ஜூன் 01, 2012

குறளின் குரல் - 52


1st June, 2012
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
                                (குறள் 42: இல்வாழ்க்கை அதிகாரம்)

Transliteration::

thurandArkkum thuvvAdhavarkkum iRandArkkum
ilvAzhvAn enbAn thuNai

thurandArkkum – for those who renounce and go into ascetic path,
thuvvAdhavarkkum  - for those who are very poor
iRandArkkum -  and for those who have passed away
ilvAzhvAn – people of family life
enbAn -  this word stresses the ones who live by the code of family life, not everyone who just lives in a family
thuNai – is a support

Whether or not the thoughts expressed in here, through these couplets of vaLLuvar, are acceptable or not, in today’s societal context, he wrote what he wrote for the society of his days. Those who live the family life with all the stipulated governing principles of such a life, are the support for the renounced, and must do whatever they can, to support them, because the renounced ascetics pray and live for the benefit of the society.

The poor must also be supported with food to eat, place to live and clothes to wear by the people of the society which is predominated by the families. This is for the same purpose, every village and city had a place where the food would be served free for everyone, who could not afford a meal. As days passed by, those places became the dwelling abode for slackers and lazybones, which is a different story.  The collective compassiona and benevolence of the society are the best cure for poverty in a society.

The last rites are also the bounden duties of the people of families. To think and cherish the lives of or passed ones, are the tools to lead our lives, the unbroken chain of life form on this earth, properly and an opportunity to be thankful. As will be expressed in a later chapter, “there is no excuse for someone who forgets the favors done by somebody”.

Parimelazhagar, the most appreciated commentator of “Thirukkural” has used a phrase, “to get rid of their sins” when he gives reasoning as to why people of family life should serve the renounced ones. There can’t be a grain of doubt about the the duty of serving the renounced people for they sacrifice and pray for the overall well being of the society. When vaLLuvar has used a word “enbAn” which definitively says about the family people that live by the ethical code stipulated for them, where is the question of them being sinful? Also, a support done with an expectation of a return becomes the seed of sins. Hence the word usage of “pAvamozhiya” (unless a thamizh commentary and usage are understood, this is difficult to follow) does not fit the context of that commentary and it is best to leave that word and read the commentary.

Another doubt about this kuraL is this. In the previous verse he talked about the students, the retired people, and the renounced, as the three groups of the people that people of family life should support to help them stand in their path resolute.  In this verse, he is talking about the support for resolute, poor and the people that have passed away and the societal obligation to support them directly. Why is that he had to mention “renounced” people in both? Why could n’t he combine everyone in the same verse? Is it because of the meter he chose to write that he could not accommodate all of them in one single trip and had to make multiple trips? It is even more evident that could be the case when you read the next verse, where is going to mention again “passed away” people along with four more categories. Something to think about!

For renounced, poor and that pass away from the world
From people of family of virtuous living traits, come uphold

தமிழிலே:

துறந்தார்க்கும் – துறவறம் பூண்டவர்களுக்கும்
துவ்வாதவர்க்கும் – வறுமையிலே உழல்பவர்களுக்கும்
இறந்தார்க்கும் – உலகை நீங்கினாருக்கும்
இல்வாழ்வான் – இல்லறத்தை கடைபிடிப்பவர்
என்பான் – அதுவும் அதனுடைய இயல்பிலேயே (இல்லற தருமத்தை முழுமையாக கடைபிடிப்பவர்கள்)
துணை - துணையாகுவர்

குறளின் கருத்துக்கள் இன்றைய சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையோ, அல்லவோ, அவருடைய காலத்தில் அவர் நோக்கியதையே எழுதியிருப்பதாகக் கொள்ளவேண்டும்.  இல்வாழ்க்கையை அதற்குரிய பண்பு நலன்களோடு வாழ்பவர்கள், அறம் நிலைக்க, தவமியற்றும் துறவிகளுக்கு அவர்கள் துறவு நிலைக்கு துணை நிற்கும்படியாக வேண்டுவன செய்தல் வேண்டும்.

வறியவர்களுக்காக, உண்ணும் உணவு, இருக்குமிடம், உடுக்க உடை போன்றவற்றை சமுதாயத்தினரே தங்கள் அறச்செயல்களில் ஒன்றாகச் செய்தல் வேண்டும். முந்தைய நாட்களில் அன்ன சத்திரங்கள் ஆயிரம் நாட்டியதும் அதனால்தான். பின்னாளில், பெரும்பாலான சத்திரங்கள் சோம்பேறி மடங்களாகப் போனதும் உண்மைதான். அது தனி கதை! சமுதாயத்தினரின் ஒருங்கிணைந்த வள்ளன்மையே, வறுமையை முழுதாக ஒழிக்கக்கூடிய வழி!

இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமக்கடன்களும் இல்லறத்தாரின் கடமைகள்தான். முன்னோர்களை, அவர்கள் வாழ்வை நாம் நினைத்துப் பார்த்துப் பெருமைகொள்ள, நம்மை செம்மைபடுத்திக்கொள்ள, முறியாத உயிர்சங்கிலியின் தொடர்பாக இருந்தமைக்காக நன்றியறிதலை நாம் ஆண்டுதோறும் தெரிவித்துக்கொள்ளச் செய்வதே அவர்களுக்குச் செய்யும் நீர்கடன்கள். பின்னர் வரும் நன்றியறிதல் அதிகாரத்தில் சொல்லப்போவது போல, “எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”, என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு செய்யவேண்டிய கடமையே நீர்க்கடன்கள்.

பரிமேலழகர் உரையில் “துறந்தார்க்குப் பாவமொழிய அவர் களைக்கணாய் நின்று வேண்டுவன செய்தலானும்” என்று வருகிறது. துறந்தார்க்கு சமுதாயம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. இல்வாழ்வான் “என்பான்” ஏற்கனவே இல்லறத்தை நல்லறமாகக் கடைப்பிடிப்பவர்தாம் என்பதையே “என்பான்” என்கிற சொல் தெரிவிக்கிறது. அவர்கள் செய்திருக்கக்கூடிய பாவம் என்ன? அது ஒழியவேண்டி அவர்கள் துறந்தார்க்கு உதவவேண்டுமென்பது, பொருந்திவரவில்லை. அதுவும் தவிர, பயன்கருதிச் செய்யும் உதவியே பாவத்தின் ஊற்றுக்கண்ணாகி விடும் என்பதால், இந்த உரையில், “பாவமொழிய” என்பதை நீக்கிவிட்டு படிப்பதே சிறப்பாக இருக்கும்.

இன்னொரு ஐயமும் எழுகிறது!  முந்தைய குறளில் கூறிய மூவரில் துறவியரை, இக்குறளிலும் கூறியிருப்பது எதனால்? மாணவர்கள், கானேகும் முதுகுலத்தார், துறவிகள் இவர்கள் தங்கள் நெறி நின்று செயலாற்ற உறுதுணையாக இருப்பது வேறு, இங்கு சமுதாயத்தினரே இங்கே சொன்ன மூவருக்கும் – துறவிகள், வறியவர்கள், இறந்தவர்கள், நேரடியாக உதவுவது வேறு என்று பொருள் கொண்டாலும், துறவிகளை இரண்டு குறள்களிலும் சேர்த்தது இடிக்கிறதுஅந்த மூன்று, இப்போதைய மூன்று, பின்வரும் குறளில் சொல்லப்போகிற ஐந்து என்று, சிறிது குழப்பந்தான்!  இது எடுத்துக்கொண்ட குறள் வடிவத்தினால் ஏற்பட்ட குழப்பமா, அன்றி சொன்னதையே திரும்பச் சொன்ன, சற்றே மாற்றிச் சொன்ன குற்றமா?  சிந்திக்க வேண்டிய பொருள்தான்!

இன்றெனது குறள்:
பற்றறுத்தார் ஊணிலார் இவ்வுலகை இற்றார்தம்
பற்றுணையே இல்வாழ்வா ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...