ஜூன் 03, 2012

குறளின் குரல் - 54


3rd June, 2012

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
                                (குறள் 44: இல்வாழ்க்கை அதிகாரம்)

Transliteration:

Pazhiyanji pAththUn uDaiththAyin vAzhkkai
Vazhiyenjal enjAndRum il

Pazhiyanji  - being afraid of  smear and slander
pAththUn  - share wealth and food and people as listed in the last three verses.
uDaiththAyin  -  is able to (share)
vAzhkkai Vazhi -  the lineage of (one who shares wealth and food as above)
yenjal – diminish, shrink and completely wiped out
enjAndRum il – never will happen

Most commentaries on this verse have been based on Parimelazhagar’s commentary. For the word “pazhiyanji” (பழியஞ்சி), Parimelazhagar has interpreted as, slander coming out of earning in improper, unethical ways.  

This could simply be an inference in his mind, not how vaLLuvar had meant.  We could interpret this as ‘fearing slander and derision because of not sharing the wealth with people mentioned in the previous verses’.  That would be in line with the thoughts expressed in the previous verses also.

If we take the meaning, that the generations of the family people will not fade or die away, if they share their wealth and food with others, it means that  living a virtual family life would not only save the family people but their future generations as well.  Anotherway to interpret this would be direct and simple that, the family life of people that share their wealth and food with others would not diminish nor die in vain.

In Kk.vA.Ja’s research commentary, he has given some interesting explanation for the word “pAthUN”. Just like the word “thoguppu” and “migundhu” became “thOppu” and “mIndhu” respectively, the word “paguththu” became “pAthUN”.

“Sharing the grain and gain and shunning blameworthiness
  The family people never diminish nor vanish in wilderness”

தமிழிலே:

பழியஞ்சிப் – பகுத்து உண்ணாமையினால் வரும் பழி (பரிமேலழகர் உரைப்படி,  பழிசேரும் வழிகளிலில்லாது, முறையான வழிகளில் பொருள் ஈட்டி)
பாத்தூண் – செல்வத்தின் பயன்களை முன்னர் சொன்ன குறள்களில் உள்ளவர்களுடன், பகுத்து உண்டு
உடைத்தாயின் – வாழ்வாராயின் (இல்லறத்தார்)
வாழ்க்கை வழி – அவருடைய குடி வழியினர்
எஞ்சல் – தேய்வதோ, சுருங்குவதோ, அழிவதோ
எஞ்ஞான்றும் இல் – எப்போதுமில்லை.

இக்குறளின் பொருளை பெரும்பாலும் பரிமேலழகரின் உரையை ஒட்டியே எல்லோரும் எழுதியுள்ளனர். “பழி அஞ்சி” என்பதற்கு, பரிமேலழகர், ‘பொருளை முறையற்ற வழிகளில் ஈட்டுவதால் வரும் பழி’ என்று பொருள் செய்துள்ளார். இது முற்றிலும் அவர் மனதின்கண் உதித்த ஒரு எண்ணமே தவிர வள்ளுவர் அந்தப் பொருளில்தான் என்று எடுத்துக்கொள்ளமுடியாது. தனக்குள்ள செல்வத்தினைப் பிறரோடு, குறிப்பாக முன் மூன்று குறள்களில் கூறியுள்ளவர்களோடு பகுத்து, உண்ணாது, அவர்கள் அறவழி நிலைபெற செய்ய உதவாமல் போனால் வரக்கூடிய பழியஞ்சி என்றே எடுத்துக்கொள்ள முடியும். அது முந்தைய குறள் கருத்துக்களை அடியொட்டியும் இருக்கும்.

இக்குறளில் அவ்வாறு பகுத்து உண்பவர்களின் குடிவழியினர் எக்காலத்திலும் தேய்வதோ, சுருங்குவதோ அல்லது மறைவதோ இல்லை என வள்ளுவர் கூறுகிறார் எனக்கொண்டால், தருமம் தலையை மட்டுமல்லாது, தலைமுறைகளையும் காக்கும் என்று பொருளாகும். அல்லது பகுத்து உண்பவரின் இல்லறவாழ்வின் வழியிலே எவ்வித குறைவோ, தேய்வோ, சுருங்குதலோ, அல்லது ஒழிவதோ இல்லை என்று நேரடிப்பொருளாகவும் கொள்ளலாம்.

கி.வா.ஜ அவர்கள் உரையில், பாத்தூண் என்பதற்கு தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. தொகுப்பு என்பது தோப்பு எனவும், மிகுந்து என்பது மீந்து எனவும் ஆனதுபோல, பகுத்து என்பதும் பாத்து என்றாயிற்று.

இன்றெனது குறள்:
நேர்வழியில் ஈட்டிபகுத் துண்பார் குடிசெழிக்கும்
நீர்வதில்லை என்றென்றும் காண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...