2ndJuly, 2012
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
(குறள் 72: அன்புடைமை அதிகாரம்)
Transliteration:
anbilAr ellAm
thamakkuriyar anbudaiyAr
enbum uriyar piRarkku
anbilAr – those who don’t have love for other lives
ellAm - everything
thamakkuriyar - want as their own (out
of utter selfishness)
anbudaiyAr – Those whose hearts are filled with love and compassion for
all
enbum – even their bone ( just a symbolic reference)
uriyar piRarkku – will dedicate to others to use, for over all
good.
In Hindu Mythology, there is story of how Indra acquired his
weapon Vajraayutham. To vanquish the demon Vrudhirasura, Indra needed a very
powerful weapon. At the behest of Lord Vishnu, he went to a very selfless sage “Dadhichi”, revered
amongst the greatest of sages and is portrayed as an example that no sacrifice
is too great when the result is the good of the world.
He
gave up his life for the Devas to make use of his backbone, to create the
greatest of weapons “VajrAyutha” for Lord Indra, to vanquish evil asura “VrithrA”.
His bones symbolize the sacrifice and strength
together and the weapon “VajrAyutha”is the symbol in the India’s highest gallant
award "Parm veer chakra" , the backbone, literally and symbolically,
the sacrifice for the country.
The
true love is selfless. Only those who don’t know the potent weapon in love
think everything belongs to them. They
are selfish and devoid of love, not even because, they love themselves somuch.
If they did, they would atleast relalize that their avarice and lack of love would
lead to their own distruction eventually and would do try to mend themselves
out of self-love. Those whose hearts are
filled with love for the otherlives, do know the meaning of sacrifice. There is
a popular saying that some people would even go to the extent of using their
flesh as footware for those they love.
This
verse is another example of vaLLuvar was well versed and had deep rooted belief
in the Hindu mythology to take this implied referece of “Sage Dadhichi”. To use the sacrifice of bone as the ultimate
symbol of love is not done by living persons and not even dead persons. The story
of King Sibi to give his flesh for justice for a cow, and this story of giving
the backbone for good to prevail can be discarded as mere stories or the
examples of greatest virtues taken from lives of people to drive home the
virtues.
“People of Love and
compassion sacrifice even their own bone
The loveless, selfish seek all, only for them and think of none”
தமிழிலே:
அன்பிலார் – தன் மனதின்கண் பிறவுயிர்கள் மீது சற்றும் அன்பே இல்லாதவர்கள்
எல்லாம் – தான் பார்க்கின்ற எல்லா
வளங்களும்
தமக்குரியர் – தமக்குமட்டுமே உரியது, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாத
இயல்புடையவர்கள்
அன்புடையார் – மனதின்கண் பிறர்மீது அன்பு நிறைந்திருப்பவர்கள் (மன்னுயிரை
தம்முயிராக நினைப்பவர்கள்)
என்பும் – தம்முடைய எலும்பு கூட
உரியர் பிறர்க்கு – பிறர்க்கு உரியதாக்க தயங்காதவர்கள் (அதாவது தன்னை அழித்தும்
பிறர்க்கு உதவுபர்கள்)
புராணங்களிலே, இந்திரன் வஜ்ராயுதத்தைப் பெற்ற வரலாறு பேசப்படுகிறது.
விருத்திராசுரனை வதைக்க, வலிமைமிக்க ஆயுதம் இந்திரனுக்குத் தேவைபட்டபோது,
திருமாலின் வழிகாட்டுதலில், மிகவும் தவவலிமையும், சற்றும் ஆசை, பொறாமை இல்லாமல்
தனக்கென வாழா தகைமை உடைய ததீசி முனிவரின்
முதுகெலும்புக்கே அவ்வலிமை உண்டென்பதை அறிந்து, அவரைச் சென்றடைந்து வேண்டவும்,
அவரும் சற்றும் தயங்காது, தன் உயிரைமாய்த்துக்கொண்டு, அவ்வெலும்பை இந்திரனுக்கு
ஈந்ததார். அவ்வெலும்பைக்கொண்டு வஜ்ராயுதம் என்கிற வலிமைமிக்க ஆயுதத்தை
உருவாக்கிக்கொண்டான் இந்திரன்.
இந்திய அரசின் உயர்ந்த விருதான “பரம் வீர் சக்ரா”வில் உயர்ந்த தியாகத்துக்குm, வலிமைக்கும் அடையாளமாக,
தீயசக்திகளை அழிக்கும் வலிமைமிக்க ஆயுதமான இவ்வெலும்பினால் செய்யப்பட்ட
வஜ்ராயுதத்தின் படமே உள்ளது என்பது அறியப்படவேண்டிய செய்தி.
அன்பின் இயல்பினை, தனக்கென வாழாத் தன்மையை கூறும் குறள் இது. அன்பென்பதை அறியாதவர்கள், எல்லாமே
தமக்குமட்டுமே உரியது என்ற இயல்பினை உடையவர்கள். அன்பிலார் என்றதனால், அவர்கள்
தங்கள்மீது அன்பு உடையவர்கள் என்றும் ஆகாது. குறைந்த அளவு அவர்கள் மேலாவது
அன்பிருந்திருக்குமானால், தங்களின் சுயவிருப்ப இயல்பினால் இறுதியில் தமக்கே
துன்பம் என்றாவது உணரக்கூடும். அன்பே
கடவுள் என்பதன் பொருளை அறியாதவர்கள் அவர்கள். மனதிலே அன்பு
குடிகொண்டிருப்பவர்களில் சிலர் தியாகத்தின் உச்சத்துக்கும் சென்று தங்கள் உடம்பின்
துன்பத்தையும் கருதாது, பிறருக்காக உழைக்கக்கூடியவர்கள். அதனாலேயே, அவர்கள் தங்கள்
“தோலைக்கூட செருப்பாகச் செய்து போடுவர்” என்கிற பொதுச் சொற்றொடர் வழக்கு
இருக்கிறது.
வள்ளுவர் புராணங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் கையாண்டார்
என்பதற்கு இக்குறளும் ஒன்று. எலும்பு
படைத்த எல்லோருமே அன்பு குடிகொண்ட நெஞ்சங்களாக இருந்தாலும், தங்கள் எலும்பை
பிறர்பயனுக்காக தங்கள் உயிரை மாய்த்தோ அல்லது தங்கள் இறப்புக்குப் பிறகோ விட்டுச்செல்வார்கள்
என்று சொல்லமுடியாது. புராணங்களில் கூறப்பட்டிருக்கிற ததீசி முனிவரின் வரலாற்றின்
அடிப்படையிலேதான் இவ்வெடுத்துக்காட்டு கையாளப்பட்டிருக்கவேண்டும்.
இன்றெனது குறள்:
தன்னலத்தார் அன்பிலார்
– என்பும் பிறர்க்கெனவாழ்
நன்னலத்தார் அன்புடை யார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam