ஜூன் 15, 2012

குறளின் குரல் - 65


15th June, 2012

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
                   (குறள் 55: வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம்)

Transliteration:
Dheivam thozhAL kozhunan thozhudhezhuvAL
Peyyanap peyyum mazhai

Dheivam – The Gods
thozhAL  - does not worship (Gods)
kozhunan – her husband
thozhudhezhuvAL – wakes up worshipping her husband (his supporti)
Peyyanap – if she commands the skies to rain
peyyum – pour it will be of
mazhai – plenty rains.

When a chaste wife that worships her husband everyday as she wakes up, orders the heavens to rain, heavens  heed as Gods’ command immediately, even if she doesnot worship Gods.

This verse accords Godhood to chaste women. To exemplify a virtue, it is an accepted poetic licence to speak about something in an exalted way, even if it is far from reality as we see. This verse has been used as an often quoted example to show the strength of a wife’s virtuous, chaste conduct, to let women and the world know the glory of chastity.

Two out of great epics of Tamil literature, Silappadikaaram and Manimekalai have quoted this verse directly, endorsing the thought. The author of Manimekalai calls vaLLuvar as “poyyil pulavar” meaning “poet who doesn’t lie”.

Auvayyar, in her Kondrai Vendan, says, “karppenappaduvadhu sotRriRambAmai”, which means that the chastity is preserverd when both the man and his wife respect and live by the marital vows they mutually exchanged during their wedlock. She also means it in a way that is same for both man and his wife. Though it is same for both, it is kept as an exalted virtue especially for a woman.

The mythological characters such “NallaththangAL”, “NaLAyini”, “SIthA” and “KaNNagi” are glorified and spoken about even today for they adhered to the this virtue. Among the many mythological heros, Rama has a special place for his chastitiy and being wedded to one wife. For the same reason he is acknowledged as “PurushOththamA”.

Giving in to heart breaks leading to broken marriages and divorces have become a common place occurrence in today’s society. This situation has led to the word chastity attaining archaic status and even the imaginative spree of the world of poets and morality advocates.

Chaste wife wakes up worshipping not Gods, but her husband
commands the skies to rain and they have to heed her demand

தமிழிலே:
தெய்வம்  - தெய்வத்தை
தொழாஅள்   -  தொழாவிட்டாலும்
கொழுநன் – தன் கணவனை
தொழுதெழுவாள் – துயிலெழுந்ததும், தன் கணவனை வணங்கி எழும் மனைவி
பெய்யெனப் – அவள் “பெய்க” என்று விண்ணுக்கு இடும் ஆணையிலே
பெய்யும்  -  வானமானது  வாரி வழங்கிவிடும்
மழை – மழையை.

கற்புநெறி நிற்கும் மனைவி, தெய்வங்களைத் தொழாவிட்டாலும், துயிலெழும் வேளையிலே தன்கணவனை தெய்வமாகத் தொழுது பின் தன்னுடைய நாளைத் தொடங்குவாளானால், அவள் வானத்தை ஆணையிட்டு, மழை பெய்யட்டும் என்றாலே வானமும், அது தெய்வத்தின் கட்டளை என்று பணிந்து மழையை வாரிவழங்கிவிடும்.

இக்குறள் கற்புநெறியைத் தெய்வத்தன்மைக்கு ஒப்பு நோக்கிக்கூறுவதாகவே கொள்ளவேண்டும். ஒன்றின் உயர்வைச் சொல்லி அதன் சிறப்பை வலியுறுத்த இவ்வாறு ஏற்றிச்சொல்வது சரியே.

மிகவும் மேற்கோளாகச் சொல்லப்படும் குறள்களின் இதுவும் ஒன்று. பெண்களின் கற்பின் வலிமையை குறிப்பாக அவர்களுக்கும், மற்றும் உலகிற்கும் உணர்த்துகிற ஒன்றாகும். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சமகால இலக்கியங்கள். இவையிரண்டுமே, இக்குறளை மேற்கோளாகக் காட்டியுள்ளன.

சிலப்பதிகார கட்டுரைக்காதை இறுதிவெண்பாவில் இவ்வாறு வருகிறது.

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணினதால் – தெய்வமாய்
மண்ணக மாந்தர் கணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து”


இக்குறளையும், குறள் எண் 58-ல் கூறப்பட்ட ‘பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு’ என்கிற கருத்தையும் ஒருங்கே சொல்லியுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனாரும், மணிமேகலையின் 22-ம் அத்தியாயத்தில் (சிறை செய்காதை) இக்குறளையே மேற்கோளாகக்காட்டி, அதில் வள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்” என்று சுட்டியிருப்பார்.

”தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்;
பெய்எனப்பெய்யும் பெருமழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!”

“கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை” என்னும் கொன்றைவேந்தனின் சொற்றொடரின்படி, திருமணத்தில் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உறுதிமொழியிலே வழுவாது ஆணும் பெண்ணும் நடத்தும் இல்லறத்திலே, கற்புநெறி காக்கப்படுகிறது.

கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்றாலும், பெண்ணுக்குத்தான் அது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. நல்லத்தங்காள், நளாயினி, சீதை, கண்ணகி என்று கற்புக்கரசிகளை இதிகாசங்களும், வரலாறுகளும் இன்னமும் போற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.  இராமவதாரனும் அத்தகு ஒழுக்கநெறியில் இருந்ததாலேயே அவனுக்கு சிறப்பும் அவனை ஆண்களில் உயர்வானவன் என்கிற பொருளில் புருஷோத்தமன் என்றதும்.  மனமுறிவுக்கும் வெகு எளிதாக இடங்கொடுத்து, மணமுறிவுகளை சாதாரணமாக நிகழ்வாகக் கொள்ளும் இன்றைய சமூகச் சூழலில், கற்பின் திறம் கையாலாகாதவர்களின் கற்பனைத்திறமாகக் கருதப்படுவது வருந்தற்குரியது.

இன்றெனது குறள்:
கொண்டானைத் தன்னிறையாய் கும்பிட் டெழுமனையாள்
விண்ணாணை பெய்க்கும் மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...