ஜூன் 13, 2012

குறளின் குரல் - 63


13th June, 2012

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
                   (குறள் 53: வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம்)

Transliteration:
Illadhen illavaL mANbAnAl uLLadhen
illavaL mANAk kaDai
Illadhen – (illadhu en?) what does not one have?
illavaL –  if his wife (of a man)
mANbu AnAl  - is full of  virtuous in conduct and deeds (and  leads the household so)
uLLadhen –What would one have? (He is as worse of as a poor in everything)
illavaL  - –  if the wife (of a man)
mANAkkaDai – is not virtuous and a person of good deeds

This verse is in a question form echoing the thoughts expounded in the previous two verses. If a wife is not virtous in thoughts and deeds and is the leading lamp of life, even if a man has all that he needs in terms of wealth and social status, they all amount to nothing. After asking this as a question, he gives the answer saying   even if a man does not have wealth or social status, with a virtuous wife that comes as a support in everyway, there is nothing that a man needs. The support of such a wife will elevate him to higher status in the society.

What is “mAnbu”? As it has been mentioned in the previous chapters, taking care of the people that come seeking support, such as ascetics, guests, poor people, and relatives and be an exemplification of virtuosity in every aspect of family life are all collectively called “mAnbu”.

Though the first three verses seem to say the samething in different forms, it may be taken that it has been done so to insist virtuosity for a housewife which is the beginning point of societal virtuosity.

What could a man need having, a wife full of values and virtues?
What could he possess,  if to his shame, the same she eschews?

இல்லதென் – ஒருவனுக்கு இல்லாத ஒன்றுதான் என்ன?
இல்லவள் -  அவனுடைய இல்லத்தரசி
மாண்பு ஆனால் -– நற்குணங்களும், செய்கைகளும் நிரம்பியவளாக குடும்பத்தை செலுத்துவாளானால்
உள்ளதென் – ஒருவனிடத்தில் இருப்பது தான் என்ன? (எதுவும் இல்லாத வறியவனே!)
இல்லவள் - அவனுடைய இல்லத்தாள் (இல்லாதவள் ஆகிறாள் என்றம் பொருளும்)
மாணாக்கடை? – நற்குணங்களும், செய்கைகளும் இல்லாதவளாக இருந்தால்

சென்ற குறளின் அடியொட்டியே இக்குறளும் உள்ளது. ஒருவனுக்கு வாழ்க்கையில், அவனுடைய மனைவி நன்னெறிகளும், குணங்களும் இல்லாதிருந்தால், மற்ற சிறப்புகளெல்லாம் இருந்தும் இல்லாததற்கே ஒப்பென்றார். இக்குறளில் அதையே கேள்வியாகக் கேட்டுவிட்டு, அப்படிப்பட்ட குணவதியாக, குலவிளக்காக இருப்பாளேயானால், அவனுக்கு இல்லையென்று சொல்லக்கூடிய ஒன்றுதான் என்றும் கேட்கிறார். அதாவது நல்லமனைவி வாய்த்த ஒருவன் பொருளவிலும், சமூகத்திலும் உயர்ந்தவிடத்தில் இல்லாமல் இருந்தாலும், எதுவுமே இல்லையென்கிற குறை அவனுக்கு இல்லை என்று கூறுகிறார்.

மாண்பு என்பது முந்தைய அதிகாரங்களில் கூறியதுபோல் துறந்தார், விருந்தினர், தம்மை அண்டின வறியவர்கள், சுற்றம் என்று அனைவரையும் அரவணைத்து பேணுதலாகும். முதல் மூன்று குறள்களிலும் ஒரே செய்தியை மூன்றுவிதமாகச் சொல்லியிருந்தாலும், கருத்தை வலியுறுத்தும் நோக்கத்துடனே சொல்லியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றெனது குறள்:
கொண்டாள் குணத்தளானால் இல்லையில் - இல்லாயின்
கொண்டது யாதுண்டு சொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...