு கூறியிருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. வள்ளுவர் உளவியல் அறிந்த புலவர் என்பதற்கு அகச்சான்றுகள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் இது ஒன்று!

இன்றெனது குறள்:
திருமகள் தானுவந்து தங்கிடுவாள் – அன்பின்
விருந்தோம்பும் பண்புடையார் இல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...