ஜூன் 25, 2012

குறளின் குரல் - 75

25th  June, 2012

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
                     (குறள் 65: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
makkaLmei  thInDal  uDaRkinbam matRuavar
soRkETTal inbam sevikku

makkaLmei  -  body of own children
thInDal  - hugging (the children in utmost affection)
uDaRkinbam  - feels good and pleasant to parents
matRuavar – also their
soRkETTal  -listening to (their) babble
inbam – is sweet and pleasant
sevikku – to ears.

Poet BharathiyAr in his “Chinnanchiru kiLiyE” song sees Kannan as “Kannamma”, the child. He feels like just lifting and hugging that little child who comes before him dancing; when he kisses on her head, he feels so proud like her parent; when he embraces her, he gets ecstatic with overwhelming parental love. The expression of his parentlal bliss has been so well captured in his words.  To feel rapturous over a child is an acceptable state for every parent not to be construed as vain-pride.

Hugging the children that come to parents running with their baby gait, is about giving the feeling of safety and showering unbridled affection. The expression gives an indescribable pleasure that is only experienceable, not explainable. Their babble is greater treat to ears and vaLLuvar will liken it to nectar in the following verse.

Unlike other religion, the Hindu religion allows the devotee to see the Godhead as a parent, friend, lover, and a child, which gives a closeness and bonding. Repeatedly many poets have addressed the Godhead as one of the above. Also, we see the God in the child. Our cultural mindset has always been broad to let us think ourselves as world citizens, not confined to any man made regional boundaries, and everyone is our relative. Wherever we look, we see the manifestation of God, and more than anybody, a child is considered close to God because of his viceless, all forgetting, forgiving nature.  In essence, a child is an embodiment of such broad thinking. Hence their closeness is closeness to God for parents and may be that’s the reason their embrace is a pleasure and their words are treat to ears.

As said earlier, vaLLuvar must have been a proud parent and enjoyed the parenthood to express with such finesse.

“Sweet it feels to parents, the tender hugs of the child
So it is, to hear the sweet babble uttered by the bud.”

தமிழிலே:
மக்கள்மெய் – குழந்தைகளை உடலோடு அள்ளி
தீண்டல் – தாயன்பின் மிகுதியிலேஅணைத்து ஆரத்தழுவுதல்
உடற்கின்பம் – பெற்றோர்களின் உடலுக்கு இன்பத்தைத் தரக்கூடியது (
மற்றுஅவர் – தவிரவும் அவர்களின்
சொற்கேட்டல் – மழலைச் சொல்லைக் கேட்பது
இன்பம் - இனிமையானது
செவிக்கு – செவிகளுக்கு (பெற்றோர்களின்)

அள்ளி அணத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே’, ‘உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கிவளருதடி’, ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி’ என்றெல்லாம் பாரதியார், உள்ளத்தில் பொங்கிவரக்கூடிய தாயன்பிலே (வாத்ஸல்யம்), கண்ணனை, கண்ணம்மாவாக பாடியிருப்பார். உன்மத்தம் என்பது சாதாரண வழக்கிலே கூறுவதுபோல ஒரு கிறக்கதையும், மயக்கத்தையும் கொடுப்பது. தன்படைப்பைத் தானே உச்சிமுகந்துகொள்ளும் ஒரு அனுபவம். இது பெற்றோர்களுக்கே உண்டான ஒத்துக்கொள்ளக்கூடிய, தற்பெருமை என்று சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சி நிலை!

தத்தித் தளர்நடையிட்டு வரும் குழந்தைகளை, வாரியணைத்து நெஞ்சாரத் தழுவுதல், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கும், பெற்றோர்களுக்கு பாச நெகிழ்வைத்தரும்.  அத்தகைய தழுவலானது, பாசநெகிழ்வோடு, அவர்கள் உடலுக்கும் ஒரு இன்பத்தைக்கொடுக்கும். இந்த உணர்வை பெற்றோர்கள் அனுபவிக்கமட்டுமே முடியும், சொற்களில் விவரிக்க இயலாது.  அதேபோல, இளம் குழவிகள் பேசும் மழலை மொழிகளோ, செவிகளுக்கும் பேரின்பத்தைத் தரக்கூடியது.

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு வித்தியாசமான வழிபாட்டுமுறை இந்து மதத்திலே உண்டு. இறைவனை தந்தையாக, தாயாக, தோழனாக, நாயகனாக, நாயகியாக, குழந்தையாக உருவகித்து, வழிபடுதல் ஒருவித அணுக்கத்தை இறைவனோடு ஏற்படுத்துகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றே பார்ப்பது நம்மில் ஊரிய ஒன்று. யாதும் ஊரே, யாவரும் கேளிர், என்பது போல், பார்க்கும் இடங்களில் எல்லாம் பரம்பொருள், பார்க்கும் உருவும் இறையே என்னும் போது, குழந்தைகளின் பாச அணைப்பு, இறைவனின் நெருக்கத்தைத் தருவதாகவே உணருவர் பெற்றோர். பாரதியின் கண்ணன்/கண்ணம்மா பாடல்களும் அத்தகையவயே. மற்ற எந்த உருவகத்தைவிடவும், குழந்தையென்ற உருவகம், பெற்றோருக்கு,  உரிமையும், பெருமிதமும் தருகிறது.

முன்குறளிலே சொன்னது போல, வள்ளுவர், பெற்றோனாக இருந்து, தான் மகிழ்ந்து அனுபவங்களைத்தான் எழுத்தில் வடித்துள்ளார் என்பது இக்குறளாலும் உறுதிப்படுகிறது.

இன்றெனது குறள்:
மெய்க்கமுதாம் தங்குழவி மெய்த்தழுவல் – கேள்விக்கு
மெய்யமுதாம் அம்மழலைச் சொல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...