16th
June, 2012
தற்காத்துத்
தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச்
சோர்விலாள் பெண்.
(குறள் 56: வாழ்க்கைத்துணை நலம்
அதிகாரம்)
Transliteration:
thaRkaththu
– preserving the chastity of self
without faltering
thaRkonDAR
- one who is married to self
pENi - saving him from any badmouthing by
others about her
thagai chAndRa
– to be proud of
soRkAththus
- keeping the marital vows exchanged,
without vacillating
sOrvilAL –
living in a household without failing in her duties
peN – is the
worth lady and a good housewife.
A wife first should stand herself in the
chaste, virtuous path; this requires utmost resolve and grip of will. She must
keep her husband in good stead without bringing him the blame from the society either
by her conduct or by letting him go astray. Commentaor Parimelazhagar implies by
saying “thaRkkondAR pENi: (தற்கொண்டார் பேணி) that she should feed her husband
well to keep him healthy which seems like a matter in light vein in a serious
verse like this.
Talking about a serious matter, vaLLuvar
would not have diluted by saying so. The word “soRkkAththu” implies the marital
vows exchanged by the husband and wife that they would be true to each other
and take part in pleasures and pains of each must must be between them. Even if
the husband is offcourse, wife must bring him back to the path of righteousness
with her soothing ways.
A woman is one with all thes traits and leads
the family lifes is fit to be called so.
Self preserving
and staying chaste, saving the honor of her man
And without
faltering in the marriage vows exchanged, is a woman
தற்காத்துத் – தன்னையும்
கற்புநெறி தவறாமல் காத்துக்கொண்டு,
தற்கொண்டாற் – தன்னை மனையாளாகக்
கொண்ட கணவனையும்
பேணித் - எவ்வித
குறைச்சொல்லுக்கும் ஆளாகாது காத்து
தகைசான்ற – பெருமைகொள்ளத்தக்க
சொற்காத்துச் – ஒருவருக்கொருவர்
செய்துகொண்ட திருமண உறுதியினைக் காப்பாற்றிக்கொண்டு
சோர்விலாள் – தவறாமல்
இல்லறத்தில் இருப்பவளே
பெண் – ஒரு நல்ல
பெண்மணி, மற்றும் குடும்பத்தலைவியுமாவாள்.
ஒரு குடும்பத்தலைவி, தன்னை கற்பு நெறிதவறாத வழிகளில்
இருத்திக்கொள்ளவேண்டும் முதலில். இது மனவுறுதியை, திண்மையைக் காட்டுவது. பிறகு தன்னை
கொண்டவனுடையனும் எவ்வித குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு காக்கவேண்டும். பரிமேலழகர் கூறுவதுபோல உணவு முதலியவற்றால் கணவனைக்
காப்பது என்பது, சிறிதும் குறளின் உயர்பொருளுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது.
முக்கியமான செய்தியைப்பற்றிபேசும் போது உணவைப் பற்றிப்
பேசி, தன்னுடைய சொல்லவந்த கருத்தை நீர்த்துப் போக செய்திருக்கமாட்டார் என்று நம்புவோமாக.
“சொற்காத்து” என்றது, திருமணத்திலே ஆண்மகனும், பெண்மகளும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும்
மணவினை உறுதிமொழி பரிமாற்றத்தினை. அவ்வுறுதியைக்
காப்பாற்றும் பொறுப்பும் பெண்ணுக்கே உண்டு. கணவன் சற்று பாதை விலகி நடந்தாலும் கூட
அவனை நல்வழிபடுத்தகூடிய சக்தியின் வடிவம்தான் பெண்.
இத்தனை குணநலன்களையும் பெற்று, தன்னுடை இல்லறத்தையும்
முறைபட நடத்துபவளே, பெண் என்கிறார் வள்ளுவர்.
இன்றெனது குறள்:
தன்னெறியோ
டுற்றவன்மாண் காத்து மணவினைச்சொல்
பொன்னாகப்
போற்றுவதே பெண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam