तन्वानं निजकेलिसौधसरणिं नैसर्गिकीणां गिरां
केदारं कविमल्लसूक्तिलहरीसस्यश्रियां शाश्वतम् ।
अंहोवञ्चनचुञ्चु किंचन भजे काञ्चीपुरीमण्डनं
पर्यायच्छवि पाकशासनमणेः पौष्पेषवं पौरुषम् ॥ १६॥
தன்வானம் நிஜகேலி ஸௌத⁴ஸரணிம் நைஸர்கி³கீணாம் கி³ராம்
கேதா³ரம் கவிமல்லஸூக்தி லஹரீ
ஸஸ்ய ஶ்ரியாம் ஶாஶ்வதம் ।
அம்ஹோ வஞ்சன சுஞ்சு கிம்சந ப⁴ஜே காஞ்சீபுரீமண்ட³னம்
பர்யாயச்ச²வி பாகஶாஸனமணே: பௌஷ்பேஷவம் பௌருஷம் ॥ 16॥
சுயம்புவாம் மறைவாக்குகளை தன் விளையாடலுக்காய்
மேன்மாடமாய் கொண்டதும், உயர் கவிஞர்களின், கவிதைப் பயிருக்கு உற்ற வயலானதும், பாவங்களைப்
வஞ்சிப்பதில் தேர்ந்ததும் இந்திர நீலமணிக்கு நிகரான மேனி ஒளியுள்ளதும், மலர்பாணனான,
மன்மதனுடைய பெருமை போன்றதுமான காஞ்சியின் அணியாக உள்ள ஒரு பொருளைச் சரணமடைகின்றேன்.
மறைவாக் குகளைதம் மாலீலைக் காயுயர் மாடமாய்கொள்,
திறக்கவி ஞர்கள்தம் தேன்கவிக் கூழ்க்கேற்றச் சேடையாகும்,
அறக்கடை நீக்கும், அரிமணி மேனிகொள், அங்கசனின்
பிறங்கலாம் காஞ்சியின் பேரணித் தாள்யான் பிடித்தனனே!
கூழ்-பயிர்; சேடை-நீர் கட்டப்பெற்ற
வயல்; அறக்கடை-பாவம்; அரிமணி-இந்திரமணி; அங்கசன்-இந்திரன்; பிறங்கல்-பெருமை; பேரணி- பெருமைவாய்ந்த ஒப்பனை/அலங்காரம்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மறை வாக்குகளை தம் மாலீலைக்காய் உயர்மாடமாய்
கொள், திறக் கவிஞர்கள்தம் தேன்கவிக் கூழ்க்கேற்றச் சேடையாகும், அறக்கடை நீக்கும், அரிமணி
மேனிகொள், அங்கசனின் பிறங்கலாம்
காஞ்சியின் பேர் அணித்தாள் யான் பிடித்தனனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam