8th July, 2012
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை
வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
(குறள் 78: அன்புடைமை அதிகாரம்)
Transliteration:
anbagathillA
uyirvAzhkkai vanpARkaN
vatRal maram
thaLirthatRu
anbagathillA – (anbu + agaththu illA)
– heart without the love and compassion
uyirvAzhkkai - the life of such
vanpARkaN – a land where no life possible (equal to a desert, wasteland)
vatRal –that which is lifeless
maram - tree
thaLirthatRu – equilavent to spring life (the lifeless tree in a waste land)
The life of any being without the good virtue of love and
compassion is like saying that a dead tree in a wasteland is sprouting. The
life of such beings can not sprout and is considered wasted. With the wetness
of love, in the fertile soil of mind, when character is sowed, the tree that is
life will sprout and bloom. When there is lack of love in life, such a life is “wasted
one”, is what is alluded in this verse
of vaLLuvar.
One of the vaishnavite saints, BhoodhaththAzavAr, would say “anbE
thagaLiyA, ArvamE neyyAkaga, inburugu chinthai iDu thiryaa…” In the lamp of
love, we need to fill it with interest as the ghee and sweetness of thought as
the wick to light the knowledge – which gives the good life. Hence the love is
the fundamental to good life. This is not meant of Lord Vishnu, but for all the
lives on earth.
Life of loveless hearts
is like saying a tree dead
In a wasteland is blooming,
an impossible deed
தமிழிலே:
அன்பகத்தில்லா (அன்பு + அகத்து + இல்லா) – அன்பென்னும் உணர்வு தம் மனத்தின்கண் இல்லாது
உயிர்வாழ்க்கை – வாழும் உயிர்களின் (மனிதர்களின்) வாழ்க்கையானது
வன்பாற்கண் – வற்றிய, பயிர்கள் விளைய பயனில்லாத நிலத்திலே
வற்றல் – பட்டுப்போன
மரம் - மரமானது
தளிர்த்தற்று – தழைத்து வளர்கிறது என்பதற்கு ஒப்பாம்
அன்பு என்னும் நற்பண்பு இல்லாத உள்ளங்களின் வாழ்க்கையானது,
விளயாநிலத்தின்கண், பட்டமரமொன்று துளிர்க்கிறது என்று சொல்லுதற்கு சமம். அன்பிலார்
வாழ்க்கையும் துளிர்க்காத ஒன்று. அன்பென்னும் ஈரம் பொதிந்த மனம் என்னும்
விளைநிலத்திலே பண்பு என்னும் விதை விதைக்கப்பட்டு, வாழ்க்கை என்னும் மரம்
முளைவிட்டு, வளர்ந்து, துளிர் விடும். அவ்வன்பு இல்லாத ஊள்ளங்களின் வாழ்க்கையானது,
வீணே என்பது இக்குறள் கூறும் கருத்து.
பூதத்தாழ்வார், “அன்பே தகளியா ஆர்வமே
நெய்யாக இன்புருகு சிந்தை
இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்” என்றார். அன்பெனும் விளக்கிலே,
ஆர்வமென்னும் நெய்யை ஊற்றி, இன்பத்தோடு, நெகிழ்ந்த சிந்தையோடு, ஞானச் சுடர்விளக்கேற்றினாலே நலமுள்ள வாழ்வு;
அது நாராயணனுக்கு மட்டுமல்ல, நானிலத்தோர் எல்லோருக்கும்தான்
முன்னர்கூறிய அன்பில்லா உள்ளமானது, என்புதோல் போர்த்திய
வெற்றுக்கூடு என்கிற கருத்தும், இக்கருத்தோடு ஒட்டியே இருப்பதை கவனிக்க வேண்டியது.
இன்றெனது குறள்:
பட்டமரம் பாலையில் தான்துளிர்க்கா
போலன்பும்
கெட்டவுடல் கண்ணுயிர் வாழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam