2nd
June, 2012
தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு
ஓம்பல் தலை.
(குறள் 43: இல்வாழ்க்கை
அதிகாரம்)
Transliteration:
thenpularththAr
dheivam virundhokkal thAnendRangu
iympulathARu
Ombal thalai
thenpularththAr – our
ancestors that passed away
dheivam – the God
virundhu – guests,visitors
okkal - relatives
thAn - self
endRangu iympulathARu - the listed virtuous duties meant for each of
the five mentioned above
Ombal - doing without failing, properly
Thalai – is important
and foremost.
As expressed for the last verse, in this
verse also, excluding the renounced, poor, students in academic pursuit, and
the old people that are in the retirement phase, but including the one from the previous
verse, viz,. the ancestors, the departed
souls, with another four sets of people, he has said, doing the virtuous duties
ordained for those five, are the first and foremost for the people of family
life. (I know it is a long and complex sentence, but read it couple of times!)
This is the gist of of this verse. It is
imperative and dutyof foremost importance for family people to do the virtuous
duties meant for the ancestors, the God, the guests, relatives and self. Why “self” is also included? Unless
the family persons takes care of themselves, they can not possibly do justice to their duties towards
the rest mentioned here and that’s why the “self” is also included.
In the research edition of ki.vA.jA, I have
in my possession he has quoted from the commentary of “SilappadikAram” by Adiyarkku
nallAr. Adiyarkku nallAr has comprehensively included all the nine different
groups of people mentioned in the first three verses of this chapter trying to
explain virtuous ways (SilappadikAram 14:11 – Commentary)
The differences in the first three verses of
this chapter:
- In the first verse, he mentions that for the three people (students, retired people, and the renounced) the family people are the support.
- In the 2nd verse, he says for the renounced, poor and our ancestors (the ones who passed away), to perform the appropriate duties, family are the only support. (renounced is common between the 1st and 2nd verse)
- In the third verse, he mentions about the duties for the five sets of people - the ancestors, the God, guests, relatives and the self, (the ancestors is common between the 2nd and 3rd verse) being the foremost of duties for the family people.
This must have been an unavoidable tricky situation for vaLLuvar,
because of the self imposed condition and restriction of 10 verses per chapter
and only a couplet of 7 words adhering to strict veNpA meter! I can’t think of
any other better reason!
“Doing the virtuous duties meant for our
ancestors, the God, guests, relatives
And self, without fail and as they must be, are
the foremost of all directives”
தமிழிலே:
தென்புலத்தார் – பித்ருக்கள்
எனப்படும் இறந்த நம் முன்னோர்கள்
தெய்வம் - கடவுள்
விருந்து – வீட்டிற்கு
வரும் விருந்தினர்கள்
ஒக்கல் - சுற்றத்தார்கள்
தான் – தன்னையும்
(மற்ற எல்லா அறங்களையும் செய்வதற்கு காரணமான தனக்கும் உண்டான அறச்செயல்களை செய்து கொள்ளவேண்டியதால்
தன்னையும் என்று சேர்த்துச் சொன்னது_
என்றாங்கு ஐம்புலத்தாறு – எனப்படும் ஐவரிடத்திக்கும்
அவரவர்குண்டான அறஞ்சார்ந்த கடமைகளை அங்கே
ஓம்பல் – தவறாமல், வழுவாமல் செய்தல்
தலை – இன்றியமையாதது,
முதன்மையானது.
சென்ற குறளிலே சொன்னது போல், இக்குறளிலும், துறந்தார்,
வறியவர்கள், மாணவப்பருவத்தினர், மற்றும் கானேகும் முதியவயதினர் இவர்களைத் தவிர்த்து,
ஆனால், முன் குறளில் சொன்ன இறந்த முன்னோர்களோடு சேர்த்து, இன்னும் நால்வருக்குச் செய்யும்
அவரவருக்குண்டான அறவழிக்கடமைகளைச் செய்வதே இல்லறத்தாருக்குத் தலையாய கடமை என்று கூறியுள்ளார்
வள்ளுவர்.
இக்குறளில் சொல்லும் கருத்து இதுதான்: உலகை நீங்கி
தென்புலத்தானாகிய இயமனால் அழைத்துச் செல்லப்பட்ட (இறந்துபட்ட) முன்னோர்கள், இல்லறத்தோர்
வழிபடும் தெய்வம், இல்லறத்தினரின் விருந்தினர், சுற்றத்தினர், மற்று தாம் உட்பட, எல்லோரையும்
அவரவரிடத்தில் ஆற்றவேண்டிய அறவழிச் செயல்களை, கடமைகளை தவறாமல், முறைப்படி நடத்துதலே
இல்லறத்தோரின் முதலாய, முக்கியமான கடமை என்கிறார் வள்ளுவர். ஒருவன் தன்னை அறவழிகளில்
நிறுத்திக்கொள்ளாவிடில், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அறவழிக் கடமைகளை ஆற்றாமுடியாது
என்பதல், “தான்” என்று இல்லறத்தோரையும் சேர்த்து சொல்லப்பட்டது.
என்னிடமுள்ள கி.வா.ஜ அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சி
உரை பதிப்பில், மேற்கோள் விளக்கமாக, இவ்வாறு கூறியுள்ளார். ‘இல்லறமென்பது கற்புடைய
மனைவியோடு, இல்லின் கண் இருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னை ஒழிந்த மூவர்க்கும்,
துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும்,
சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலம் காத்தல் முதலியனவும்,
அருளும் அன்பும் உடையன ஆதலும், பிறவும்’ (சிலப்பதிகாரம் 14:11, உரை). இதை அடியார்க்கு
நல்லார் உரையிலிருந்து மேற்கோளாகக் காட்டியிருப்பார்.
சொல்லும் விதத்திலே உள்ள வேற்றுமைகள்:
- முதல் குறளிலே சொல்லப்பட்ட மூவருக்கும் அவரவர் கடமையாற்ற இல்வாழ்வோர் துணையாவர் என்றார்.
- இரண்டாம் குறளிலே சொல்லப்பட்ட மூவருக்கும் (துறந்தவர் பொது முதலுக்கும் இரண்டுக்குமிடையே), இல்வாழ்வோரே என்று “ஏகார” விகுதியின்வழியாக, இல்லறத்தோரே முழுப் பொறுப்பு என்கிறார்.
- மூன்றாம் குறளில், ஐவரைக்கூறி ( இறந்தோர் பொது இரண்டுக்கும் மூன்றுக்குமிடையே) இவர்களை அவரவர் அறவழியிலெ செலுத்தல், இல்லறத்தாரின் முதற்கடமை என்று வலியுறுத்துகிறார்.
இது, அதிகாரத்திற்கு பத்துப்பாட்டு, இரண்டேயடி குறள்
என்கிற கட்டுப்பாடுகளினால் எழுந்த தவிர்க்கமுடியாத சிக்கலாயிருந்திருக்க வேண்டும்.
இன்றெனது குறள்:
முன்னோர் இறைவிருந்து
சுற்றந்தான் என்றைந்தும்
நன்னோன் பெனக்கொளல் நன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam