ஜூன் 11, 2012

குறளின் குரல் - 61


10th June, 2012

A note of caution and perspective:

This chapter is all about the attributes of a wife in a family life. Society has always had certain norms about roles of a man and a woman in the family context and certain expectations, which could be construed as biased and onesided in today’s life of equality in everything. The more we place the economic prosperity in the fore, the more we lose perspectives of the root of sustenance of human race, the family life.  Some of the verses of this chapter, (may be all of them) are bound to be distasteful to new age women and even brand vaLLuvar as male chauvinistic. But he wrote what he wrote in the day and age, where the defined roles of men and women were different and we need to leave it at that.

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
                   (குறள் 51: வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம்)

Transliteration:
Manaiththakka mANbudaiyaL AgiththaR koNdAn
vaLaththakkAL vAzkkaith thuNai

Manaiththakka  - Having the attributes of a for a good family life
mANbudaiyaLAgith – Wife who is having such attributes
thaRkoNdAn – Her husband’s
vaLaththakkAL  - being aware of what income her husband brings home and able to conduct household within
vAzkkaith thuNai – is the true companion of life for a husband

Tamil language has certain nice words conined to refer to a wife in general, which also fits the context of a husband. “vAzhkkaith thuNai” is a word which means the “support in life” typically refers to a wife, but can also mean a husband to the wife.

This verse says that a true support in life for a husband is a wife who has all the attributes of a very good housewife, lead the family life with all its virtues, within the means of her husband’s earnings to the best extent possible.

Until the dawn of 20th century, education for women was not prevalent and popular, even in western and other world culture. However, history reveals, that there have been women as rulers and with high erudition in all cultures. They were far and few, though. 

When the societal wheel spun, education for women became a norm and necessity and todays economic  aspirations have led them to be equal partners of earning for a successful family (at least economically prosperous) households. 

The verses in this chapter should be interpreted in the common contex only for most part.  Women of today, still in most parts of the world, do a dual role of working women as well as successful housewives.

Some of the attributes such as chastity for wife (only), the glory of a wife worshipping husband, given in this chapter are not going to be received well by liberated and equality seeking women of today and even may be distasteful. But we need to think of them as thoughts of the vaLLuvar’s era.

Adhere to the virtues of household, lead a fulfilled family life
Well with earnings of her husband, is a true supporting wife”

மனைக்தக்க – இல்லறத்திற்கு உரித்தான குணநலன்களும், நற்செய்கைகளும்
மாண்புடையள் ஆகித் – கொண்ட மதிப்பிற்குரியவளாகி, (மனைவி)
தற் கொண்டான் – தன்னை மணந்துகொண்டவன் (இல்லத்தரசர், கணவன்)
வளத்தக்காள் – வளத்துக்கும், ஈட்டும் பொருளுக்கும் ஏற்ற அளவுக்குத் தகுந்தார்போல், இல்லறத்தை நடத்துபவள்
வாழ்க்கைத் துணை – வாழ்க்கையில் கண்வனுக்கேற்ற துணையாகும்

வாழ்க்கைத் துணையென்பவள் இல்லறத்திற்கு உண்டான அத்துணை குணநலன்களையும், நற்செய்கைகளையும் கொண்டவளாய், தன் கணவனின் வருவாய்க்குத் தகுந்த அளவிலே குடும்பத்தைச் சிறப்பாக நடத்திச் செல்பவளாக இருக்கவேண்டும் என்பதே இக்குறள் சொல்கின்ற கருத்து.

இருபதாம் நூற்றாண்டு வரையிலும் கூட, நம் சமூகத்தில் பெண்ணை குடும்பத்தலைவியென்னும் ஒரு வைப்பிலே இருத்தித்தான் பார்த்திருக்கிறோம். மேலை நாட்டு சமுதாயங்களிலும் கூட அதே நிலைதான்.  பெண்களுக்குக் கல்வியறிவு வேண்டுமென்கிற நிலைப்பாடு ஏற்பட்டு, அது வலுவடைந்து, அவர்களும் ஆண்களுக்கு நிகரானவர்களாக சமூகத்தில் எல்லாபொறுப்புகளையும் ஏற்று சிறப்பாக நடத்தமுடியும் என்று ஆனபிறகு, குடும்பத்தலைவி என்னும் பொறுப்போடு மற்றவற்றையும் செய்கிற நிலைதான் அவர்களுக்கு இன்று.

பொருளாதார சூழ்நிலைகளும், வாழ்க்கையின் வசதி என்கிற தூண்டுதல்களும் (தூண்டில்களும்), பொருள் ஈட்டலை பெரும்பாலான பெண்களுக்குக் கட்டாயமாக்கிவிட்டிருக்கிற இன்றைய சூழலில், இக்குறளை இல்லறத்தை இணையறமாகச் செய்யவேண்டிய கணவன் மனவி இருவருக்கும் பொருந்தும் வகையிலேதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.  கற்பு, கணவனைத் தொழும் பெண்ணின் சிறப்பு என்பவற்றை பெண்களுக்கு மட்டும் உரியதாகச் சொல்லப்போகும், இவ்வதிகாரம் தமிழறிந்த பெண்களில் எத்தனைப்பேருக்கு இனிக்கப்போகிறது?  ஆதலால், இவ்வதிகாரத்தை, காலத்தைச் சேர்ந்த கருத்துக்கள் என்றே கொள்ளவேண்டும்.

இன்றெனது குறள்:
இல்லறத்தின் மாண்புடனே தன்கணவன் ஈட்டுதலில்
நல்லறதில் வாழ்வாள் துணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...