23rd
June, 2012
தம்பொருள் என்பதம்
மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
(குறள் 63: மக்கட்பேறு அதிகாரம்)
Transliteration:
thamporuL enbatham
makkaL avarporuL
thamtham vinayAn varum
thamporuL enba - One’s wealth is
tham makkaL – his own offsprings, progeny
avar poruL – what the children get in their lives as wealth (virtue,
family, education etc.)
thamtham - their own
vinayAn - deeds of good and bad
varum – because of that, will
come
Wealth for a person is having good children. This happens due to
good deeds of the person during the lifetime. Good deeds of parents will make
the children live well. Their bad deeds will adversely affect the children.
This is what has been summarized in this verse.
Most commentators have given a confused picture of this verse.
The seed for the same is in the phrase “avar poruL” and the way it has been interpreted.
Does it mention the children or the parents themselves? The phrase “avar poruL” could mean the
children of the children (indirect reference) or the desirable attributes of
the children such as good character, education, family etc,. To alleviate this confusion, let’s try to look
at this verse in two more perspectives.
Alternate meaning 1: The wealth for parents
is their own children. When the deeds of children are vitruous, then, they will
have good offsprings. The idea expressed here seems so ordinary to waste a
verse, and don’t think, vaLLuvar would have wasted a verse like this.
Alternate meaning2: The wealth for parents is their own children. The wealth
earned by those children such as result of the children’s good deeds, will
benefit the parents not only in the present birth, but in future rebirths too.
This is in line with ideas that have been already expressed in previous chapters.
“Wealth for parents is
their progeny who earn wealth of goodness
To make their parents live in this life and
beyond, with happiness.
தம்பொருள் என்ப – ஒருவருடைய செல்வம் எனப்படுவது
தம் மக்கள் – அவருடைய மக்கள் செல்வங்களே
அவர்பொருள் – அம்மக்கள் ஈட்டக்கூடிய செல்வமானது (குணம், குலம், கல்வி,
கேள்விச் செல்வங்கள்)
தம்தம் – அவரவர் வாழ்விலே
வினையான் – செய்யக்கூடிய வினைப்பயன்களாலேயே
வரும் – அவரைச் சேரும்
ஒருவருக்குச் செல்வம் (பொருள்) என்று சொல்லிக்கொள்ளக்கூடியது, நல்ல
மக்கட்செல்வம்தான். இதுவும் ஒருவருடைய வினைப்பயனாகவே அமையும். தாய் தந்தையர்களின்
நல்வினைகளே அவர்களுடைய மக்கட்செல்வங்களை வாழ்விக்கக்கூடியவை. அல்வினைகளின்
தீப்பயன்களும், அவர்களுடைய மக்கட்செல்வங்களை பாதிக்கும். இதுவே இக்குறள் சொல்லும் கருத்தாம்.
உரையாசிரியகளின் உரை மிகவும் குழப்புவதாக உள்ளது. குழப்பத்துக்கு
வித்து, “அவர்பொருள்” என்பதும் அதை எப்படி பொருள் செய்வது என்பதிலும்தான். இது
மக்களைச் சுட்டுகிறதா, இல்லையெனில், பெற்றோர்களைக் குறிக்கிறதா என்பதை ஒட்டியே
குழப்பம். அவர் பொருள் என்பதை மக்களின் பொருள் - அவர்களது மக்கட்செல்வமாக இருக்கலாம்,
அல்லது மக்கட்செல்வத்தின் குணம், குலம், கல்வி, கேள்வி இவற்றைக் குறிப்பதாக
இருக்கலாம். குழப்பத்தைத் தவிர்க்கும் விதமாக கீழ்கண்டவாறு வெவ்வேறு விதமாகப்
பொருள் கொண்டு பார்ப்போம்
வேறு பொருள் 1: ஒருவருக்குச் செல்வமென்பது அவரது மக்கட்செல்வம்தான். அம்மக்கட்
செல்வத்தின் வினைகளின் பயன்களாக, அவர்களின் குலத்தோன்றல்கள் தோன்றுவர். – இது
மிகவும் சாதாராணக் கருத்து. இதற்காக வள்ளுவர் ஒரு குறளை வீணாக்கியிருக்கமாட்டார்.
வேறு பொருள் 2: ஒருவருக்குச் செல்வமென்பது அவரது மக்கட்செல்வம்தான். அம்மக்கட்செல்வம்
ஈட்டிய பொருளாம் நல்வினைகள் பெற்றோரைச் சென்றடையும் – இது ஓரளவுக்கும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும். பெற்றோரின் நல்வினைகள் நல்ல பிள்ளைகள்.
அப்பிள்ளைகளின் நல்வினைகள் பெற்றோருக்கு மறுமையிலும் நல்ல பிறப்பைத்தரும் என்பது
முன் அதிகாரங்களில் சொன்ன கருத்தையொட்டித்தான் இருக்கிறது.
இன்றெனது குறள்:
செல்வமெனக் கொண்டாடும்
தம்மக்கள் ஆகிடும்தன்
நல்வினையால் செல்வமென வாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam