19th
June, 2012
புகழ்புரிந்
தில்இலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு
நடை.
(குறள் 59: வாழ்க்கைத்துணை நலம்
அதிகாரம்)
Transliteration:
Pugazhpurin
dhil ilOrk killai igazhvArmun
eRupOl
pIdu nadai
pugazhpurin(dha) –
seeking glory by being virtuous and chaste (seeking glory for the right reason
is good!)
il ilOrkku – one who
does not have such wife
illai - they don’t have
igazhvArmun
– before the people that speak derisively
eRupOl – like a
lion
pIdu
nadai – proud gait, walk
When the wife does not conduct herself
virtuous and chaste, all the blame, mock, scoff and sneer will be on her
husband. The world would even call him to be an Ox, in a derogatory, derisive
way. He will not have the gait of a lion which is the symbol of pride and dignity.
When a country loses its glory the head of
the country is pointed as the sole reason for that. Such is the case, when a
business establishment does not function properly; its leader is blamed for
failures. Likewise, when a family does not function properly, its sole blame
goes to the head of the family, the husband.
Every set up in society, administrative,
business and family has to have a lead person; the head of the household is a
husband. His support and life long partner is wife. If she does not seek the
right glory by staying immaculate in her conduct and is supportive to her husband
to lead the life smoothly for others to be happy and proud, then her husband
will be a subject of redicule. They will call such husband as spineless and
even as senseless as Ox (highly unfair to that animal!), according to
ParidhiyAr, another commentator of kuraL.
My verse for today has been written to reflect both thoughts.
“A wife not seeking glory with impeccable
conduct, is no cheer
For her man to keep gait like lion but an Ox
for people to sneer”
புகழ்புரிந்(த)
– தன்னுடைய கற்பு நெறி மற்றும் நற்குணங்களால், இவள் நல்ல மனைவி என்னும் புகழை கொண்ட
இல் இலோர்க்(கு)
– மனைவி இல்லாதவர்க்கு
இல்லை - இருக்காது
இகழ்வார்முன்
– அவர்களை (அவர்கள் மனைவி காரணம் பற்றி) இகழ்ந்து, தூற்றிப் பேசுபவர்களின் முன்
ஏறுபோல் –
சிங்கம் போல
பீடு நடை –
பெருமைமிக்க நடை.
தன்னுடைய மனைவி கற்பு நெறி மற்றும் குடும்பத்தலைவி
என்பாளுக்குரிய நற்குணங்கள் காரணமாக வரும் புகழை விரும்பாமல் நடப்பாளேயானால், கணவனை
அதுகாரணமாக இகழ்ந்தும், கேலி செய்தும், எருமைமாடு (சொரணையில்லாதவன் என்கிற பொருளில்)
போகிறது என்று அஃறிணைப் உயிரோடு இணை வைத்தும் மற்றவர்கள் பேசுவார்கள். அவனுக்கு சிங்கத்தைப்போன்ற
பெருமைமிக்க, தலை உயர்த்தி நடக்கும் நடையும் இராது.
ஒரு நாடு தன்னுடைய பெருமையை இழக்குமானால், அதற்கு
அந்நாட்டின் தலைமையே காரணமென இகழ்வர். ஒரு வர்த்தக நிறுவனம் சரிவர இயங்காமல் போனால்,
அதற்குக் காரணமாக அதன் தலைமை பொறுப்பில் இருப்பவனையே உலகம் சொல்லும். அதுபோல ஒரு இல்லம்
சரிவர நடைபெறாமல் போனால், அந்த பழி இல்லத்தரசனையே சேரும்.
ஒவ்வொரு கட்டமைப்பிலும், அதற்குரிய தலைமை வழிகாட்டி
என்று ஒருவர் உண்டு. குடும்பம் என்னும் கட்டமைப்புக்கு குடும்பத்தலைவன் என்பவன் தலைமை
வழிகாட்டி, அவனுக்குத் வாழ்வில் துணை நிற்பவள் இல்லாள். அவள் நற்புகழை விரும்பாதவளாக
இருந்தால், அது தொடர்பான இழிவுகள் கணவனையே
சாரும். அவன் சமூகத்தினர்முன் நிமிர்ந்த நடை கொள்வதென்பது இயலாது. பரிதியார் என்னும்
உரையாசிரியர், அத்தகையோரை மக்கள் “எருது போல் திரிகின்றான்” என்று ஏசுவர் என்கிறார்.
இவ்விரண்டையும் இணைத்து எழுதப்பட்டது என்னுடைய இன்றைய குறள்
இன்றெனது குறள்:
புகழேந்தி வாழாவில் கொண்டார்க் கெருதின்
இகழுண்டு ஏறுநடை இல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam