24th June, 2012
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
(குறள் 64: மக்கட்பேறு அதிகாரம்)
amizhdhinum AtRa inidhE tham makkaL
siRukai aLAvia kUzh
amizhdhinum AtRa - more than nectar
inidhE - sweet
tham makkaL – their own little children’s
siRukai – baby hands
aLAvia – played with
kUzh - food
This verse gives clues to
the delicate sense of aesthetics of vaLLuvar. Usually whatever their liitle
children (babies) do, parents are at awe and enjoy every bit of it. From the
time a child turns, crawls, takes his/her first baby steps, every step of growing up is thoroughly enjoyable to
everyone, especially to parents. It is a true blessing to have children in
one’s life.
This gives another clue to
the question, if vaLLuvar had any children. If he had a wife in vAsuki (could
be completely a fictional character), he sure must have had children. Next two
verses ("makkaL mei thInDum",
“kuzhal inidhu yAzh inidhu” ) give ample clues to the fact he indeed had
children and the expressions are definitely from his own personal experience.
Who knows whatever happened to his progeny and his successive generations? Did
they live gloriously too and made their parents proud? Were they successful
poets like vaLLuvar?
When their little children
mess up and play with food with their little, tender fingers, the messed up
food tastes even better than nectar and is not discarded as waste. We all know,
if the same is done slightly grown up children, then it is matter of
irritation. So he has used the word “siRu kai”, meaning tender baby hands. This
verse and the following two verses are especially wriiten about little babies
in this chapter.
What is obvious is that
vaLLuvar had the heart of a little child with excitement and awe at these
little things and had the ability to express them so beautifully.
“Food messed up and played with baby’s hands taste
Better than even the
Nectar and to parents, is no waste”
அமிழ்தினும் ஆற்ற – அமுதத்தை விட மிகவும்
இனிதே - இனிமையானது
தம் மக்கள் – தன்னுடைய சிறு குழந்தைகளின்
சிறுகை - பிஞ்சுக் கைகள்
அளாவிய – அளைந்து விளையாடிய
கூழ் – கூழானது.
இக்குறளிலே வள்ளுவரின்
நுணுக்கமான அழகுணர்ச்சியும், இரசிக்கும் மனமும் தெரியவருகிறது. குழந்தைகளின்
எல்லாவிதச் செயல்களுமே பெற்றோர்களுக்கு பிடித்தமானவை. அவர்கள் கவிழ்ந்துகொள்ளும்
பருவம், தவழும் பருவம், தத்தித்தத்தி தளர்நடை போடும் பருவம் என்று ஒவ்வொரு கட்ட
வளர்ச்சியுமே இரசித்து மகிழ்வது பெற்றோர்களின் தவப்பயன் எனலாம்.
அதிலும் தன்னுடைய சிறு
குழந்தையின் பிஞ்சு விரல்கள் சோற்றில் அளைந்து விளையாடும் போது, அவ்விரல்கள்
அளைந்த கூழும் அவர்களுக்கு அமுதையும் விட இனிமையானதாக இருக்கும். சற்றே
வளர்ந்தபருவத்துப் பிள்ளைகள் இதையே செய்தால், அவற்றை பெற்றோர்கள்கூட
பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். அதனாலேயே “சிறுகை”, என்றது.
இக்குறளின் மூலமும், அடுத்து
வரும் இரு குறள்கள் (“மக்கள் மெய்த்தீண்டல்”, “குழலினிது, யாழினிது”) மூலமும்
வள்ளுவருக்குக் குழந்தைகள் இருந்தது தெளிவாகிறது. வாசுகி என்னும் மனவி
இருந்தாளென்றால், இவர்களுக்குக் குழந்தைகளும் இருந்திருக்கவேண்டும். வள்ளுவனின்
சந்ததியினர்கள் என்னவானார்கள்? வாழ்வாங்கு வாழ்ந்தார்களா? தம்தந்தை
எந்நோற்றான்கொல் எனும்படி செய்தார்களா என்ற கேள்வி எழுகிறது.
தானே உணர்ந்து தெளிந்தால்தான்மட்டுமே,
இவ்வளவு அழகாக அவற்றைப்பற்றி கூறியிருக்க முடியும். தவிரவும், குழந்தைகளின்
குறும்புகளை இவ்வளவு நூணுக்கமாக இரசிக்கவும் ஒரு குழந்தை மனமும் வேண்டும். அது வள்ளுவனுக்கு நிச்சயமாக்
இருந்திருக்கிறது.
இன்றெனது குறள்:
தன்குழவி தன்சிறுகை சோற்றின் துழவிதரும்
இன்னமுதிற் கீடுண்டோ சொல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam