ஜூன் 14, 2012

குறளின் குரல் - 64


14th June, 2012

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
                   (குறள் 54: வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம்)

Transliteration:
peNNiR perunthakka yAvuLa karppennum
thiNmai unDagap perin

peNNiR – better than wife
perunthakka –what other greatness of (for a man)
yAvuLa -  is there?
karppennum – if the chastity is
thiNmai – the unwavering nature
unDagapperin – of hers.

What other wealth or glory is greater for a man whose wife is of unwavering chastity? – This is what is conveyed in this verse.

When the divroces have become the legalized norm of the world we live in today, chaste relationships are becoming a rarity and chastity in thoughts is only known to ones own mind. It is not wise to look at the chastity at the physical level anymore. It is a thing of heart and strong willed minds.

A deeper and sincere understanding of people in and bonded by marriage, keeps them truthful to each other.  When the life style changes are widespread and drastically different with shrinking relationships in every possible way, relationships have become a matter of barter. More and more wedlocks come with a key in the hand of each partner and anyone of them can unlock and walk away from the marriage for a reason or none. Coupled with selfish attitudes equally found in couples, and with nefarious designs of others that outwardly portray good intensions, to serve their needs, sustaining marriages has become a question for the present and future generations.

But the trigger for this verse must have come from vaLLuvar’s observation of relationships of those days at least in a few people to write this.

What other wealth can be better than a woman,
Of unwavering chastity as wife in the life of a man?

தமிழிலே:
பெண்ணிற்  -  மனைவியை விட
பெருந்தக்க – மேன்மையைத் தரக்கூடியது (ஓர் ஆடவனுக்கு)
யாவுள – எது உண்டு, இருக்கமுடியும்?
கற்பென்னும் – அவளிடத்தில் பத்தினித்தன்மை என்னும் புனிதத்தன்மை
திண்மை – உறுதியாக
உண்டாகப்பெறின் -  தோன்றி நிலைபெறுமானால்

கற்பு நெறியிலே நிலைமாறாமல் உறுதியாக நின்று, இல்லறத்தில் இருக்கும் பெண்ணைவிட அவளுடைய கணவனுக்கு, பெருமையும், உயர்வையும் தரக்கூடியது எதுவாக இருக்கும்?

மணமுறிவுகள் மிகுந்து, சட்டவழி பிரிவுகளுக்கு வழி ஏற்பட்டுவிட்ட காலமிது.  கற்பென்பதை உடலளவில் மட்டும் பாராமல், உள்ளத்தின் அளவிலும் பார்க்கவேண்டும். திருமண உறவிலிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் உறவின் ஆழம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவைக்கும்.  நம்முடைய வாழும் முறைகள் மாறிப்போய், உறவுகள் எல்லாம் சுருங்கிவிட்ட போது, தனி ஆண் பெண் இவர்களின் சுயநலங்களும், சொந்த விருப்பு வெறுப்புகளில் நாட்டமும், தூபம் போடுபவர்களினால் போடும் ஆட்டமும், திருமண உறவுகளையே பண்டமாற்று உறவுகளாக்கி விட்டன.

ஆனால் இக்குறளும் பிறக்க, வள்ளுவர் அவர்காலத்திலேயே உற்று நோக்கிய சில உறவுகளின் நிலைதான் காரணமாயிருத்தல் வேண்டும்.

இன்றெனது குறள்:
கற்புநெறி நிற்கின்ற பொற்புடைய உற்றவளின்
பெற்றிடும் மேற்பெருமை ஏது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...