ஜூலை 10, 2012

குறளின் குரல் - 90


10th July, 2012

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
                       (குறள் 80: அன்புடைமை அதிகாரம்)

Transliteration:
Anbin vazhiyadhu – The basis of love is what keeps
uyirnilai – the life in the body
ahdhilArkku – when the love for other beings is missing in a person
enbuthOl pOrththa - bones coverd by skin
udambu - – a mere body or shell made of (bones covered by skin) equal to a dead body

In the last three verses of this chapter, vaLLuvar has emphasized liveliness of persons based on their love and compassion for others. He has called the loveless as dead tree in a wasted land or having useless parts in the body, missing the important part of heart filled with love.  In this verse specifically he says, ones who base their lives on love and compassion to others are the truly living person. Others are just shells with bones covered by skin and equivalent to corpse.

While stressing the particular virtue, it is glory, importance, the state of people devoid of that virtue, are all said to drive home the point. As a concluding statement, it is even said the lack of that virtue is equivalent to being dead, just to stress that all lives should have that virtue.

Loveless people are just lifeless and akin
To mere shells of bones covered by skin

அன்பின் வழியது – அன்பை அடிப்படையாகக் கொண்டதே
உயிர்நிலை – உடம்பிலிருக்கும் உயிர்
அஃதிலார்க்கு  - அவ்வன்பு இல்லாதவர்களுக்கு
என்புதோல் போர்த்த – வெறும் தோலால் மூடிய எலும்புகளால் ஆன
உடம்பு – கூடு மட்டுமேயாம், உயிர்வாழும் இருப்பிடமில்லை – சடலம் போன்றது.

இவ்வதிகாரத்தின் இறுதியில் உள்ள மூன்று குறள்களாலும், உயிர்மையுள்ளவர்கள் அன்புள்ளவர்கள். அதில்லாதவர்கள் உயிர் இருந்தும் இறந்து சடலமாய் இருப்பதற்குச் சமம் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது.  வள்ளுவர், அன்பில்லாதவர்களை முதலில் வீண் நிலத்தில் உள்ள பட்டமரம் என்றும், பின்பு, பயனில்லா உறுப்புகளைக் கொண்டவர் என்றும் கூறியுள்ளார்; இக்குறளில், அன்பைச் சார்ந்தே, அடிப்படையாகக் கொண்டே ஒருவர் உயிர் உள்ளவராக அறியப்படுகிறார் என்றும், அது இல்லாதவர்கள் உடலானது வெறும் தோலால் போர்த்திய எலும்புக்கூடு என்றும் கூறுகிறார்..

ஒரு பெறவேண்டிய குணம் என்கிற கருத்தை வலியுறுத்தும்போது, அதன் மேன்மை, இன்றியமையாமை, அது இல்லாதவர்களின் நிலைமை, என்று பலவிதமாக கூறிவிட்டு, இறுதியாக மிகவும் அழுத்தமாகப் பதிய வேண்டுமென்பதற்காக, அக்குணம் இல்லாதிருத்தல் உயிரில்லாப் பொருளுக்குச் சமம் என்று கூறப்படுவது, உயிர்த்திருக்கும் எல்லோருக்கும் இக்குணம் இருக்கவேண்டும் என்பதால்தான்.

இன்றெனது குறள்:
உடற்கண் உயிர்போல அன்பது வன்றி
சடலமாம் இவ்வுடல் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...