ஜூலை 15, 2012

குறளின் குரல் - 95


15th July, 2012

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
                       (குறள் 85: விருந்தோம்பல் அதிகாரம்)

Transliteration:
Viththum iDalvEnDum kollO virundhOmbi
Michil misaivAn pulam

Viththum - Seed
iDalvEnDum kollO – shoud we sow?
virundhOmbi – one who feeds the guests without fail and
Michil – the remaining food
misaivAn – eating (the remaining food)
pulam – his land.

This verse conveys a similar thought to the previous verse. Why should they even have to sow their field for plentiful harvest, when they welcome their guests, feed them first and feed themselves with the rest of the food, as their virtuous duty in life? They don’t have to! Their unfailing virtuous duty of feeding others will bless them with plenty always.

An indirect connotation is that the seeds are good deeds and the plentiful crop is the highest place in the heavens and the assured good birth in future births. Those who are unfailingly hospitable as their innate quality don’t need other virtuous deeds to be assurered of heavenly aboard and rebirth in gloriuous families.  There is a reference to this being a noble quality in Sangam anthology, Manimekalai and Kurunthogai, KurinjippATTu etc.  The verse in Manimekalai – “ yAvarum varugavendRisaiththuDan UTTi, uNdezhu michil unDu” (யாவரும் வருகவென்றிசைத்துடன் ஊட்டி, உண்டெழு மிச்சில் உண்டு).

“For those who’re unfailing hospitable hands
  What is the need to even seed their lands?”

வித்தும்  - விதையும்
இடல்வேண்டும் கொல்லோ – விதைக்கவேண்டுமா நிலத்தில் (பயிர்விளைய)?
விருந்தோம்பி – வரும் விருந்தினருக்கு சிறப்பாக உணவளித்து பசியாற்றி
மிச்சில் – மிகுந்திருக்கும் உணவை
மிசைவான் – தாம் முண்பவர்தன்
புலம் - நிலத்திலே

இதற்கு முந்தைய குறளின் பொருளினை வேறுவிதமாகக் கூறுகிற குறள் இது. விருந்தினரை வரவேற்று உணவளித்து பசியாற்றி பின்னர் மிச்சம் மிகுந்ததை உண்பவர்க்கு, அவர் நிலத்தில் விளச்சலுக்கு விதை ஏதேனும் அவர் நிலத்தில் இடவேண்டுமா? வேண்டியதில்லை. அவர்கள் நிலம் விதையில்லாமலே பயிர்வளம் பெருகியிருக்கும் என்பதைத்தான் என்பதைத்தான் வள்ளுவர் சுட்டுகிறார்.

நேரடிப் பொருளாக இல்லாமல், விதை என்பதை, நல்வினைகளின் உருவகமாகவும், அதன் விளைச்சலாக, வானுலகிலே உயர்ந்த இடமும், பின் வரும் பிறவிகளில் கிடைக்கக்கூடிய நற்பிறப்பும் குறிக்கப்படுவதாகவும் கொள்ளலாம். விருந்தோம்பும் பண்பிலே சிறந்தார்க்கு, தனியாக நல்வினைகள் வேறு எதுவுமே வேண்டாம், அவர்களின் விருந்தோம்பும் பண்பே அவர்களுக்கு வேண்டியவற்றை இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் செய்துவிடும் என்பதை இக்குறள் உணர்த்துவதாக அறியவேண்டும்.

ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்றான மணிமேகலையில் (13:113-4)  ‘யாவரும் வருகவென்றிசைத்துடன் ஊட்டி, உண்டெழு மிச்சில் உண்டு’ என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து, விருந்து புறத்திருக்க தான் உண்ணா நெறியோடு, அவர்களை உண்ணுவித்து, பின்பு தான் உண்ணுதலை சிறப்பித்திருப்பதைக்காணலாம். சங்க இலக்கியங்களான குறுந்தொகை, குறிஞ்சிப் பாட்டு இவற்றிலும், இக்குறள் கருத்தை அடியொட்டிய வரிகள் இருப்பதைக் காணலாம்

இன்றெனது குறள்(கள்)

விருந்தோம்பி மீதுண்டு வாழ்வார்க்கு – வித்தேன்?
பெருகாதோ வேளாண் வளம்!

வித்தேன் விளைய விருந்தோம்பி வீற்றார்க்கு
முத்தாய் பெருகும் நிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...