ஜூன் 04, 2012

குறளின் குரல் - 55

4th June, 2012


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
                                (குறள் 45: இல்வாழ்க்கை அதிகாரம்)

Transliteration:

Anbum aRanum uDaiththAyin ilvAzhkkai
paNbum payanum adhu

Anbum  -  Having love, being affectionate,
aRanum  -  (and ) being virtuous
uDaiththAyin  - if both  are there in someone (anyone)
ilvAzhkkai – the family life’s
paNbum  -  character, proper trait, quality
payanum – utility, usefulness
adhu – is that

If the attributes of love, affection and virtuous living are there in a family, then it is the abode of character;  the attributes are the real purpose and use for such a family.  Parimelazhagar, the commentator mentions that the love as one for the wife in a family, which seems one sided and does not completely fit the concept of a family.

Great poetess Auvayyar has said “kAdal iruvar karuthorumiththu Adharavu pattadhe inbam”, (“காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” ) which simply means, when two people are in love and are in support to each other, that is the definition of perfect bliss and happiness. I am sure she did not mean it only for conjugal bliss, but the familial bliss. Echoing the same sentiment, we should take it as mutual affection between the partners of life and in general within the family.

We can make sense out of this verse in two ways. First, it could be simply that 'the combined effect of love, and virtue in a family' result in the character and the usefulness in the family.  Second interpretation could be consequence based. The love results in character and the virtue result in the utility in a family life.

Though we often say, living a virtuous life and doing virtuous things should be without  expectation, and for the sake doing the right thing only,  the books on ethics often underline and stress the real purpose of being so to impactfully penetrate the minds of the people.

“Having love for all, and virtuous traits in the households
  Define the character and the usefulness by plenty loads”

அன்பும் -  நேசம், பிரியம், பாசம், நட்பு இவையும்
அறனும் – ஒழுக்க நெறியும்
உடைத்தாயின் – ஒருவருக்கு இருக்குமாயின்
இல்வாழ்க்கை – இல்லற வாழ்வின்
பண்பும் – குணமும், நெறியும்
பயனும் – மதிப்பு, பயன்பாடு, செயல்விளைவு, மற்றும் உதவியும்
அது - அதுவே

தன் இல்லம் மக்கள், சுற்றமென இல்லறத்தில் பாசம், நேசம், நட்பு, மற்றும் ஒழுக்க நெறி இருக்குமாயின், அவ்வில்லறத்தின், தன்மை, குணம் மற்றும் மதிப்போடு கூடிய பயன்பாடு அதுவே. இதுவே இக்குறள் சொல்லவரும் கருத்து.

பரிமேலழகர் இல்வாழ்க்கைத் துணைவிமேல் செய்யத்தகும் அன்பு என்பார்.  ஔவையார், “காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” என்று சொல்லியிருப்பார். அது வெறும் உடல் சார்ந்த இன்பத்திற்காக மட்டுமல்ல, அவர்கள் கருத்து ஒருமித்து, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டியதை வலியுறுத்தி சொல்லப்பட்டது.

ஆண்பெண் இருவருக்கும் இல்லறத்தில் பொதுவான, சரிபாதியான பங்கு இருப்பதை உணர்ந்தவர்கள் எல்லோரும், பரிமேலழகர் சொன்னதை,  “இல்வாழ்க்கைத் துணை” என்றே கொள்வார்கள்.  இக்குறளை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். மொத்தமாக அன்பு, அறன் இவை இருக்கும் இல்லங்களிலே, பண்பும், பயனும் துலங்கும் என்றும் கொள்ளலாம்;  இல்லையெனில் அன்பின் காரணம் பற்றி பண்பும், அறத்தின் காரணம் பற்றி பயனும் உண்டாகும் என்றும் கொள்ளலாம்.

பயன்கருதி செய்வது அறமில்லையென்றாலும், அறநூல்கள், அறவாழ்கையின் பயனாக நல்லவற்றைச் சொல்லி, அறத்தை மேற்கொள்ள ஊக்கும் விதமாகவே சொல்லும்.

இன்றெனது குறள்:
அன்பினால் பண்பும் அறத்தின் வருபயனும்
இன்பமாம் இல்லறத் தோற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...