22nd July, 2012
அகன்அமர்ந்து ஈதலின்
நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
(குறள் 92: இனியவை கூறல் அதிகாரம்)
Transliteration:
Aganamarndhu – With a happy and willing heart
Idhalin – gifting, donating
nandRe – better than that
muganamarndhu – having a pleasing smile
Insolan - a person of sweet
words
AgappeRin – If one is so ( இன்சொலன், a person of sweet words)
Better than gifting somebody with a heart filled with joy of
giving is, having the sweet words with a smiling face – the verse says such.
It is difficult to understand why just saying sweet words is
better than being benevolent. Is it possible to give gifts to somebody, without
a smiling face or sweet words? Or is it going to be a happy receiving for the
person who receives such a gift or help without seeing the smiling face or
sweet words.
We often hear that even if we are not able to help someone in
dire need, at least soothing words are helpful. Even this is to stress the
point that, it is easy for everybody to do and helping is again subject to ones
ability to be helpful, not because benolvence is not desired or required.
But, we can infer a sutble point here. Benevolence in thought is
not possible for everyone. Looking at somebody’s smile or to hear others say
good words about the person who is benevolent, somebody may be so. Naturally
praise from people is an agent of benevolence for some people, again not to be
generalized. It is the ability of have’s than have not’s. But the sweet words with the smiling demeanor
are possible for everyone, but only a few practices. It should be in the nature
of the person or should be practiced as a virtue. Elevated souls have it naturally.
May be it is this that has been hinted by vaLLuvar.
Better than gifting
with the golden heart
Is a word with smiling
face, that’s sweet
தமிழிலே:
அகன்அமர்ந்து – உள்ளம் உவந்து
ஈதலின் – தானம், கொடையளிப்பதை விடவும்
நன்றே - நல்லதாம்
முகனமர்ந்து - முகமலர்ச்சியுடன்
இன்சொலன் - இனிய சொல்லைக் கூறுபவராக
ஆகப்பெறின் - இருந்தால்
உள்ளத்திலே உவகையோடு, பிறர்க்கு தானங்கள் செய்து ஈதலிலும், புன்னகையோடு
கூடி முகமலர்ந்து இனிய சொற்களைக் கூறுபவராக இருந்தல் மேலானது என்கிறார் வள்ளுவர்
இக்குறளில்.
இனியசொற்களை உடையராயிருத்தல் நல்லதே என்றாலும், அது எவ்வாறு
மனமுவந்து செய்யும் தானத்தை விட மேலானது என்பது விளங்கவில்லை. மனமுவந்து செய்யும்
தானமும், முகமலர்ச்சியோடு இல்லையெனில், தானம் பெற்றவருக்கு நிறைவைத் தருமா?
அப்போது இனிய சொற்களைச் சொல்லாமல் போனால்தான் தானபெற்றவர் மகிழ்வுறுவாரா?
நாம் பேச்சுவழக்கிலே, துன்பத்திலிருப்பவருக்கு, பொருளுதவி செய்வதை
விட ஆறுதலாக பேசினாலே போதுமானது என்று சொல்லக்கேட்கிறோம். இதைக்கூட
துன்பத்திலிருவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அவர்கள் மனதை அமைதிப்படுத்துகிற
சொற்களே தேவை என்பதால்தான், அதற்காக பொருளுதவியே தேவையில்லை என்பதற்காக அல்ல.
ஆனாலும், ஒரு நுண்ணிய கருத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம் இக்குறளிலிருந்து.
தானம் என்பது இருப்பவர்கள் செய்யக்கூடிய ஒன்று. இருக்கும் போது ஈத்து உவக்கும்
பெருமையினால் சிலர் ஈகையைச் செய்யக்கூடும். அது பிறருடைய புகழ்ச்சிக்கு
காரணமாயிருத்தலால், ஈவோர்க்கு இரண்டுவிதத்திலும் மகிழ்வைத்தருவது இயல்பே. அது எல்லோருக்கும் கூடுவதல்ல. இனிய சொல்லராயிருத்தல்
இயல்பான பண்பினை ஒட்டியது. அது எல்லோர்க்கும் எளிது. எப்போதும் இயல்வது. ஆனாலும்
எல்லோராலும் பழக்கத்தில் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. ஒருவருடைய உயரிய பண்பாலேயே அது
இயலும்.
இன்றெனது குறள்:
முகமலர்ந்து சொல்கின்ற இன்சொல்லே மேலாம்
அகம்நிறைந்து ஈவதி லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam