டிசம்பர் 25, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 98

शिवे स्मवित्पाशै: शशिशकलचूडप्रियतमे
शनैर्गत्यागत्या जितसुरवरेभे गिरिसुते
यतन्ते सन्तस्ते चरणनलिनालानयुगले
सदा बद्धं चित्तप्रमदकरियूथं दृढतरम् ९८॥

ிவே ஸம்வித்³ பாஶை: ஶஶி கலசூட³ப்ரிய தமே
னைர் க³த்யாக³த்யா ஜித ஸுர வரேபே கி³ரிஸுதே
யதந்தே ஸந்தஸ்தே சரண நலினாலான யுக³லே
ஸதா³³த்³ம் சித்த ப்ரமத³ கரி யூத²ம் த்³ருʼதரம் 98

மங்கள உருவே! சந்திரப் பிறைசூடியவர்க்கு மிகவும் இனியாளே! மலைமகளே! மென்னடையில் ஐராவதத்தையும் வெல்லுபவளே! உன் பாதத் தாமரைகளாம் கட்டுத்தறி இரண்டில் மனமாம் மதயானைகளை மிகவும் உறுதியாகப் ஞானக் கயிற்றால் கட்டுவதற்கு நல்லோர் என்றும் முயல்கிறார்கள்.

மங்கள மாய மலைமக ளேமதி வைத்தவருட்
தங்கியே! ஐராவ தத்தை நடையில் சயித்தவளே!
பங்கயப் பாதயீர் பற்றுக்கோ டில்மதப் பண்டிமனம்
தங்கஞா னப்பாரி தன்னால்நல் லோரொற்ற தாளுவரே!


பற்றுக்கோடு - கட்டுந்தறி; பண்டி-யானை; பாரி-கட்டுங்கயிறு; ஒற்ற-கட்டிட; தாளுதல்-முயற்சி செய்தல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...