3rd July, 2012
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
(குறள்
73: அன்புடைமை அதிகாரம்)
Transliteration:
anbOdu iyaindha vazhakkenba Aruyirukku
enbOdu iyaindha thodarbu
anbODu - love and compassion
iyaindha - linked
vazhakk(u) enba – deeds of past birth
Aruyirukku – for dear life (to imply what we get in the present birth)
enbODu – the bone borne body
iyaindha - is linked to
thodarbu – the continuation in this birth.
Just like we know the
existence of our life through the activities of this bone borne body, through
somebody’s deeds, we know their compassion for those for whom they do those
deeds. In Parimelazagar’s commentary, he implies that the very purpose of this
life with the body is to live a life of love and compassion.
Though, there can’t be any
second opinion on that, the following way seems more appropriate. His
interpretation of the word, “thodarbu” is “continuation” as in “one follows
another”. But the regular usage the word “thodarbu” means “connection”, which
means how two thinks are linked or should be linked.
Another commentator, “maNakkudavar”
has said that life with this body and soul is a continuation and connected to
the kind and compassionate deeds of past birth. This alludes to Auvayyar’s
thought of “aridhu aridhu mAnidarAip piraththal aridhu”, implying the birth as
a human being is a rare gift.
Another commentator
Kaviraja Pandithar has also expressed the same thought in his commentary.
The life exhibits itself
through our body. Likewise, the compassion and love in a person is exhibited
through their kind acts. The lifeless body is a dead substance; similarly are the
deeds done without the reason of compassion and love.
So I have tried to reflect
both thoughts in two different verses today. The second verse is making more sense
if we subscribe to the karma theory and cycle of birth and death. For those who
don’t, the first verse will suffice.
“Life of this bone borne
body is continuity and a rare gift
Of compassionate life of previous births, not
mere adrift”
தமிழிலே:
அன்போடு – அன்புடன்
இயைந்த – இணைந்த,
வழக்கென்ப – முற்பிறப்பின் செயல்கள்களால் என்பர்
ஆருயிர்க்கு – அணுக்கமான உயிர்க்கு (அதனாலே)
என்போடு – எலும்புடன் கூடிய (உடலைக் குறிப்பது)
இயைந்த - இணைந்த, தொடரும்
தொடர்பு – தொடர்பாகும்
கண்ணுக்குத்தெரியாத உயிர்
இருப்பதை எவ்வாறு எலும்புக்கூடால் ஆன உடலின் இயக்கத்தின் வழியே அறிந்துகொள்கிறோமோ,
அதுபோல ஒருவர் செய்யும் செயல்களிலேயே அவரின் அன்பு உள்ளம் வெளிப்பட்டுவிடும். பரிமேலழகர் உரையில், ‘உயிரோடு கூடிய
இவ்வுடம்பின் தொடர்ச்சியினை அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று
அறிந்தவர்கள் சொல்வார்’ என்று காண்கிறது. அதாவது இவ்வுடம்பும், அதன்கண் உயிரும்
வந்தது, அன்போடு கூடிய வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் என்று கூறியிருப்பார்.
இக்கருத்தை மறுக்கமுடியாது
என்றாலும், குறளைச் சொல்லியிருக்கும் விதம் இவ்வாறு பொருள்கொள்ள தூண்டுகிறது. அவர் “தொடர்பு” என்னு சொல்லைத் தொடர்ச்சியென்று
பொருள் செய்திருப்பார். ஆனால் அச்சொல்லை, “ஒன்றோடு, மற்றொன்றுக்கு உண்டான பிணை”
என்றலே சரி.
மணக்குடவர் என்பார் எழுதிய
உரையில், “முற்பிறப்பில் அன்போடு செய்த தொடர்களின் பிணையாக, தொடர்ச்சியாகத்தான்
இப்பிறப்பில் இவ்வுயிரோடு கூடிய உடல்” என்று சொல்லியிருப்பது, “தொடர்பு” என்பதனை
இரு பொருள்களிலும் உணர்த்துவதும் பொருந்திவருகிறது. முற்பிறப்பின் நல்வினைப்பயனே,
இப்பிறப்பில் கிடைத்தற்கரிய மானிடப் பிறவி என்கிற கருத்துக்கு இயைந்து வருகிறது.
அவ்வையும் “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று கூறியதைக் கருதவேண்டும்.
கவிராஜ பண்டிதர் என்பாரின்
உரையும் இக்கருத்தை அடியொட்டியே வருகிறது.
மணிமேகலையில், “அன்புடை ஆருயிர் அரசர்க்கருளிய என்புடை யாக்கை இருந்தது
காணாய்” (25:170-171) என்று வருவதும் இதுபொருள் பற்றியே.
உயிர் தானிருப்பதை, என்பாலாகிய
ஒரூடல் வழியேதான் உலகறியச்செய்கிறது. அதைப்போல், அன்பென்பதும் அதுவேற்ற
செயல்களின்வழிதான் உலகறியவேண்டும். அதனால், செய்யும் செயல்களில் எல்லாம் அன்பு
நிறைந்ததாக இருக்கவேண்டும். எவ்வாறு
உயிரில்லாத மெய் என்பது இறப்போ, அன்பின்காரணம்பற்றி செய்யாத செயல்களும்
செய்யாதொழிந்த்தற்குச் இணை.
இன்றெனது குறள்(கள்):
உடலின் வழியே உயிராகும் – ஆற்றும்
கடன்கள் வழியது அன்பு.
இப்பிறப்பின் என்புடலும்
இன்னுயிரும் – அன்புவழி
முப்பிறப்பின் நற்பயனே
யாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam