ஜூலை 12, 2012

குறளின் குரல் - 92


12th July, 2012

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
                       (குறள் 82: விருந்தோம்பல் அதிகாரம்)

Transliteration:
Virundhu puRaththAth thAnuNDal sAvA
Marundheninum vENDaRpaRRanRu

Virundhu – The guests
puRaththAth  - while wait outside the house
thAnuNDal  - feasting alone (without the guests)
sAvA – That one which guarantees no death
Marundheninum  - even if it is Elixir of life or the medicine
vENDaRpaRRu – To desire that
anRu – Is not proper.

The general meaning of this verse is thus: ‘while the guests wait outside, feasting inside all alone is not appropriate, even if the nectar or elixir of life is there to take’. It does not seem proper to refer to nectar as a medicine. Usual connotation is that nectar is sweet and pleasant and medicine is bitter and that’s how they are viewed. Also, having the nectar all alone is a selfish act. Those that are selfish will not even invite guests home and then where comes the question of feeding them?

Even if what they take is a medicine that’s going to save them from death, people of good virtue, won’t keep the guests waiting, and they would feed them as they take the medicine. Only such people have the etiquette of hosting guests appropriately.  In the Sangam poetry “puRanAnURu”, verse 182, the poet “iLam peruvazhudhi” reflects thought of not eating even if it is nectar with guests at home, without sharing. ‘amizhdham iyaivadhAyinum, inidhu ena thamiya uNDalum ilarE’. 

Auvayyar’s kondRai vEndhan, says “marundhOdAyinum virundhODu uN”. So both thoughts that of what vaLLuvar has intended and how others have interpreted are been expressed clearly in these works. My verses today also reflect both thoughts in separate verses. Regardless of how it is done, the patronage of guests and being hospitable are stressed through these verses.

Even if it is the elixir of life, don’t feast,
While the guests outside await to eat.

தமிழிலே:
விருந்து - விருந்தினர்கள்
புறத்ததாத் – வீட்டின் வெளியிலே காத்திருக்க
தானுண்டல் – தான் உண்ணுவதை
சாவா  - இறக்காமல் இருக்க உண்ணக்கூடிய
மருந்தெனினும் – மருந்தாக இருந்தாலும் (அமுதம் என்றும் கொள்ளலாம், அல்லது கொடும்பிணிக்கு மருந்து எனவும் கொள்ளலாம்)
வேண்டற்பாற்(று)  - விரும்புதல்
அன்று – முறையன்று.

விருந்தினர்கள் வீட்டின் வெளியே காத்திருக்கும் போது, உள்ளே தான்மட்டும், உண்ணுவது இறவா நிலையளிக்கும் அமுதமேயானாலும் உண்ணுதல் முறைமையாகாது என்பதே எல்லோரும் கொள்ளும் பொருள். அமுதத்தை மருந்து என்று சொல்லுதல் அவ்வளவாக ஒப்பவில்லை.  அமுதும் – இனிமையும், மருந்தும் – கசப்பும் ஒத்த பார்வைகள். தவிரவும் அவ்வாறு அமுதை தான்மட்டும் உட்கொள்வது சுயநலமிக்க செயலாகவும் கருதப்படும்.  அப்படிப்பட்டவர்கள் விருந்தினரை வீட்டுக்கு அழைக்கக்கூட மாட்டார்கள்.

தான் அருந்தவேண்டியது, தன்னை இறக்கச் செய்யக்கூடிய பிணியை அறுக்கக்கூடிய மருந்தாக இருப்பினும், அதையும் வெளியே விருந்தினர்களை காக்கச்செய்து உண்ணக்கூடாது என்றே கூறுவதாகக் கருதவேண்டும். இத்தகைய இயல்புடையவர்களே, விருந்தினரை வரவேற்று புரக்கும் பண்பாளர்களாகவும் இருப்பர். கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி தன்னுடைய புறநானூற்றுப் பாடலில்  (எண்:182), தனக்கென வாழா, பிறர்க்கென முயலுவாரைப் பற்றி ‘உண்டால் அம்ம. இவ்வுலகம் இந்திரர்; அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்..’ என்று செல்லும் பாடலில் கூறுவார்.

ஔவையும் கொன்றை வேந்தனில் கூறுவது ‘மருந்தேயாயினும் விருந்தோடு உண்க’ என்பதுதான்.  புறநானூற்றுப் பாடல் பகிர்ந்துண்ணும் பண்பையும்,  கொன்றை வேந்தன், மருந்தையும் கூட விருந்தினரோடு அமர்ந்து உண்ணும்போது கொள்வதையும் நயமாகக் கூறி, விருந்தோம்பலில் சிறப்பைக் கூறுகின்றன.  நாலடியாரும், தினமும் விருந்தென்று கூறாமல், பிறர்க்கு, குறிப்பாக தம்மிலும் வரியவர்க்கு உணவளித்து பின் உண்பதை ‘இம்மியரிசி த் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்’ என்று பரிந்துரைக்கிறது.

மேற்சொன்ன இரண்டு கருத்துக்களையும் வலியுறுத்த, இன்றைய குறள்கள் எழுதப்பட்டன.

இன்றெனது குறள்(கள்):
உண்ணேல் இறப்பழிக்கும் இன்னமுதும் – இல்புறத்து
உண்டேல் விருந்தொன் றெனின்

உண்ணேல் பிணிகொல்லும் நல்மருந்தும்– இல்புறத்து
உண்டேல் விருந்தொன் றெனின்

2 கருத்துகள்:

  1. பெயரில்லா5:19:00 AM

    இந்தத் திருக்குறளைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள கருத்துக்கு நானும் என் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

    "அமுதை தான்மட்டும் உட்கொள்வது சுயநலமிக்க செயலாகவும் கருதப்படும். அப்படிப்பட்டவர்கள் விருந்தினரை வீட்டுக்கு அழைக்கக்கூட மாட்டார்கள்."

    இப்படி சுயநலமிக்கவர்களாக இருக்கக் கூடாது, விருந்தினர்களை நல்லபடியாக கவனிக்க வேண்டும் என்றுதானே வள்ளுவர் சொல்கிறார்.

    " பிணியை அறுக்கக்கூடிய மருந்தாக இருப்பினும், அதையும் வெளியே விருந்தினர்களை காக்கச்செய்து உண்ணக்கூடாது என்றே கூறுவதாகக் கருதவேண்டும். "

    அந்த மருந்தைத் தான் மட்டும் உண்ணாமல் விருந்தினருக்கும் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? ஏன், வந்திருக்கும் விருந்தாளிக்கும் அந்தப் பிணி உள்ளதா என்ன? அமுதையாவது விருந்தினருடன் பங்கிட்டுக் கொள்ளலாம் , இல்லையா? ஆனால் மருந்து, அது இயலுமா?

    " இத்தகைய இயல்புடையவர்களே, விருந்தினரை வரவேற்று புரக்கும் பண்பாளர்களாகவும்
    இருப்பர். "

    இதைப் படிக்கும்போது பிணியாளர்கள் மட்டுமே விருந்தாளிகளை உபசரிக்கும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பது போலல்லவா தெரிகிறது?

    சரி, எனக்குப் புரிந்ததில், என் கருத்து தான் இது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லவந்தது இதுதான். சாவா மருந்து என்று அமிழ்தத்தை குறித்திருக்க வேண்டாமென்று. அமிழ்தென்று சொல்லியிருக்கலாம். ஆனால் அன்னமே பசியென்னும் பிணிக்கு மருந்து என்பதால், இங்கு மருந்து என்பதை உருவகமாகக் கொள்ளலாம். ஆனால் மருந்தே எனினும் விருந்தோடு உண் என்று சொல்லப்பட்டதற்கு என்ன சொல்லலாம்? வீட்டுக்கு வருபவர்களுக்கு நீங்கள் பிணிக்கு உண்ணும் மருந்தைக் கொடுங்கள் என்று பொருளாகுமா? வேறு யாரேனும் சொல்லியிருந்தால் கூட சொல்பவர்க்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று ஒதுக்கியிருக்கலாம். சொன்னது உலகப் பொதுமறை என்று புகழப்படும் திருக்குறளை எழுதியவர் அல்லவா.. சொற்களை விவாதங்களுக்கு இடங்கொடாமல் கோர்த்திருக்கலாம் என்பதே நான் கூற வந்தது.. மருந்து என்பதற்கு அமிழ்து என்பதும் பொருந்தியிருக்கும்.

      நீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...