ஏப்ரல் 05, 2012

குறளின் குரல் - 3

Twin Tenets for life (Part 2):

Continuing with where I left off yesterday, the 2nd verse I was referring to is here.


Originally posted on 4th April, 2012

22nd June 2013

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
                                  (குறள் 423: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:

eppoRuL yARyARvAyk kETpinum apporuL
meypporuL kaNba dhaRivu

epporuL – whatever be the statement/assertion/accusation made on a subject
yAr yAr vAi kEtpinum – regardless who says it or how convincing/truthful it appears
apporuL – that subject’s (statement/assertion, sometimes accusations too!)
meipOrul – the true value ( the truth and personal motivations, biases behind statement/assertion/accusation must be considered)
kAnpadh(u) – inquiring, seeking, researching, understanding,realizing
aRivu – is the true wisdom in deciding/doing appropriate course of action (assumed meaning as this kuraL is under “arasiyal” - code of governance)

Wisdom is in deep inquiry of words and intentions
Not in trusting the lips that may utter for deception”

As I already mentioned, this verse seems to be more in the societal context than at the personal level. Though seems applicable and valid for everyone, it is more so for the persons that are in the position of power.

Remember the plight and fate of the Pandya king Neduncheziyan, in the story of anklet (Silappadikaaram)? Blind faith and following are not the ways of wise, but the deep inquiry and considered actions are!

Regardless how believable a source may be, still one must get all the facts straight and make a prudent decision. The men and women of power, must not only be just and wise, but appear to be so too.

When the questioning mind of Nakkeera could stand up against Lord Shiva to clarify the doubts, the position he took was, even if it was the GOD SUPREME, it must be answerable to genuine doubts and cannot take a stance from a high pedestal.

The same quote of “kaNNAL kANbadhum poi, kAdhAl kEtpadhu poI, thIra visArippadE mei” (கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!) is relevant ad applicable here more in the context of external inquiry rather than internal inquiry.

தமிழிலே:

எப்பொருள்சொல்லப்படும் எந்தவொரு கூற்றையும்
யார்யார்வாய்க் கேட்பினும் - அது எவர் வாயிலிருந்து கேட்கப்பட்டாலும்
அப்பொருள்
 - அக்கூற்றின்
மெய்ப்பொருள் - உண்மைத்தன்மையை (எந்தவித சுயநல நோக்கும் இல்லாத தன்மையை
காண்பது - கண்டு அறிவது
அறிவு - உண்மையான அறிவு ஆகும்

இக்குறளுக்கான விளக்க உரையை முன்பே ( ஏப்ரல் 4, 2012) எழுதிவிட்டதால், இப்போது தமிழ் உரையைமட்டும் சேர்த்துள்ளேன். இக்குறள் ஒரு தனிமனித ஒழுக்க நிலையிலிருந்து எழுதப்படாமல், ஓர் ஆட்சியாளருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியையொட்டி எழுதப்பட்டதாகவே எண்ணவேண்டும்.

எவ்வளவுதான் நம்பிக்கைக்குரிய மூலம் என்றாலும், ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர், எல்லா உண்மைகளையும் சேகரித்து அறிந்துகொண்டு, ஆய்ந்து, தகுந்த முடிவினை எடுக்கவேண்டும். நேர்மையும், அறிவாண்மையும் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது, உண்மையிலே அகத்திலும் கொண்டிருக்கவேண்டியவர்கள் அதிகாரத்திலும், ஆளும் பொறுப்பும் உள்ளவர்கள்.

நக்கீரனின் புலமையும், அறிவும், உண்மையும் சிவபெருமானின் கருத்தையே கேள்விகேட்க வைத்தன. அவர் கடவுளர்களின் முழுமுதலாயவர் என்றவரே கொண்டிருந்தாலும். “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்” என்னும் கூற்றும் இதனாலேயே வந்தது. பொற்கொல்லன் சொல்லைக்கேட்டு ஆராயாமல் உத்தரவிட்ட பாண்டியன் அறிவாண்மை மிக்கவனாயினும், ஒரு சிலமணித்துளிகளில், தவறியதால், கோவலன் மாண்டது, கண்ணகி மதுரையை எரித்ததும் நாமறிவோம்.

“உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்” என்று சீவக சிந்தாமணியும், “நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்” என்று நற்றிணைப்பாடல் வலியுறுத்துவதும் இதைத்தான்.

சொல்பவரின் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்தாலும் சொல்லப்படும் பொருளின் தரமே கொள்ளப்படவேண்டும் என்றும் பரிமேலழகர் கூறுகிறார்.

இன்றெனது குறள்:

சொல்பவர் வாய்மொழி சோதித் தறிதலன்றி
சொல்லின் தரமறிவ தேது?

Solbavar vAimozhi sOdhith thaRidhalanRi
Sollin tharamaRiva dhEdhu?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...