17th
June, 2012
சிறைகாக்கும்
காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும்
காப்பே தலை.
(குறள் 57: வாழ்க்கைத்துணை நலம்
அதிகாரம்)
Transliteration:
siRaikAkkum
kAppevan seyyum magaLir
niRaikAkkum
kAppE thalai
siRai
kAkkum – keeping as in jail (like environment)
kApp(u) – (and) protecting them
evan
seyyum – what can it accomplish?
magaLir – for
women
niRai
kAkkum - that which keeps
them in chaste and virtuous conduct
kAppE – is the
only protection and
thalai – is the
first and foremost (for women)
The summary substance of this verse is:
Keeping the women in the chaste and virtuous path is the only way to protect
them and their honor. Caging them and raising fence around them in the name of
protecting their honor is indeed demeaning and can not accomplish what is
intended.
A subtle idea is effectively conveyed through
this verse. Only a husband who helps his wife to travel the virtuous path of
family life can keep her chaste and pristine. By enslaving the wife and
treating her as a property to be fenced from other view can only wound the
honor and self respect of a wife and can result in the opposite of intended.
A woman in a satisfied family life can keep
herself chaste. Though the concept of chastity is applicable to both a man and
his wife (as has already been mentioned), a woman being the guiding force of a
household, it has been mentioned specifically for her. By treating a wife as a
slave, a husband may lose her respect eventually and that stems in undesired
side effects getting lured to greener pastures in some cases After all human
mind has the right and ability to evaluate constanty what is best for it.
Being
chaste is the best protection for women – A fence
To
protect them could do what but their honor offense?
தமிழிலே:
சிறைகாக்கும் - சிறைபோன்ற சூழலில் இருத்தி
காப் (பு) - பாதுகாப்பது (பெண்களை)
எவன் செய்யும் – என்ன பயனைத்
தரக்கூடும்?
மகளிர் - பெண்களின்
நிறைகாக்கும் – கற்பு நெறியில்
நிறுத்ததுகிற
காப்பே - பாதுகாப்பே
தலை – முதலும்,
இன்றியமையாத ஒன்றுமாகும்
இக்குறள் உணர்த்தும் கருத்து இதுதான். பெண்களை நல்ல
கற்பு நெறியில் ஆற்றுப்படுத்தல் மட்டுமே அவர்களுக்கு உரிய பாதுகாப்பாம். அவர்களின்
மானத்தை குறைக்கிற வகையில், இழிவு படுத்துகிற வகையில், காவல் வைப்பது எந்த விதத்திலும்
சரியான பாதுகாப்பு ஆக முடியாது.
இக்குறள் உணர்த்தும் நுண்ணிய கருத்து, பெண்ணை மதித்து,
அவள் நல்வழி நடக்கும்படியாக உடனிருந்து உதவும் கணவனே, அவளை நல்ல கற்பு நெறியில் நிறுத்தமுடியும்.
பெண்களை அடிமைப் பொருளாக நடத்துவதன் மூலம் அதை சாதிக்கமுடியாது.
பெண்ணின் மனது தன் கணவனோடு வாழும் வாழ்க்கையில்
நிறைவாக இருந்தாலே, அவள் கற்பு நெறியில் இருந்து ஒழுகமுடியும். இதுவும் இருபாலருக்கும்
பொதுவான கருத்தாக இருப்பினும், பெண்கள் குடும்பத்தை வழிநடத்துப்பவர்களாக இருப்பதால்,
அவர்களுக்காக குறிப்பாகச் சொல்லப்பட்டது. அடிமைபோல நடத்துவதின் மூலம், கணவன்பால் மதிப்பு
குறைந்து, இழந்து, மனைவி அவ்வுறவை சிறிதளவு வெறுத்தாலும், அது கற்பு நெறி தவற ஒரு தூண்டுதலாக
அமைந்துவிடும்.
இன்றெனது குறள்:
பூட்டிவைத்து
காக்கபயன் என்பெண்ணைக் – கற்பணியில்
பூட்டிவைப்ப
தொன்றே முதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam