4th July, 2012
அன்புஈனும் ஆர்வம் உடைமை
அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
(குறள் 74: அன்புடைமை அதிகாரம்)
Transliteration:
Anbu Inum Arvam uDamai
adhu Inum
NaNbu ennum nAdAch
chiRappu
Anbu – Being loving and compassionate
Inum - gives
Arvam uDamai – interest for others to (to be friends one who is loving and
compassionate)
adhu - that interest in
others
Inum - gives
NaNbu - friendship
ennum – that is
nAdAch – even without going and
seeking
chiRappu – the glory (that such people will get great friends without
them seeking)
When somebody is affectionate and loving, there will be many
that will be interested in knowing them to befriend them. The interest shown by
others, will bring good friendships without even seeking on their own.
Loving and compassionate persons are devoid of vengeance and
enmity and hence many will seek their friendship. Just because they have
compassion and love, it does mean they lack the inner strength to be discerning
in their friendship. Though people that
reciprocate truly as well as self-seeking will reach out to compassionate
persons; since valluavar has specifically said, “nAdach chirappu”, he implies
great friends with great quality and support will always be with them. Since best
friends will care the best for their friends, self seeking false friends will
not even come close to the compassionate souls.
“Love and compassion
gives interest for all to seek
friendship
that is glory with those, without any seek”
தமிழிலே:
அன்பு – அன்பானது
ஈனும் - கொடுக்கும்
ஆர்வம் உடைமை – பிறருக்கு ஆர்வத்தை (அன்புடையவர்கள் மீது)
அது – அந்த ஆர்வமானது
ஈனும் - கொடுக்கும்
நண்பு - நட்பு
என்னும் – என்று சொல்லக்கூடிய
நாடாச் – தேடிச் செல்லாமல் தானே வரக்கூடிய
சிறப்பு – சிறப்பு.
ஒருவர் மற்றவரிடம் அன்பாக பழகும் இயல்பினராயிருந்தால், அவ்வியல்பு
பிறர்க்கு அவர்மேல் ஆர்வத்தை உண்டாக்கும். அவ்வார்வமானது, தேடாமலே வந்து சேரும்
சிறப்பினைப்போல, உயரிய நட்புறவுகளை சேர்க்கும் என்பதே இக்குறளின் கருத்து.
அன்புடையார் நெஞ்சத்து வன்மமும் பகையும் இல்லாது ஒழியும் ஆதலால்,
அவரிடத்தில் யாருமே நட்புகொள்ளல் எளிது. அன்பு நெஞ்சத்தர் என்றதால் அவர்
அகவலிவற்றவர் என்ற பொருளில்லை. அன்பு நெஞ்சத்தவராக இருப்பதால் அவர்களிடம் உண்மையான
அன்பை செலுத்துபவர்களும், ஆதாயத்துக்காக அன்பை செலுத்துபவர்களும் நாடுவார்கள்
என்றாலும், இக்குறளில் நாடாவரும் சிறப்பென்றதால், அப்படி நட்பைத்தேடி
வருகிறவர்களின் சிறப்பையும் கூறுகிறார். சிறந்த நண்பர்கள், சிறந்தமுறையில் தம்
நண்பரின் நலனில் அக்கறை கொள்வர். அதனால் பொய்நட்பினர் நாடார் என்பதும்
அறியப்படுகிறது.
இன்றெனது குறள்:
அன்பால் பழகுதலும்,
ஆதலினால் நண்பரெனும்
நன்மையும் அன்பின் சிறப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam