9thJuly, 2012
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்
யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
(குறள் 79: அன்புடைமை அதிகாரம்)
puRaththuRuppellAm
evan seyyum yAkkai
agaththuruppu
anbilavarkku
puRaththuRuppellAm – All external faculties of body (eyes, ears, hands)
evan seyyum – what use can they be put to?
yAkkai – body
agaththuruppu –in the internal faculty
(a body)
anbilavarkku – there is no love/compassion
There is no use by the external bodily faculties that are
instrumental for the five senses and the deeds of them when the hearts of such
beings have no love in them. As already said in the chapter of “Family Life”, love
filled hearts are the dwelling places of character; they are virtuous and thay
stand the prime reason for utilty to the society.
Parimelazhagar has reasoned that this verse is tied to the
family life. His mind must be fully committed to the thought that there is no
better virtue that the virtous family life. While that’s definitely true, love is
common to all lives universally. It must definitely be understood in the
context that loveless heart can not let the body use its other faculties for
appropriate utility that is beneficial to the society. As said in the previous verse, they are
equilavent to the dead tree in a wasteland – no use in either of them.
Devoid of love in the
core of the hearts
what good is it of external body parts?
புறத்துறுப்பெல்லாம் – வெளியிலே உள்ள கை, கால், கண், செவி போன்ற ஐம்புலக் கருவிகளால்
எவன்செய்யும் – என்ன செய்ய இயலும்
யாக்கை - உடம்பின்கண்
அகத்துறுப்பு – உள்ளுரையாக இருக்கிற இன்றியமையாத உறுப்பான
அன்பிலவர்க்கு.- அன்பு என்ற ஒன்றில்லாதவர்க்கு?
அன்பு நிலைகொண்டிராத உள்ளம் என்னும் உள்ளுறுப்பு இல்லாதவர்க்கு,
வெறும் புற உறுப்புகளாக இருக்கும் ஐம்புலக் கருவிகளால் என்ன பயனுண்டு? இல்வாழ்க்கை அதிகாரத்தில் கூறியபடி, அன்புள்ளமே
பண்புள்ளமாம். அதனாலே அறவாழ்வும், அதுவே பயனுமாம்.
பரிமேலழகர் இக்குறளையும் இல்லறத்தை முன்னிருத்திச் சொல்வதாகவே
கூறியுள்ளார். அவர் உள்ளத்தில் இல்லறமல்லது நல்லறமன்று என்று ஆழமாகப்
பதிந்திருக்கவேண்டும்.
ஆனால், அன்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்பதால் அன்பில்லா
உள்ளங்கள் தங்கள் புறக்கருவிகளாகிய உறுப்புகளை தகுந்தமுறையில் பயன்கொள்ளா என்றே
பொருள்கொள்ள வேண்டும். முன்குறளில் சொல்லியவண்ணம், அன்பில்லார் உள்ளமானது
பாழ்நிலத்து பட்டமரம் போல உடலம் என்னாமல் சடலம் போன்றதால், அவ்வுடலால் வேறு பயனில்லை.
இன்றெனது குறள்:
அன்பிலா நெஞ்சத்தற்
கேது பயனவர்
என்புதோல் போர்த்துட லால்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam