டிசம்பர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 101

पुरा मारारातिः पुरमजयदम्ब स्तवशतैः
प्रसन्नायां सत्यां[1] त्वयि तुहिनशैलेन्द्रतनये
अतस्ते [2] कामाक्षि स्फुरतु तरसा कालसमये
समायाते मातर्मम मनसि पादाब्जयुगलम् १०१॥

புரா மாராராதி: புரமஜயத³ம்ப³ ஸ்தவதை:
ப்ரஸன்னாயாம் ஸத்யாம்1 த்வயி துஹின ைலேந்த்³ர தனயே
அதஸ்தே2 காமாக்ஷி ஸ்பு²ரது தரஸா கால ஸமயே
ஸமாயாதே மாதர்மம மனஸி பாதா³ப்³ஜ யுக³லம் 101

மலையரசன் மகளே காமாக்ஷீ! தாயே! பண்டு எப்பாதங்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான துதிகளால் நீ மகிழ்ந்ததால், மன்மதனை எரித்த சிவனார் முப்புரங்களையும் வென்றாரோ, சிறந்த அவ்விரு தாமரையன்ன பாதங்களும் காலன் வருங்காலத்தில் என்மனதில் நன்றாக ஒளிரட்டும்

பண்டெந்தப் பாதங்கள் பற்றிநூற் றாய்துதி பாடிடநீ
கண்ட மகிழ்வால் கனலுண முப்புரம் காமவைரி
கொண்டாரோ அவ்விரு கூர்கயப் பாதமும் கூற்றுறுங்கால்
அண்ட மலைமகள் அன்னைகா மாட்சீ அருளொளிர்ந்தே!

பண்டு-முன்பொருகாலம்; கனலுண-எரியுண்ண; காமவைரி-சிவனார்; கூர்-சிறந்த; கயம்-தாமரை; கூற்று-எமன்;

நூற்றூக்கணக்கில் துதிபாடியதால் சிவபெருமானே திரிபுரம் எரிக்கும் திறனுற்றதுபோல், யானும் நூறுபாடல்களால் உன்பாதங்களைத் துதித்துள்ளேன்; காலன் வருங்காலத்தில் என்னுள்ளத்தில் நீயே ஒளிர்ந்திருப்பாயாக என்று வேண்டுகிறார் மூகர்.


[1] यस्य​;  யஸ்ய
[2] परं तत्  ; பரம் தத் என்றும் பாடம் உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...