April 3rd 2012,
Twin Tenets for life (Part 1):
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(குறள் 355: மெய்யுணர்தல்
அதிகாரம்)
Transliteration:
eppoRuL
yARyARvAyk kETpinum apporuL
meypporuL
kaNba dhaRivu
epporuL
– whatever be the subject (not to be construed as objects)
eththanmaiththaayinum
– regardless how it appeals or appears to our senses
apporuL
– that subject’s
meipOrul
– the true value ( the true origin of the concept of subject and the purposes
there in)
kAnpadh(u)
– seeking, researching, realizing
aRivu
– is the true awareness, wisdom, jnana (ஞானம்)
The
model code for true living is captured in essence, by the two verses in
ThirukkuraL. Though they are seemingly same, they are from different chapters
belonging to different main headings of Dharma (அறம்) and Artha (பொருள்).
The first verse talks about “seeking” at a personal level, mostly for personal
elevation and understanding the true nature of things around us. This kuraL
comes under, the sub-heading of “thuravu” (renouncing).
At
surface level, it is same as “All that glitters is not gold”. Regardless of how
things appear to one’s eyes, only truthful seeking will reveal the true being.
Here the word “poruL” (பொருள்), does not merely refer to the
objects we visualize; It does refer to the concepts, theological and otherwise
that we are fed with from the time, we are able to assimilate knowledge. The
main purpose is to elevate the “self” as in “உள் ஒளி அடைதல்” (self realization). It does not
debase the passed on knowledge but encourages, “Self will” to examine
everything given to us – the essence of seeking. Anything that comes close to
that is seeking the guidance of knowledgeable ones, and is talked about in
“PeriyOrai thunai kOdal” (பெரியோரைத் துணைக் கோடல்).
As
the popular tamil adage goes, “kaNNAL kANbadhum poi, kAdhAl kEtpadhu poI, thIra
visArippadE mei”
The second tenet is from
Arivudamai chapter under (porut pAL – Artha part). Can you guess what that
kurAL is?
“Wisdom
in any subject is in seeking the true nature
Not
in what our eyes capture or mind’s conjecture”
தமிழிலே:
எப்பொருள் - எந்த ஒரு பொருளைச் சொல்லும் கருத்தாகிலும்
எத்தன்மைத்தாயினும் - அது எந்த உருவகத்தில் நம்மறிவுக்குப்
புலப்பட்டாலும்
அப்பொருள் - அப்பொருள் சொல்லும்
கருத்தின்
மெய்ப்பொருள் - உண்மைத்தன்மையும் (நிலைத்தன்மை)
காண்பது - ஆராய்வது, அறிந்துகொள்வது, உணர்ந்து
கொள்வது
அறிவு - உண்மையான அறிவு, ஞானம்
நல்வாழ்க்கைக்கு இரண்டு அடிப்படைக்
கோட்பாடுகளைத் திருக்குறளிலிருந்து எல்லோரும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றே போல் தோன்றினாலும்,
அவை இரண்டு வெவ்வேறு “பால்”களில் உள்ள அதிகாரங்களில் சொல்லப்படுகின்றன. இக்குறள் அறத்துப்பாலின்
மெய்யுணர்தல் அதிகாரத்தில் வருகின்ற ஒன்று. பின்பு பார்க்கப்போகும் குறள் பொருட்பாலின்கண்
வருவது. இக்குறள் ஒரு தனிமனிதனைச் சார்ந்து
அவனுக்குத் தேவையானத் “தேடலை” சொல்கிறது,
தனிமனிதனின் ஆத்ம உயர்வுக்காக!
மேம்போக்காகப் படித்தால், இது “மின்னுவதெல்லாம்
பொன்னல்ல” என்ற பழமொழியைச் சொல்லுகிறவொன்று. ஒரு பொருள் (கருத்துக்கூட) ஒளிரும் பொருளாய்
தோற்றமளித்தாளும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிவதே அறநெறியும் துறவோர்க்கு அழகுமாம்.
பொருளைக் கண்ணால் காண்பதுவும், கருத்தாய் கேட்பதுவும் என்று கொள்ளலே இக்குறளுக்குப்
பொருந்தும்.
இக்குறள் வலியுறுத்துவதும், “உள்ளொளி”
பெருக்கி உயர்வை அடைதலைத்தான். இக்கருத்து நமக்கு வாழையடி வாழையாக வழங்கப்பட்டுவந்திருக்கிற
அறக்கோட்பாடுகளுக்கும், மற்ற கருத்துக்களையும் எடுத்துக் கொள்வதைத் தடுக்கவில்லை. எல்லாவற்றையுமே
ஆராயும் மனவுறுதியைத்தான் வலியுறுத்துகிறது. அப்போது ஒரு குருவைச் சார்ந்து பெறும் அறிவுக்குக்கூட
இது பொருந்துமா என்கிற கேள்வி எழும். பெரியோரைத்
துணைக்கோடல் அதிகாரத்தில் அதுவும் கூறப்படுகிறது.
இக்குறளின் அடித்தளக் கருத்து இதுதான்.
“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!”
இன்றெனது குறள்:
கண்மூடி யாயிராமே கண்மூடி சிந்தித்தால்
கண்ணுறுவாய் உண்மைப் பொருள்
கண்ணுறுவாய் உண்மைப் பொருள்
kaNmUDi
yAyirAmE kaNmUDi sindhiththAl
kaNNuRuvAi
uNmaip poruL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam