A note and Caution!
Due to a very busy day, could not finish what I intended to post yesterday. A day later..! Here is what should have been yesterday! Which means, there will be one more before the end of today!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Due to a very busy day, could not finish what I intended to post yesterday. A day later..! Here is what should have been yesterday! Which means, there will be one more before the end of today!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
12th June, 2012
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
(குறள் 52: வாழ்க்கைத்துணை நலம்
அதிகாரம்)
Transliteration:
manaimAtchi illALkaN illAyin vAzhkkai
enaimAtchi thAyinum il
manaimAtchi - the virtues of a good family
life (household)
illALkaN - in the wife of household
illAyin – not there (the virtues of good household)
vAzhkkai – the life of (for the husband)
enaimAtchi thAyinum – whatever other great things are there in
his life,
il – don’t actually count or mean anything (to
the husband)
All other
forms of wealth and glory mean nothing for a man, if his wife does not lead the
family with her virtuous conduct. Through this verse, vaLLuvar establishes that
the wife of a man is the root anchor of a successful and virtuously lived
family life.
The
best wife, keeps her husband in good path, bring glory to either sides of the
family, the home she grew up and the home she entered into for life. This thought may be construed as the male
supremacy thinking. But it is an
acceptance of female as the source and great force behind creation, fostering,
as well destruction and placing them in the place of highest importance for
sustenance of human story.
The
word “sthree” in Sanskrit also indicates “sthira” which means anchor force or
stability. The word “manaivi” in Tamil implies, she is the boss of the
household. It is interesting to note that there is no equivalent word (manaivan!)
for a husband in Tamil. “Manai” means “house”
in Tamil and also the status of heavenly abode, which everyone aspires for. A
good housewife is the one who leads kindly light to both, a good family life as
well as the heavenly abode for a man when he passes away.
A good
girl of virtuous upbringing, becomes a good house wife, bears the
responsibility to keeps her husband and children in good path of living. When
there is a setup of household, by following everyone’s designated duties, the
setup functions as a well-oiled machine. If one of them goes astray or slips in
the designated duties, then the life becomes a loss and wasted with strife.
The
lady of the house is called the light of the family, because the family should
tread the path of her light’s shine.
Regardless of other glories, with a
virtueless wife
A life for a man is, wasted with worries and
strife
மனைமாட்சி – இல்லறத்தின் பெருமை மிக்க நெறிகளின்படி ஒழுகி நடத்தல்
இல்லாள்கண் – இல்லத்தரசியிடம்
இல்லாயின் – இல்லாமல் போகுமானால்
வாழ்க்கை - வாழ்வில்
எனைமாட்சித் தாயினும் – மற்ற எத்தகு பெருமைகள் இருந்தாலும் அவை
இல் – இல்லாமலிருப்பதற்கே
ஒப்பாகும்
இல்லறத்திற்குத்
தேவையான குணநலன்களும், சிறப்புகளும், ஒழுக்க நெறிகளும் இல்லாத மனைவியிருந்தால், அவருக்கு
வேறு எந்தவித செல்வமும் சிறப்புகளும் இருந்தாலும், அவை சிறப்பாக கொள்ளபடாது. இக்குறளின்
மூலம் மனைமங்கலத்தின் ஆணிவேராக மனைவியைச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.
ஒரு சிறந்த
மனைவி தன் கணவனை நல்வழி நிறுத்தி, தான் புகுந்த குடிக்கும், பிறந்து வளர்ந்த குடிக்கும்
பெருமை சேர்ப்பவள். இது ஆண் மேலாதிக்கச் சிந்தனை
வழி கருத்து என்று எண்ணுவோரும் இருப்பர். ஆனால், இது ஆக்கவும், அழிக்கவும் வல்ல மாசக்தியாக
பெண்ணை உருவகிப்பதைத்தான் காணமுடிகிறது.
வடமொழியிலே
கூட “ஸ்த்ரீ” என்ற சொல் அவர்களுடைய ஸ்திரத்தன்மை (நிலைத்தன்மையை) காட்டுவதாக உள்ளது.
தமிழ்ச் சொல் மனைவி என்பது, மனை, அல்லது வீட்டுக்குத்தலைவி என்கிற பொருளிலேயே வழங்குகிறது.
அதுமட்டுமல்லாது வீடு என்பது மோட்சம் என்பதாலும், அப்பதவி அடைவதற்கும் நல்ல மனைவியே
காரணமாகு என்பதாலும்தான் அவள் மனைவி எனப்படுகிறாள்.
ஒரு பெண்
குலவதியாகவும், குணவதியாகவும் வளர்ந்து, நல்ல குடும்பத்தில் புகுந்து, தன் கணவனை நல்வழியில்
இருந்தி, நல்ல மக்கள் செல்வங்களைப் பெற்றெடுத்து, அவர்களை நல்ல குடிகளாக வளர்த்து ஆளாக்குகிற
பொறுப்பில் இருப்பவள். ஒரு கட்டமைப்பு என்று
வரும்போது, அதில் அவரவர்க்கு வகுக்கப்பட்ட கடமைகளை, அவரவர் செய்வதுமூலமே அக்கட்டமைப்பு
குலையாது. குடும்பமும் அத்தகைய கட்டமைப்புதான். கணவனுக்கென சில கடமைகளும், மனைவிக்கென
சில கடமைகளும் உள்ளன. அவற்றில் அவர்கள் தவறும்
போது இல்லறம் தவறாகிப் போகிறது.
குடும்பத்தின்
குலவிளக்கு என்று மனைவியைச் சொல்வதும், அவள் காட்டுகிற ஒளிப்பாதையிலே குடும்பம் நடக்கவேண்டும்
என்பதால்தான்.
இன்றெனது குறள்:
வாழ்வில் குணமில் மனைவியினால் மற்றிருந்தும்
பாழ்தான், சிறப்புமிலைக் காண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam